ரூ.1.57 கோடியில் அறிமுகமானது BYD டென்ஸா Z9 GT கார்: 1,139 எச்பி பவர், 670 கிமீ ரேஞ்ச்!

சீனாவை சேர்ந்த BYD நிறுவனத்தின் பிரீமியம் பிராண்டான டென்ஸா (Denza) நிறுவனம் இந்தியாவில் இன்று முறைப்படி கால் பதித்துள்ளது. அத்துடன், தனது Z9 GT மின்சார காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தனித்துவமான தோற்றம், அதிநவீன தொழில்நுட்பம், அதீத செயல்திறன் என பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் வந்துள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் இதுவரை அதிகம் பார்க்க முடியாத ஷூட்டிங் பிரேக் (Shooting Brake) என்ற தனித்துவமான வடிவமைப்பில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள், 1,139 எச்பி பவர், 670 கிமீ ரேஞ்ச் என பிரம்மிக்க வைக்கும் அம்சங்களைக் கொண்டுள்ள இந்த காருக்கு ரூ.1.57 கோடி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Denza Z9 GT

புதிய Denza Z9 GT காரின் முன்புறத்தில் நவீன வடிவமைப்புடன் கூடிய எல்இடி விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இதன் பக்கவாட்டு பகுதியில் 21 இன்ச் அலாய் வீல்கள், மஞ்சள் நிற பிரேக் காலிபர்கள் மற்றும் பாடியுடன் இயைந்த அமைப்பிலான கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஸ்போர்ட்டியான தோற்றத்தை இந்த கார் வழங்குகிறது.

உட்புறத்தில் பிரீமியம் லெதர் இருக்கைகள், நான்கு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் டிஜிட்டல் திரைகள் இடம்பெற்றுள்ளன. ஓட்டுனர் இருக்கையை எட்டு விதங்களில் மாற்றிக் கொள்ளும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 17.3 இன்ச் தொடுதிரையும், பயணிகளுக்காக 13.2 இன்ச் திரையும் கொடுக்கப்பட்டுள்ளன.

Also Read

மேலும், இருக்கைகளில் வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பின்புற பயணிகளுக்கும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. காருக்குள் உணவுப் பொருட்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மினி ஃபிரிட்ஜ் வசதியும் இடம்பெற்றுள்ளது. 20 ஸ்பீக்கர்களைக் கொண்ட Devialet ஆடியோ சிஸ்டம் இசை அனுபவத்தை மேம்படுத்தும்.

இந்த காரில் 122.29 kWh திறன் கொண்ட இரண்டாம் தலைமுறை BYD Blade பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஒரு மோட்டாரும், பின்புறத்தில் இரண்டு மோட்டார்களும் என மொத்தம் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை இணைந்து அதிகபட்சமாக 1,139 எச்பி பவரையும், 1,210 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன.

Also Read

இந்த மூன்று மோட்டார்களின் சக்தியும் நான்கு சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கிமீ ஆக இருக்கும்.

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 670 கிமீ வரை பயணிக்க முடியும் என NEDC சான்று தெரிவிக்கிறது. மேலும், 1,500 kW திறன் கொண்ட டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் இந்த கார் ஆதரிக்கிறது. இந்த காரில் பின்புற சக்கரங்களையும் திருப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறுகிய இடங்களில் எளிதாக காரை நிறுத்தவும், பக்கவாட்டில் நகரவும் முடியும். மேலும், 360 டிகிரி காம்பஸ் டர்ன் வசதி மூலம் ஒரே இடத்தில் காரை முழுமையாகத் திருப்ப முடியும். ஏர் சஸ்பென்ஷனும் கூடுதல் வசதியாக உள்ளது.

பாதுகாப்பிற்காக ஒன்பது ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஏபிஎஸ், இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம், தானியங்கி பார்க்கிங் உதவி, ஓட்டுனர் சோர்வடைவதை கண்காணிக்கும் தொழில்நுட்பம் மற்றும் டயர் அழுத்த கண்காணிப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் Denza Z9 GT காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.57 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதற்கு ரூ.10 லட்சம் டோக்கன் தொகையாக செலுத்த வேண்டும். டென்ஸா நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக இந்த கார் விற்பனை செய்யப்படும். முதல்கட்டமாக சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் ஷோரூம்கள் செயல்பட உள்ளன.

Article Published On: Friday, November 13, 2026, 14:43 [IST]
English summary
Denza z9 gt ev launched india price range features specifications
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out