இந்தியாவின் மோசமான சாலைகளுக்கு ஏற்ற 5 மாஸ் எஸ்யூவி கார்கள்... குண்டு குழி சாலைகளுக்கு குட்பை சொல்லுங்க!

எந்தவொரு காரை வாங்கும்போதும் நாம் முக்கியமாக கவன வேண்டிய விஷயங்களுள் ஒன்று அதன் கிரவுண்ட் க்ளியரென்ஸ் (Ground Clearance) ஆகும். அதாவது, தரைக்கும் காரின் அடிப்பகுதிக்கும் இடையேயான தூரம். குறிப்பாக, இந்தியா போன்ற பள்ளம், மேடான சாலைகளை கொண்ட நாட்டில் காரின் கிரவுண்ட் க்ளியரென்ஸை பற்றி தெரிந்துக் கொள்வது முக்கியமாகும்.

பொதுவாக, அதிக உயரத்துடன் நிமிர்ந்த தோற்றம் கொண்ட SUV வகை கார்களில் அவற்றின் தோற்றத்திற்கு ஏற்ப அதிக கிரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்படுகிறது. அவ்வாறான SUV கார்களுள் அதிக கிரவுண்ட் க்ளியரென்ஸை கொண்ட டாப்-5 SUV கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

high ground clearance suv cars

டாடா ஹாரியர் (Tata Harrier)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான மிட்-சைஸ் SUV காரான ஹாரியரில் 205மிமீ உயரத்திற்கு கிரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யப்படும் ஹாரியர் ஆனது விலையுயர்ந்த டாடா கார்களில் ஒன்றாக 5 இருக்கைகள் உடன் கிடைக்கிறது.

டாடா நெக்ஸான் (Tata Nexon)
இந்தியாவில் தற்சமயம் பலரால் விரும்பி வாங்கப்படும் SUV கார்களுள் ஒன்றான நெக்ஸான், பலர் வாங்கும் முதல் காராக விளங்குகிறது. ரூ.7.39 லட்சத்தில் இருந்து கிடைக்கும் நெக்ஸானின் கிரவுண்ட் க்ளியரென்ஸ் ஆனது 208மிமீ ஆக உள்ளது. மேலே கண்ட ஹாரியரை காட்டிலும் இது அளவில் சிறியதாக இருப்பினும், இதிலும் 5 இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

high ground clearance suv cars

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Grand Vitara)
இந்திய மார்க்கெட்டில் பிரபலமான சுஸுகி விட்டாரா காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் விட்டாராவில் 210மிமீ அளவில் கிரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாருதி சுஸுகி காரின் அடிப்படையில் தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரும் உருவாக்கப்படுகிறது. இதனால், இந்த டொயோட்டா காரிலும் 210மிமீ கிரவுண்ட் க்ளியரென்ஸ் கிடைக்கிறது.

ரெனால்ட் டஸ்டர் (Renault Duster)
கிராண்ட் விட்டாரா- ஹைரைடர் ஜோடியை போலவே டஸ்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிசான் டெக்டான் காரிலும் 212மிமீ அளவிற்கு நன்கு பெரியதாக கிரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்படுகிறது. இதேபோல், விலையிலும் இரண்டும் ஒரே மாதிரியாக ரூ.10.50 லட்சத்தில் இருந்து கிடைக்கின்றன.

ஹோண்டா எலிவேட் (Honda Elevate)
இந்தியாவில் தற்போது மிக பெரிய கிரவுண்ட் க்ளியரென்ஸ் உடன் கிடைக்கும் SUV கார் இதுவாகும். ஹோண்டாவின் காம்பாக்ட்டான SUV வகை காரான எலிவேட்டில் சுமார் 220மிமீ அளவிற்கு கிரவுண்ட் க்ளியரென்ஸ் கிடைக்கிறது. எலிவேட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.59 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலான SUV கார்களில் அதிக கிரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அவற்றுள் அதிக கிரவுண்ட் க்ளியரென்ஸை கொண்ட 5 எஸ்யூவி கார் மாடல்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இவற்றில் ஹோண்டா எலிவேட் முதலிடம் பிடித்துள்ள நிலையில், பெரும்பாலான ஹோண்டா கார்கள் இந்தியாவில் மிகவும் குறைத்து மதிப்பிடப்படுவை ஆகவே உள்ளன.

Article Published On: Wednesday, July 15, 2026, 10:49 [IST]
English summary
Five high ground clearance suv cars you can buy in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out