அப்படியே 'டபுள்' ஆன எலெக்ட்ரிக் கார் விற்பனை... இந்திய கார் சந்தையில் நடக்கும் தடாலடி மாற்றம்

இந்தியாவில் மின்சார கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மின்சார கார் விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 94.56 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பரில் மட்டும் 36,108 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 18,559 EV கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதனை ஒப்பிடுகையில், ஒரே ஆண்டில் மின்சார கார் சந்தை கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30,696 மின்சார கார்கள் விற்பனையான நிலையில், செப்டம்பரில் EV கார் விற்பனை 17.63 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் மொத்த கார் விற்பனையில் மின்சார கார்களின் பங்கு 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 5.7 சதவீதமாகவும், ஆகஸ்ட்டில் இது 7.6 சதவீதமாகவும் இருந்தது. இதனால், இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

Tata Punch EV

டாடா மோட்டார்ஸ் முதலிடம்

மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. அந்நிறுவனம் செப்டம்பரில் 14,791 மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 7,369 கார்கள் விற்பனையான நிலையில், தற்போது 101 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

டாடா நிறுவனத்தின் மின்சார கார் விற்பனையை பன்ச் எலெக்ட்ரிக், நெக்ஸான் எலெக்ட்ரிக், டியாகோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாடல்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதில் பன்ச் எலெக்ட்ரிக் கார் கடந்த செப்டம்பர் மாதத்தில் 4,666 கார்கள் விற்பனையாகி நாட்டின் அதிகம் விற்பனையான மின்சார காராக முதலிடத்தை பிடித்துள்ளது.

Mahindra XEV 9S

மஹிந்திராவுக்கு அதிகரிக்கும் மவுசு

மஹிந்திரா நிறுவனம் 7,780 மின்சார கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 3,973 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 96 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விடவும் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

மஹிந்திராவின் மின்சார கார் வரிசையில் எக்ஸ்இவி 9எஸ், எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 ஆகியவை முக்கியமான மாடல்களாக உள்ளன. இதில் எக்ஸ்இவி 9எஸ் செப்டம்பர் மாதத்தில் 4,439 கார்கள் விற்பனையாகி நாட்டின் இரண்டாவது அதிகம் விற்பனையான மின்சார கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Also Read

எம்ஜி விண்ட்சருக்கு தொடரும் வரவேற்பு

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் 5,242 மின்சார கார்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட நிறுவனத்தின் மின்சார கார் விற்பனை 9.14 சதவீதம் உயர்ந்துள்ளது. எம்ஜி நிறுவனத்தின் மின்சார கார் விற்பனையில் விண்ட்சர் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறை பயன்பாடு, வசதிகள் மற்றும் சரியான விலை ஆகிய காரணங்களால் இந்த கார் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Also Read

வின்ஃபாஸ்ட்டின் வேகமான வளர்ச்சி

இந்திய மின்சார கார் சந்தையில் புதிதாக களமிறங்கிய வின்ஃபாஸ்ட் நிறுவனம் செப்டம்பரில் 2,964 கார்களை விற்பனை செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆகஸ்ட்டில் 2,199 கார்கள் விற்பனையான நிலையில், ஒரே மாதத்தில் 34.79 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 மாடல்கள் இந்திய சந்தையில் முக்கியமான தயாரிப்புகளாக உள்ளன. புதிய நிறுவனமாக இருந்தாலும், குறுகிய காலத்திலேயே விற்பனை பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்திருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Kia Syros

கியாவுக்கு நல்ல முன்னேற்றம்

கியா நிறுவனம் செப்டம்பரில் 1,262 மின்சார கார்களை விற்பனை செய்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் மாருதி சுஸுகியை பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது கியா நிறுவனத்தின் மின்சார கார் விற்பனை 95.66 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி செப்டம்பரில் 1,104 மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,412 இ விட்டாரா கார்கள் விற்பனையான நிலையில், செப்டம்பரில் 21.81 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

Tesla

டாப் 10ல் நுழைந்தது டெஸ்லா

இந்திய மின்சார கார் சந்தையில் டெஸ்லாவின் வளர்ச்சியும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. செப்டம்பரில் டெஸ்லா 291 கார்களை விற்பனை செய்து முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 116 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், செப்டம்பரில் விற்பனை 151 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் டெஸ்லா தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் அதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் விற்பனையான மின்சார கார்கள்

செப்டம்பர் மாதத்தில் மாடல் அடிப்படையில் பார்க்கும்போது டாடா பன்ச் இவி 4,666 கார்கள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் 4,439 கார்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தில் உள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 3,469 கார்கள் விற்பனையாகி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்தியாவில் மின்சார கார் விற்பனை தற்போது புதிய அத்யாயத்தை எழுதத் துவங்கி உள்ளது.

பண்டிகை காலம் துவங்கி இருப்பதால், இந்தியர்கள் பலர் புதிய கார் வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். எனவே, அக்டோபரிலும் மின்சார கார் விற்பனை புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, October 8, 2026, 14:32 [IST]
English summary
Electric car sales india september 2026 tata mahindra tesla top 10 brands
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X