டாடா தான் நம்பர் 1, மாருதி லிஸ்ட்லயே இல்ல! இந்த கார்களின் விற்பனை டபுள் ஆகிடுச்சு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு விற்பனையான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது. இதில் எந்தெந்த பிராண்டுகளில் எவ்வளவு வாகனங்களை விற்பனையாகியுள்ளன என்ற தரப்புகள் கிடைக்கப்பட்டுள்ளன. இதன்படி நாம் டாப் 10 இடத்தில் உள்ள எலெக்ட்ரிக் வாகன விற்பனை பிராண்டுகள் குறித்த விவரங்களை காணலாம் வாருங்கள்.

வின்ஃபாஸ்ட்

இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு தான் தனது முதல் விற்பனையை துவங்கியது. இந்நிறுவனம் கடந்து 2025ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 826 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 2024ம் ஆண்டு இந்தியாவிலேயே விற்பனையை துவங்கவில்லை என்பதால் அதை ஒப்பிட்டு பார்க்க முடியாது.

EV car Sales 2025

சிட்ரோன்
பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்ட சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் 871 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2024ம் ஆண்டு 1925 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 54.75 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் சொகுசான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்து 2025ம் ஆண்டு முழுவதும் 1168 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு 954 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 22.43 சதவீதம் அளவிற்கு இந்த கார்களின் விற்பனை அதிகமாகியுள்ளது.

EV car Sales 2025

கியா

கியா எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பின் முக்கியமான நிறுவனமாக இருந்தாலும், இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இருந்தாலும் இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பான அளவில் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு அந்நிறுவனத்தின் வாகன விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது என்று சொல்ல வேண்டும். மொத்தம் 2730 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே 2024ம் ஆண்டு வெறும் 445 கார்களை விற்பனை செய்திருந்தது. அதாவது 557.83 சதவீதம் அளவுக்கு இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனமும் இந்தியாவில் சொகுசு ரக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு மொத்தம் 3,195 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு வரும் 1227 கார்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது 160.39 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

EV car Sales 2025

பிஒய்டி

சீனாவை சேர்ந்த பிஒய்டி என்ற நிறுவனம் தற்போது இந்தியாவில் பிரபலம் அடைந்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 5402 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு 2869 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் வாகன விற்பனை எண்ணிக்கை என்பது 88.29% அளவிற்கு அதிகமாக உள்ளது.

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 6,726 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த 2021ம் ஆண்டு 914 கார்களை தான் விற்பனை செய்திருந்தது தற்போது 635.89 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு எலெக்ட்ரிக்கல் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது என்று சொல்லலாம். மொத்தம் 33,513 கால்களை விற்பனை செய்துள்ளது 2024ம் ஆண்டு இந்நிறுவனம் வெறும் 7139 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது 369.44 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

எம்ஜி

இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம்தான் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த இரண்டாவது நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 51,387 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு 21,814 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது தற்போது 1357 சதவீதம் அளவுக்கு இந்த வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் விண்ட்ஸர் என்ற எலெக்ட்ரிக் கார் தான்.

இது வெறும் டாப்10 பட்டியல் தான் இதுபோக வால்வோ நிறுவனம் கடந்து 2025ம் ஆண்டு மொத்தம் 389 கார்களையும்,டெஸ்ட்லா நிறுவனம் 225 கார்களையும்,மற்ற நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து மொத்தம் 381 கார்களையும் விற்பனை செய்துள்ளனர். 2025ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் 1,76,817 கார்கள் விற்பனையாகி இருந்தது. இது கடந்த 2024ம் ஆண்டு மொத்தம் விற்பனையான 99,875 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 77.04 சதவீதம் வளர்ச்சியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய புரட்சியை ஏற்பட்டு வருகிறது என சொல்லலாம். முக்கியமாக குறைவான பராமரிப்பு செலவை எதிர்பார்க்கும் மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் இந்த கார்கள் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் இதன் விலை தான். ஆனால் ஒப்பிட்ட அளவில் பெட்ரோல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்கள் லாபம் என வாங்கிய பலரும் கூறுகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, January 9, 2026, 12:30 [IST]
English summary
Ev car sales 2025 nearly 80 percent growth tata motors lead
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X