ஒட்டுமொத்த நாட்டில் யாரிடமும் இல்லாத லம்போர்கினி கார்... யாருக்கு டெலிவிரி செய்ய இந்தியா வந்திருக்கோ...!!
லம்போர்கினி நிறுவனத்தின் முதல் டெமெராரியோ கார் இந்தியாவில் முதல் வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. லம்போர்கினியின் 2வது எலெக்ட்ரிக் காரான இது கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது முதல் டெமெராரியோ கார் இந்தியாவில் சாலைக்கு வந்துள்ளது. இதுகுறித்தும், இந்த லம்போர்கினி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலெக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் பெரியதாகி வருவதை உணர்ந்து எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய துவங்கியுள்ள நிறுவனங்களுள் லம்போர்கினியும் ஒன்றாகும். அதேநேரம், இந்த நிறுவனத்தின் முதல் ஹைப்ரீட் காராக ரெவால்டோ அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 3வது ஹைப்ரீட் காராக டெமெராரியோ 2025 ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

லம்போர்கினியின் பிரபலமான ஹூராகென் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹைப்ரீட் காராக டெமெராரியோ விளங்குகிறது. இது முழுவதுமாக ஓர் எலெக்ட்ரிக் கார் கிடையாது. ஏனெனில், இதில் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதுவே, ஹூராகென் காரில் இன்னும் பவர்ஃபுல்லான வி10 என்ஜின் வழங்கப்பட்டது.
டெமெராரியோவில் வி8 என்ஜின் உடன் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக சுமார் 920 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இதன் மூலமாக வெறும் 2.7 வினாடிகளில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை எட்டிவிடக்கூடிய டெமெராரியோ காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 340கிமீ ஆகும்.

ட்வின் டர்போசார்ஜ்டு அமைப்பினால் இந்த காரின் வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 10 ஆயிரம் ஆர்பிஎம் வேகத்தில் சுழலக்கூடியது ஆகும். e-4WD சிஸ்டம் மூலமாக என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரில் இருந்து வெளிவரும் இயக்க ஆற்றல் மற்றும் டார்க் திறன் ஆனது காரின் நான்கு சக்கரங்களுக்கும் செல்லும்.
இந்த லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இதில் சுமார் 13 டிரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக, அதிவேகமாக ஓட்டக்கூடிய பந்தய களத்தில் மட்டுமின்றி, டிரைவிங் மோடை மாற்றி சாதாரணமான சாலைகளிலும் இந்த காரை பயன்படுத்தலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த காரை சுற்றிலும் கூர்மையான கோடுகள் அதிகமாக வழங்கப்படுகின்றன.
என்ஜின் சிஸ்டம் ஆனது வெளியே தெரியும் வகையில் காரின் பின்பக்கத்தில் கண்ணாடி ஃபிரேமிற்குள் வழங்கப்படுகிறது. இந்த லம்போர்கினி காரின் உட்புறத்தில், டிரைவர் இருக்கை ஆனது விமானங்களின் காக்பிட் போன்ற டிசைனில் உள்ளது. இந்த காரின் கேபினில் கார்பன் ஃபைபர், லெதர் மற்றும் டினாமிகாவின் கார்சடெக்ஸ் உள்ளிட்ட மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
ஹூராகென் கார் உடன் ஒப்பிடும்போது, டெமெராரியோ காரின் கேபினை நன்கு விசாலமாகவும், காரை எளிதாக கண்ட்ரோல் செய்வதற்கு ஏற்பவும் லம்போர்கினி நிறுவனம் வடிவமைத்துள்ளது. குறிப்பாக, இந்த காரின் டாஷ்போர்டும் சரி, அதில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் திரையும் சரி பார்க்க ஸ்டைலாக இருப்பது மட்டுமின்றி, பயன்படுத்துவதற்கும் எளிதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்போர்கினி நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார்களுள் ஒன்று டெமெராரியோ ஆகும். இதனை எலெக்ட்ரிக் கார் என சொல்வதை விட, ஹைப்ரீட் கார் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய சிறப்புமிக்க லம்போர்கினி கார் தான் முதல்முறையாக இந்திய சாலைக்கு வந்துள்ளது. மற்றப்படி, இந்தியாவில் டெமெராரியோவை டெலிவிரி பெறும் முதல் கஸ்டமர் குறித்த விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.


Click it and Unblock the Notifications