நாளை அறிமுகம் செய்யப்படும் புதிய கார்... ஃபெராரியில் ஒட்டுமொத்த இந்திய பணக்காரர்களும் எதிர்பார்க்கும் கார்!

ஃபெராரி நிறுவனத்தில் இருந்து புதியதாக அமல்ஃபி ஸ்பைடர் (Amalfi Spider) கார் இந்தியாவில் ஜூலை 17ஆம் தேதியான நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஃபெராரி அமல்ஃபி கூபே கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் கன்வெர்டபிள் வெர்சனாக களமிறக்கப்படவுள்ள இந்த புதிய ஃபெராரி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

புதியது புதியதாக எத்தனை கார்கள் வந்தாலும், மேற்கூரையை திறந்து வைத்தப்படி ஓட்டக்கூடிய கன்வெர்டபிள் கார்களுக்கு இருக்கும் மவுசு எப்போதும் குறையாது. இதனாலேயே அமல்ஃபி கார் மாடலை கடந்த பிப்ரவரியில் கூபே வெர்சனில் அறிமுகப்படுத்திய போதிலும், புதியதாக கன்வெர்டபிள் வெர்சனிலும் ஃபெராரி நிறுவனம் களமிறக்குகிறது.

ferrari amalfi convertible launch tomorrow

ரூ.5.59 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபெராரி அமல்ஃபி கூபே காரின் பெரும்பாலான பாகங்களை கொண்டு புதிய அமல்ஃபி ஸ்பைடர் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மடிக்கக்கூடிய மேற்கூரை காருக்கு தனித்துவமான லுக்கை வழங்கும் என்பது உறுதி. இருந்தாலும், அமல்ஃபி கூபே காரை காட்டிலும் குறைவான விலையில் இது எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவாக எதிர்பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணம், இந்திய-ஐரோப்பிய யூனியனுக்கு இடையேயான இலவச வர்த்தக ஒப்பந்தம் ஆகும். அமல்ஃபி ஸ்பைடர் காருக்கும், பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட கூபே காருக்கும் இடையேயான முக்கியமான வித்தியாசம் துணியால் ஆன பவர்டு மேற்கூரை ஆகும். குறைவான எடை கொண்டதாக உள்ளதால் இந்த மேற்கூரை ஆனது விரைவாக திறந்து மூடக்கூடியதாக உள்ளது.

ferrari amalfi convertible launch tomorrow

எந்த அளவிற்கு விரைவாக என்றால், மணிக்கு 60கிமீ வேகத்தில் வெறும் 13.5 வினாடிகளில் திறந்து மூடக்கூடியதாக இருக்கும். மூடப்பட்டிருக்கும் சமயத்தில் இந்த மேற்கூரை வெளி சத்தத்தையும், வெப்பத்தையும் கேபினுக்குள் கொண்டுவராது என ஃபெராரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மேற்கூரையை தவிர்த்து அமல்ஃபி ஸ்பைடர் காருக்கும், கூபே காருக்கும் இடையே தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.

புதிய அமல்ஃபி ஸ்பைடர் காரின் முன்பக்கத்தில் மெல்லியதான வடிவில் LED ஹெட்லைட்களும், அவற்றை ஒன்றோடு ஒன்று இணைக்கக்கூடிய கருப்பு நிற ஸ்ட்ரிப்பும் வழங்கப்படவுள்ளன. காற்று உள்ளே செல்வதற்கான ஏர் இண்டேக்குகள் நன்கு பெரியதாக வழங்கப்படவுள்ளன. ஸ்போர்டியான டிசைனில் இருக்கும் முன்பக்க பம்பர் ஆனது எதிர்காற்றில் கார் எளிதாக நுழைந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

பின்பக்கத்தில் இந்த கார் மெல்லியதான வடிவில் LED டெயில்லைட்கள், குவாட் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் ஆக்டிவ் ஸ்பாய்லரை கொண்டுள்ளது. இதில் பின்பக்க ஸ்பாய்லர் ஆனது டிரைவிங் சூழலை பொறுத்து காரின் ஸ்டெபிலிட்டியை மேம்படுத்தும் வகையில் தானாக அட்ஜெஸ் செய்துக் கொள்ளும். இந்த காரின் பின்பக்கத்தில் சுமார் 255 லிட்டர்கள் கொள்ளளவில் பூட்ஸ்பேஸ் பகுதி வழங்கப்பட்டுள்ளதாக ஃபெராரி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பூட் ஸ்பேஸ் பகுதிக்கும் ரூஃப் உள்ளது. ஆனால், மேற்கூரையை திறந்து வைத்திருந்தால் பூட் ஸ்பேஸ்-க்கு ரூஃப் கிடைக்காது என்பது மட்டுமின்றி, பூட் ஸ்பேஸின் அளவும் 172 லிட்டர்களாக குறையும். அமல்ஃபி கூபே காரை போன்று, உள்ளே 4 இருக்கைகளை மட்டுமே கொண்ட இந்த புதிய ஃபெராரி காரில் 3.9 லிட்டர் ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபெராரி அமல்ஃபி போன்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை கன்வெர்டபிள் தோற்றத்தில் வாங்கவே பெரும்பாலானோர் விரும்புவர். இதன் காரணமாகவே, இந்த காரின் கூபே வெர்சனை அறிமுகம் செய்த சில மாதங்களிலேயே கன்வெர்டபிள் வெர்சனை ஃபெராரி நிறுவனம் களமிறக்குகிறது. ஜூலை 17ஆம் தேதியான நாளை அறிமுகம் செய்யப்படும் இந்த காரின் விலை எந்த அளவிற்கு நிர்ணயிக்கப்பட உள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

Article Corrections

இண்டலிங்க் சேர்க்கப்பட்டது மற்றும் படங்கள் பெறப்பட்ட இணையத்தள பக்கம் குறிப்பிடப்பட்டது.
Article Published On: Thursday, July 16, 2026, 21:55 [IST]
English summary
Ferrari amalfi convertible sports car launch tomorrow in india
மேலும்... #ferrari #sports car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out