காரா? ஃபிளைட்டா? புதிய இவி கார வேற லெவலில் உருவாக்கிய ஃபெராரி!

ஃபெராரி நிறுவனம் தனது முதல் இவி காரை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்நிறவனம் தனது காரின் உட்புற வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கார் குறித்துநமக்கு இதுவரை கிடைத்ததகவல் என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சமீபத்தில் ஃபெராரி நிறுவனம் தனது முதல் இவி காரை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது.இந்த காருக்கு அந்நிறுவனம் லூசி என பெயர் வைத்துள்ளது. இந்த கார் வரும் மே மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை ஃபெராரி நிறுவனம் பிரபல டிசைனரான ஜோனி இவ் என்பவருடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இதன் இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் டிசைன குழுவின் தலைவராக இருந்தார்.

Ferrari Luce EV Interiors Revealed

இந்த ஃபொராரி லூசி கார் நவீன தொழிற்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் உட்புறத்தில் 3 ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல் இருக்கிறது. இது வுட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் 1950ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த ஃபெராரி காரின் லுக்கை அப்படியே கொண்டுள்ளது. இந்த காரின் ரீ சைக்கிள்டு அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது குறைந்த எடையில் கிளாஸியான ஃபிரிமியம் ஃபீல் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டியரிங் வீலில் 2 முக்கோண வடிவிலான பாட்கள் உள்ளன. இது விமான கண்ட்ரோல்கள் போன்ற லுக்கில் உள்ளது. இடது பக்கம் கியரை தேர்வு செய்யும் ரோட்டேட்டரி நாப் உள்ளது. இதில் ரேஞ்ச், டூர் மற்றும் ஃபெர்பார்மென்ஸ் ஆகிய மோடுகள் உள்ளன. வலது பக்கம் சேஸிஸ் தேர்வு மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஐஸ், வெட், டிரை, ஸ்போர்ட், மற்றும் இஎஸ்சி ஆஃப் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளது. டேம்பிங், வைப்பர் கண்ட்ரோல், ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Ferrari Luce EV Interiors Revealed

சமீபத்தில் ஃபெராரி நிறுவனம் விண்ணப்பித்த காப்புரிமை குறித்த தகவல்களை பார்க்கும் போது இந்நிறுவனம் தனது லூசி இவி காரில் பவர் டிஃஸ்டிரிப்யூஷனை ஒவ்வொரு வீலுக்கும் அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷனை வழங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் குதிரை எம்பிளம் இலுமினேட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் டிஸ்பிளே அலர்ட் மற்றும் நோட்டிஃபிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஃபெராரி காரில் 12.5 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் பினாக்கில் ஏவியேஷன் டயல் ஸ்டியரிங் காலத்தில் வழங்கப்பட்டள்ளது. இதில் தகவல்களை எந்த கவன சிதறல்களும் இல்லாமல் ஓட்டுநரால் அறிந்த கொள்ள முடியும். இந்த டயலில் பீஸ்போக் சாம்சாங் ஓஎல்இடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள சென்ட்ரல் டிஸ்பிளே ஸ்பீடை நீடில் மூலம் வழங்குகிறது. அதில் டிஜிட்டல் ரீடு அவுட்டும் உள்ளது. கீழ் பகுதியில் பேட்டரி அளவு அதன் மூலம் எவ்வளவு தூரம் எவ்வளவு தூரம் போகும் உள்ளிட்ட விபரங்கள் உள்ளது.

இடது பக்கம் பவர் மற்றும் ரீஜென் தகவல்களுக்கு சிறிய டயல் மூலம் வழங்கப்படுகிறது. இதே போல வலது பக்கம் உள்ள டலயில் டயர் பிரஷர், ஜி ஃபோர்ஸ் ஆகியன உள்ளன. மேல உள்ள ஓஎல்இடி பகுதியில் வார்னிங், நேவிகேஷன், மற்றம் ஸ்விஃப்ட் தகவல்களை டிஸ்பிளே செய்ய உதவுகிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் வலது பக்கம் 10.12 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளது. இது பால் மற்றும் சாக்கெட் ஜாயிண்ட் உடன் வருகிறது. இதில் பாம் ரெஸ்ட் உள்ளது. இதனால் இதில் உள்ள பல்வேறு கண்ட்ரோல் பட்டன்களை ஆப்ரேட் செய்வது எளிது. இந்த ஸ்கிரீனில் மேல் பகுதியில் குரோனோகிராஃப், கடிகாரம், காம்பஸ், லாஞ்ச் கண்ட்ரோல் இம்ஃபர்மேஷன் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன.

இந்த காரின் சென்ட்ர் கண்சோலில் கிளாஸ் கியர் ஸ்விஃப்டர் ரோபஸ்ட் கொரிலா கிளாஸ் உடன் வருகிறது. மற்றொரு சிறப்பம்சம் இதில் இ-இங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் கிளாஸ் அலுமினியம் கீ, சென்டர் கண்சோலில் உளளது. இந்த காரின் உட்பகுதியில் தொழிற்நுட்ப அம்சங்கள், விமான காக்பிக் லுக்,சிறப்பான டிசைன் மற்றும் பிராக்டிக்காலிட்டி உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. இந்த வடிவமைப்பு பாரம்பரியம் மற்றம் தொழிற்நுட்பம் ஆகியவற்றுடன் எலெக்ட்ரிஃபிகேஷன் சேர்ந்த விஷயமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 10, 2026, 11:10 [IST]
English summary
Ferrari luce ev interior physical buttons analog gauges minimalist
மேலும்... #ferrari
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+