ரூ.4.60 கோடியில் புதிய ஃபெராரி அமால்ஃபி ஸ்பைடர் கார் பெங்களூரில் தரிசனம்... எக்ஸ்க்ளூசிவ்!!

அண்மையில் இந்தியாவில் அறிமுகமான ஃபெராரி அமால்ஃபி ஸ்பைடர் சூப்பர் கார் தற்போது பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்தியாவில் ஃபெராரி நிறுவனம் பிராந்திய அளவிலான அறிமுகத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த வாரம் மும்பையில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் தற்போது பெங்களூருவிலும், இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் டெல்லியில் உள்ள ஃபெராரி ஷோரூமிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்திய சந்தைக்கு முக்கியத்துவம்

திறந்து மூடும் கூரை அமைப்புடைய இந்த புதிய சூப்பர் கார் இந்தியாவில் ரூ.4.60 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபெராரி நிறுவனத்தின் ரோமா காருக்கு மாற்றாக வந்த அமால்ஃபி காரில் திறந்துமூடும் கூரை அமைப்புடைய வேரியண்ட்டாக இந்த கார் வந்துள்ளது. உலகளவில் அறிமுகமான சில மாதங்களிலேயே இந்திய சந்தைக்கு இந்த கார் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Ferrari Amalfi Spider

கன்வெர்ட்டிபிள் கூரை அமைப்பு

இந்த காரின் முக்கிய சிறப்பம்சம் அதன் மின்சாரத்தில் இயங்கும் மென்மையான ஃபேப்ரிக் ரூஃப் (Soft Top) ஆகும். வெறும் 13.5 வினாடிகளில் கூரையை திறக்கவும் மூடவும் முடியும்.

மேலும், மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தாலும் இந்த வசதியை பயன்படுத்தலாம். ஐந்து அடுக்கு துணி அமைப்புடன் இந்த விசேஷ கூரை அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. திறந்த கூரை அமைப்புடைய காராக இருந்தாலும் சத்தத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Ferrari Amalfi Spider Covertible

மிரட்டலான செயல்திறன்

செயல்திறனைப் பொறுத்தவரை, ஃபெராரி அமால்ஃபி ஸ்பைடர் காரில் 3.9 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 640 ஹெச்பி சக்தி மற்றும் 760 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதனுடன் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்ச வேகம் 320 கிமீ/மணி என ஃபெராரி தெரிவித்துள்ளது.

இன்டீரியர்

உள்ளே அமர்ந்தாலும் ஃபெராரியின் பிரீமியம் கைவண்ணம் முழுமையாக தெரிகிறது. இந்த காரில் 15.6 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் பயணிகள் டிஸ்ப்ளே, வயர்லெஸ் Apple CarPlay, Android Auto, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மாடலில் இயக்குவதற்கு எளிதாக மீண்டும் பிசிக்கல் ஸ்டீயரிங் வீல் பட்டன்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும் ஃபெராரி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Ferrari Amalfi Spider Seating Layout

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு மற்றும் ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த காரில் பல நவீன தொழில்நுட்பங்களை ஃபெராரி வழங்கியுள்ளது. அந்த வரிசையில், இதன் Brake-by-Wire அமைப்பு மின்னணு முறையில் துல்லியமான பிரேக்கிங் திறனை வழங்குகிறது. அதேபோன்று, Side Slip Control 6.1 என்ற வசதி அதிக வேகத்தில் காரின் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. மேலும், Active Rear Spoiler என்ற வசதி வேகத்திற்கு ஏற்ப தானாக செயல்பட்டு கூடுதல் தரைப்பிடிப்பை (Downforce) வழங்குகிறது. முக்கியமாக Adaptive Cruise Control முன்புற வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப காரின் வேகத்தை தானாக கூட்டி அல்லது குறைத்து பாதுகாப்பான இடைவெளியை பராமரிக்கிறது.

Automatic Emergency Braking (AEB) முன்புறத்தில் தடையை கண்டறிந்தால் தானாக பிரேக் போட்டு விபத்தை தவிர்க்க அல்லது அதன் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. Lane Keeping Assist கார் தனது பாதையிலிருந்து விலகும்போது அதை மீண்டும் அதே லேனுக்குள் வைத்திருக்க ஸ்டீயரிங்கில் தானாக திருத்தம் செய்கிறது. Blind Spot Monitoring பக்கக் கண்ணாடிகளில் தெரியாத பகுதியில் வரும் வாகனங்களை கண்டறிந்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை வழங்குவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கிறது.

பிராந்திய அளவில் பெங்களூரில் அறிமுகம்

இந்த மாடலை இந்தியாவில் வெறும் விற்பனைக்கு மட்டும் கொண்டு வரவில்லை. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் பிரத்யேக நிகழ்ச்சிகள் மூலம் வாடிக்கையாளர்கள் காரை நேரில் அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்கி வருகிறது. இது இந்திய சந்தையில் ஃபெராரி மேற்கொள்ளும் முதல் பிராந்திய அளவிலான அறிமுக நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Ferrari Amalfi Spider front

யாருக்கு இந்த கார்?

அதிக செயல்திறன் கொண்ட திறந்த கூரை (Convertible) அமைப்புடைய சூப்பர் கார் வாங்க விரும்புபவர்கள் மற்றும் ஃபெராரி பிராண்டின் புதிய தலைமுறை Grand Tourer ரக சூப்பர் காரை எதிர்பார்த்திருந்தவர்கள், தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப அதிக கஸ்டமைசேஷன் வசதிகள் நிறைந்த பிரீமியம் காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அமால்ஃபி ஸ்பைடர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஃபெராரி ரோமா காரின் புதிய தலைமுறை மாடலாக வந்துள்ள இந்த கார் திறந்த கூரை பதிப்பு மட்டுமல்ல. Ferrari-யின் புதிய Grand Tourer தத்துவத்தை வெளிப்படுத்தும் மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அதிக செயல்திறன், திறந்த கூரை ஓட்டும் அனுபவம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்க வசதிகள் ஆகியவற்றின் கலவையாக இருக்கும் இந்த மாடல், இந்தியாவில் ஃபெராரி கார் கனவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் புதிய தேர்வாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Article Published On: Sunday, July 26, 2026, 11:19 [IST]
English summary
Ferrari amalfi spider showcased bengaluru price specs features
மேலும்... #new launches #india #ferrari
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X