அந்த நிறுவனத்தின் காரா? அப்ப நிறுத்து! காவலர்களின் வினோத நடவடிக்கையால் 'ஸ்டண்' ஆன மக்கள்!
இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). சுமார் 22 வருட இடைவெளிக்கு பின்னர், கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி, டாடா சியரா கார், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய டாடா சியரா கார் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில், புதிய டாடா சியரா காருக்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய டாடா சியரா காருக்கு, முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள், கடந்த டிசம்பர் 16ம் தேதி தொடங்கப்பட்டன.

முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், புதிய டாடா சியரா காரை புக்கிங் செய்து விட்டனர். புதிய டாடா சியரா காருக்கு, இந்தியர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது? என்பதற்கு, இந்த முன்பதிவு எண்ணிக்கை ஒரு உதாரணம் மட்டுமே.
இந்த வரிசையில், டாடா சியரா கார் மீது, இந்திய வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிக்காட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பொதுவாக காவல் துறை அதிகாரிகள், வாகனங்களை நிறுத்துகிறார்கள் என்றால், அதற்கு 2 காரணங்கள் மட்டுமே இருக்கும்.

ஒன்று அவர்கள் ஆவணங்களை பரிசோதிக்கலாம். அல்லது போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பான விஷயங்களுக்காக வாகனங்களை நிறுத்தி அவர்கள் அபராதம் விதிப்பார்கள். ஆனால் சண்டிகரில் (Chandigarh), முற்றிலும் வித்தியாசமான ஒரு காரணத்திற்காக, 2 காவலர்கள், புதிய டாடா சியரா காரை தற்போது நிறுத்தியுள்ளனர்.
டாடா சியரா கார் எப்படி உள்ளது? என்பதை பார்வையிட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் காரை நிறுத்தியுள்ளனர். மேலும் காரின் டிரைவர் நிறுத்தியவுடன், உள்ளே சென்று அதன் இன்டீரியர் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது? என்பதையும் அவர்கள் பார்வையிட்டுள்ளனர். tv1indialive இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஆனால் இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விளம்பர யுக்தி என நெட்டிசன்கள் ஒரு சிலர் 'கமெண்ட்' செய்து வருகின்றனர். புதிய டாடா சியரா காரின் டெலிவரி (Delivery) பணிகள், வரும் ஜனவரி 15ம் தேதியில் இருந்துதான் தொடங்குகின்றன. அதற்குள்ளாக இந்த நபருக்கு எப்படி புதிய டாடா சியரா கிடைத்தது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனவே இது விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்பது நெட்டிசன்கள் ஒரு சிலரின் சந்தேகம். ஆனால் இது முற்றிலும் உண்மை சம்பவமாகவும் இருக்கலாம். டெலிவரி தொடங்குவதற்கு முன்பாகவே இந்த நபருக்கு, புதிய டாடா சியரா எப்படி கிடைத்தது? என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் வாகனங்களை காவலர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பது இது முதல் முறை கிடையாது.
கடந்த காலங்களில் மிகவும் விலை உயர்ந்த பைக்குகள் மற்றும் கார்களை, காவல் துறை அதிகாரிகள் ஆர்வத்துடன் பார்வையிட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. அப்போது அவர்கள் அந்த வாகனங்கள் உடன் செல்ஃபி எடுத்து கொண்டது மட்டுமல்லாது, அந்த வாகனங்களை ஓட்டியும் பார்த்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் புதிய டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், புதிய டாடா சியரா காருக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








