இனி வீடு, கடைகளில் இது கட்டாயம் இருக்கணும்! பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலையில் அரசு அதிரடி உத்தரவு!
இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை (Price) கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுதான் நிலைமை. மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர்தான் (West Asia War) இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம். இதன் காரணமாக மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) அதிகளவில் மாற தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது புதிய வாகனங்களை வாங்கும் பலரின் முதல் 'சாய்ஸ்' ஆக எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் உள்ளன. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. இந்த சூழலில், புதிய கட்டிடங்களை கட்டுவோருக்கு தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை அரசு பிறப்பித்துள்ளது.

புதிய கட்டிடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு ஆகும். குடியிருப்பு அல்லது குடியிருப்பு அல்லாத (ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலங்கள் போன்ற கட்டிடங்கள்) என எந்தவொரு புதிய கட்டிடம் என்றாலும் கூட, இனிமேல் சார்ஜர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் இந்த உத்தரவு இந்தியா முழுவதுக்குமானது அல்ல. ஹரியானா மாநிலத்திற்கு மட்டுமானது ஆகும். ஹரியானா மாநில அரசின் ஹரியான நகர மற்றும் ஊரமைப்பு திட்டமிடல் துறைதான் தற்போது இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து ஹெச்டி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரியானா மாநில அரசின் இந்த அதிரடி உத்தரவு காரணமாக, வரும் காலங்களில் ஹரியானா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சார்ஜிங் ஸ்டேஷன் பற்றாக்குறை காரணமாக மட்டுமே இன்னமும் ஒரு சிலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயங்கி கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு எல்லாம் இந்த உத்தரவு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிமுறைகளின்படி ஹரியானா மாநிலத்தில் கட்டப்படும் குடியிருப்போர் நல சங்கங்கள் மூலம் நிர்வாகம் செய்யப்படும் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் கூட்டுறவு வீட்டு வசதி திட்டங்கள் மூலமாக கட்டப்படும் குடியிருப்புகள் போன்றவற்றில் ஒவ்வொரு 5 பார்க்கிங் ஸ்பேஸிற்கும் (Parking Space) ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் இருப்பது கட்டாயம்.
மறுபக்கம் ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற குடியிருப்பு அல்லாத புதிய கட்டிடங்களில் ஒவ்வொரு 3 பார்க்கிங் ஸ்பேஸிற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் இருப்பது கட்டாயம். ஹரியானா மாநில அரசின் இந்த அதிரடி உத்தரவிற்கு பொதுமக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இனி சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றிய பயம் இல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களை தைரியமாக வாங்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்காலம் என்றாகி விட்டது. எனவே ஹரியானா மாநிலத்தை போன்று இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவை கட்டாயம் ஆக்கலாம் என்று டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருதுகிறது. இது நடக்கும்பட்சத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக உயர்ந்து, கச்சா எண்ணெய்யின் (Crude Oil) இறக்குமதி வெகுவாக குறையலாம். கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தால், இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.


Click it and Unblock the Notifications