ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை இனி மாற்ற வேண்டிய அவசியமில்லை... OneTag மூலம் வங்கியை மட்டும் மாற்றலாம்!

ஃபாஸ்டேக் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு முக்கியமான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுவரை கணக்கு உள்ள ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு ஃபாஸ்டேக் சேவையை மாற்ற வேண்டும் என்றால், பழைய ஃபாஸ்டேக் அக்கவுண்ட்டை மூடிவிட்டு புதிய ஃபாஸ்டேக் வாங்கி ஒட்ட வேண்டிய நிலை இருந்தது. இனி இந்த பிரச்னை இல்லாமல் அதே ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியை மட்டும் மாற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒன்டேக் (OneTag) என்ற புதிய FASTag portability வசதியை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் (IHMCL) மற்றும் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) இணைந்து இந்த வசதியை உருவாக்கியுள்ளன. செப்டம்பர் 11-ம் தேதி மும்பையில் நடைபெற்ற Global Fintech Fest நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த ஒன்டேக் வசதியை அறிமுகப்படுத்தினார்.

OneTag Portability Facility

போர்ட்டபிளிட்டி வசதி

ஃபாஸ்டேக் கணக்கு உள்ள சம்பந்தப்பட்ட வங்கியின் சேவையில் திருப்தி இல்லாதவர்கள், வேறு வங்கிக்கு மாற விரும்பினால், அந்த கணக்கை முடித்துவிட்டு புதிய ஃபாஸ்டேக் வாங்க வேண்டியிருந்தது. இதனால் பழைய ஸ்டிக்கரை அகற்றுவது, புதிய ஸ்டிக்கரை வாங்குவது, மீண்டும் KYC உள்ளிட்ட செயல்முறைகளை மேற்கொள்வது போன்ற பிரச்னைகளை வாகன உரிமையாளர்கள் சந்தித்து வந்தனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எப்படி மொபைல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களை மாற்றுவதற்கு போர்ட்டபிளிட்டி வசதியை பயன்படுத்துகிறோமோ, அதேபோலவே ஃபாஸ்டேக் கணக்கிற்கும் இனி போர்ட்டபிளிட்டி மூலமாக ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக, புதிய ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கி ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

Also Read

ஸ்டிக்கரை அகற்றும் பிரச்னை

ஒன்டேக் வசதி மூலமாக வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ள ஃபாஸ்டேக்கை அகற்றாமல், அதே Tag ID மற்றும் வாகன பதிவு எண்ணுடன் புதிய வங்கிக்கு மாற முடியும். இந்த ஃபாஸ்டேக் போர்ட்டபிளிட்டி செயல்முறையை Rajmargyatra மொபைல்போன் செயலி மூலம் மேற்கொள்ளலாம். இந்த செயலியில் ஒன்டேக் வசதியைத் தேர்வு செய்து, முதலில் தனது ஃபாஸ்டேக் கணக்கானது போர்ட்டபிளிட்டி செய்ய தகுதியானதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

அதன்பிறகு பாதுகாப்பு சரிபார்ப்பு மற்றும் பயனரின் ஒப்புதல் பெறப்படும். பின்னர், பயனர் விரும்பும் புதிய வங்கியைத் தேர்வு செய்து அடுத்த கட்ட onboarding செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததும், பழைய ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை மாற்றாமல், அதே ஸ்டிக்கரை தொடர்ந்து பயன்படுத்தி சுங்கக் கட்டணம் செலுத்த முடியும்.

Also Read

கவனிக்க வேண்டிய விஷயம்

ஃபாஸ்டேக்கை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கும் போர்ட்டிங் செய்தவுடன் பழைய வங்கியின் FASTag wallet தொடர்பான பணம் மற்றும் நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகளை பழைய வங்கியே கையாளும். அதேபோல், கிடைக்க வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட விஷயங்களுக்கும் பழைய வங்கியைத்தான் தொடர்புகொள்ள வேண்டும்.

போர்ட் செய்து முடிந்த பிறகு ஃபாஸ்டேக்கின் புதிய பரிவர்த்தனைகளை மட்டுமே புதிய வங்கி வழங்கும். எனவே, பழைய வாலட் கணக்கில் இருக்கும் தொகை தானாகவே புதிய வங்கியின் வாலட்டிற்கு மாற்றப்படாது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

Article Published On: Wednesday, September 16, 2026, 10:37 [IST]
English summary
Fastag portability onetag how to change bank through rajmargyatra app
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out