2030-க்குள் பிஎஸ்4 வாகனங்களுக்குத் தடை? Delhi-NCR-ல் கார், பைக் உரிமையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் வடமத்திய பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க, பழைய வாகனங்களைப் படிப்படியாகப் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான புதிய பரிந்துரைகள் வெளியாகியுள்ளன. இதன்படி, பிஎஸ்4 மாசு உமிழ்வு தரநிலையைக் கொண்ட வாகனங்களை 2030-க்குள் படிப்படியாக நீக்க வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், கார், பைக், ஸ்கூட்டர் உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

டெல்லி என்சிஆர் பகுதியில் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் கீழ் அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட நிபுணர் குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா தலைமையிலான இந்தக் குழு, வாகனப் பயன்பாட்டை படிப்படியாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அறிக்கையில் முன்வைத்துள்ளது. இந்தப் பரிந்துரையின்படி, பிஎஸ்1, பிஎஸ்2 மற்றும் பிஎஸ்3 மாசு உமிழ்வு தரநிலைகளைக் கொண்ட வாகனங்களை உடனடியாகப் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். பிஎஸ்4 வாகனங்களை 2030ம் ஆண்டுக்குள் நீக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Delhi Vehicle Pollution

2030-க்குள் வாகனங்களை முழுமையாக நீக்குவது நீண்டகாலத் திட்டமாக இருந்தாலும், அதற்கு முன்பே கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, நடப்பு 2026ம் ஆண்டின் குளிர்காலத்தில் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை பிஎஸ்4 வாகனங்களுக்குத் தற்காலிகத் தடை விதிப்பதற்கான முன்னோட்டத் திட்டத்தைச் செயல்படுத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இதை விரிவுபடுத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்தில் டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியப் பகுதிகளில் பிஎஸ்4 வாகனங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் எந்தெந்த வாகனங்களுக்கு, எந்தப் பகுதிகளில், என்னென்ன விதிவிலக்குகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது இறுதி முடிவைப் பொறுத்தே அமையும்.

Also Read

இந்தத் திட்டம் பிஎஸ்4 வாகனங்களுடன் முடிவடையவில்லை. பிஎஸ்6 தரநிலையைக் கொண்ட இருசக்கர வாகனங்களை 2035ம் ஆண்டுக்குள்ளும், நான்கு சக்கர வாகனங்களை 2040ம் ஆண்டுக்குள்ளும் படிப்படியாக நீக்கவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், 2031 ஜனவரி 1 முதல் புதிய பெட்ரோல், டீசல் தனியார் கார்களின் பதிவை நிறுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளின் முக்கிய நோக்கம், வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையைக் குறைத்து காற்றின் தரத்தை மேம்படுத்துவதாகும். இதற்காக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், அவற்றை வாங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்குதல், வீடுகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

Also Read

இந்த புதிய பரிந்துரைகள் மூலமாக டெல்லி-என்சிஆர் பகுதியில் வாகனங்களை வைத்திருப்போர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பும் வெகுவாக குறையும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே டெல்லி என்சிஆர் பிராந்தியத்தில் டீசல் கார்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, அங்குள்ள வாடிக்கையாளர்கள் படிக்கு பாதி விலையில் கார்களை விற்கும் நிலை உள்ளது. அடுத்து இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டாலும், வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பு மேலும் கணிசமாக வீழ்ச்சியடையும் என்று தெரிகிறது.

வாகன உரிமையாளர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தற்போது பிஎஸ்4 கார் அல்லது பைக்கை வைத்திருப்பவர்கள் உடனடியாக அதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாக இந்தப் பரிந்துரையைப் புரிந்துகொள்ளக் கூடாது. இறுதி உத்தரவு, நடைமுறை விதிகள் மற்றும் அமல்படுத்தப்படும் தேதிகளைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்.

Article Published On: Friday, October 9, 2026, 13:10 [IST]
English summary
Delhi ncr bs4 vehicles phase out 2030 ban cars bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out