பெட்ரோலில் 31.2% எத்தனால் கலப்பு! கர்நாடக அரசின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை!

இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சில பெட்ரோல் நிலையங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 31.2 சதவீதம் வரை எத்தனால் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் இ20 (E20) பெட்ரோல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, 80 சதவீதம் பெட்ரோலும் 20 சதவீதம் எத்தனாலும் கலந்த எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த அளவைவிட அதிகமான எத்தனால் கலப்பு கண்டறியப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

E20 Blending Test Results By Karnataka

கர்நாடக அரசின் அதிரடி ஆய்வு

கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தலைமையில் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெங்களூர், கோலார், சிக்கபள்ளாப்பூர், பெங்களூரு ஊரகப் பகுதி, ராமநகரா, மங்களூரு, தும்கூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 63 பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை தர பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், நயாரா எனர்ஜி, ஷெல் மற்றும் மங்களூர் ரிபைனரி நிறுவனங்களின் பெட்ரோல் மாதிரிகள் இதில் இடம்பெற்றிருந்தன. ஆய்வு முடிவுகளில் பல மாதிரிகளில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்தைத் தாண்டியிருப்பது தெரியவந்துள்ளது.

E20 Blending Test Results By Karnataka

எந்த நிறுவன பெட்ரோலில் அதிக எத்தனால்?

இந்த ஆய்வில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஒரு பெட்ரோல் மாதிரியில் அதிகபட்சமாக 31.2 சதவீதம் எத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பவர் பெட்ரோல் மாதிரியில் 30.5 சதவீதம் பதிவாகியுள்ளது. மற்ற சில பெட்ரோல் மாதிரிகளிலும் அதிக கலப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, சில பெட்ரோல் மாதிரிகளில் 27 சதவீதம், 26.5 சதவீதம், 26.1 சதவீதம், 25.5 சதவீதம் என எத்தனால் அளவு பதிவாகியுள்ளது. மேலும், மூன்று மாதிரிகளில் மட்டுமே 20 சதவீதத்திற்கும் குறைவான அளவு காணப்பட்டது. குறைந்தபட்சமாக ஷெல் நிறுவனத்தின் ஒரு மாதிரியில் 13.5 சதவீதம் பதிவாகியுள்ளது.

Also Read

எதற்காக இந்த ஆய்வு?

வாகன ஓட்டிகளிடமிருந்து தொடர்ந்து மைலேஜ் குறைவதாகவும், வாகனங்களில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து பெட்ரோலில் உண்மையில் எவ்வளவு எத்தனால் கலக்கப்படுகிறது என்பதை கண்டறிய கர்நாடக மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் முடிவுகள் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

முதலில் சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், எத்தனால் கலப்பு அளவு குறித்த கேள்விக்கு அவற்றின் ஆய்வறிக்கைகளில் தெளிவான பதில் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் எழுந்து, அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.

E20 Blending Test Results By Karnataka

வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

அதிகப்படியான எத்தனால் கலப்பு பழைய வாகனங்களின் எரிபொருள் அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிபொருள் குழாய்கள், பம்புகள், இன்ஜெக்டர்கள், ஃபில்டர்கள் போன்ற பாகங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், இதற்கான பாதிப்புகள் வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் பராமரிப்பைப் பொறுத்து மாறுபடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

அமைச்சர் ரிஸ்வான் , இந்தியாவில் உள்ள சுமார் 35 கோடி வாகனங்களில் 99 சதவீதம் அளவுக்கான வாகனங்கள் இ20 அளவுக்கு மேல் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள்கூட இ20 பயன்பாட்டிற்கே சான்றளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read

ரூ.1 லட்சம் கோடி இழப்பு?

அதிகப்படியான எத்தனால் கலப்பால் வாகன உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.62,000 கோடி மைலேஜ் இழப்பும், ரூ.39,000 கோடி வாகன பழுதுபார்ப்பு செலவும் ஏற்படுவதாக கர்நாடக அரசு மதிப்பிட்டுள்ளது. இதன்படி மொத்தம் ரூ.1.01 லட்சம் கோடி நுகர்வோருக்கு ஆண்டுதோறும் கூடுதல் சுமையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

மத்திய அரசிடம் கர்நாடகா கேள்வி

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரிடம் கர்நாடக அரசு விளக்கம் கேட்டுள்ளது. பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுவது எப்படி என்றும், இதற்கு பொறுப்பான எண்ணெய் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், பெட்ரோல் பங்குகளில் எத்தனால் கலப்பு சதவீதத்தை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும் என்றும், அதிகப்படியான கலப்பால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிதியத்தை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான எரிபொருள் கலப்பு அளவை தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Article Published On: Friday, November 6, 2026, 16:51 [IST]
English summary
Ethanol blending 31 2 percent petrol karnataka government seeks centre explanation
மேலும்... #karnataka #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X