ஃப்ளெக்ஸ் ஃப்யூல் காரில் E20, E85, E100 என 3 எரிபொருளையும் பயன்படுத்த முடியுமா?

மத்திய அரசு E100 எத்தனால் எரிபொருளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகன விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Eதன் மூலம் அதிக எத்தனால் செறிவு கொண்ட எரிபொருளில் Eயங்கும் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கார்களுக்கான விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, ஒரே காரில் E20, E85, E100 ஆகிய மூன்று வகை எரிபொருட்களையும் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

இதற்கு நேரடி பதிலாக பயன்படுத்தலாம் என்று கூற முடியும். ஆனால், அந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார் மாடலானது குறிப்பிட்ட எரிபொருள் கலவைகளை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில், பெட்ரோல் கார்களில் E20 எரிபொருளை தவிர்த்து அதிக எத்தனால் கலந்த எரிபொருளை நிரப்பிப் பயன்படுத்த முடியாது. ஃப்ளெக்ஸ் ஃப்யூல் தொழில்நுட்பம் கொண்ட கார்களில் மட்டுமே அதிக எத்தனால் கலந்த பெட்ரோல் அல்லது 100 சதவீத எத்தனாலை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

Petrol Pump

E20, E85, E100 விளக்கம்?

நாடு முழுவதும் தற்போது அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பரவலாக E20 என்று குறிப்பிடப்படும் பெட்ரோல் எரிபொருள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த எரிபொருளில் 20 சதவீத எத்தனால், 80 சதவீத பெட்ரோல் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. அடுத்து, E85 எரிபொருளில் பொதுவாக 85 சதவீதம் எத்தனால் இருக்கும். E100 என்பது பெட்ரோல் இல்லாத 100 சதவீத எத்தனால் கொண்ட எரிபொருளைக் குறிக்கிறது.

தற்போது Eந்தியாவில் E20 எரிபொருள் பயன்பாடு விரிவடைந்துள்ளது. ஆனால், E20 எரிபொருளில் இயங்கும் சாதாரண கார் என்பதற்காக அதில் E85 அல்லது E100 எரிபொருளைப் பயன்படுத்த முடியாது. அதிக எத்தனால் செறிவைக் கையாளும் வகையில் காரின் எஞ்சின் மற்றும் எரிபொருள் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Also Read

ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கார் எப்படி இயங்கும்?

ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கார்கள் வெவ்வேறு அளவுகளில் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகின்றன. காரில் உள்ள மின்னணுக் கட்டுப்பாட்டுக் கருவி (ECU), எரிபொருளின் கலவைக்கு ஏற்ப எரிபொருள் செலுத்தும் அளவு மற்றும் எஞ்சினின் செயல்பாட்டை மாற்றியமைக்க உதவுகிறது. இதனால், அனுமதிக்கப்பட்ட எரிபொருள் வரம்புக்குள் வெவ்வேறு கலவைகளைப் பயன்படுத்த முடியும்.

இதற்காக எரிபொருள் குழாய்கள், சீல்கள், உட்செலுத்தி அமைப்பு உள்ளிட்ட பாகங்களும் அதிக எத்தனால் செறிவை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். எனவே, சாதாரண பெட்ரோல் காரில் சிறிய மாற்றங்களைச் செய்துவிட்டு E100 எரிபொருளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது. தயாரிப்பாளர் அனுமதித்த எரிபொருளையே பயன்படுத்த வேண்டும்.

Also Read

மைலேஜ் குறையுமா?

பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனாலில் ஒரு லிட்டருக்குக் கிடைக்கும் ஆற்றல் குறைவாக இருக்கும். இதனால், அதிக எத்தனால் செறிவு கொண்ட எரிபொருளைப் பயன்படுத்தும்போது ஒரு லிட்டருக்கு கிடைக்கும் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், இதன் அளவு காரின் எஞ்சின் தொழில்நுட்பம் மற்றும் ஓட்டும் சூழலைப் பொறுத்து மாறுபடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்தியாவில் எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும். ஆனால், ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கார்களை அறிமுகப்படுத்துவதுடன், E85 மற்றும் E100 எரிபொருட்கள் கிடைக்கும் வசதியையும் விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் இந்த தொழில்நுட்பத்தின் முழுப் பலனையும் பெற முடியும்.

Article Published On: Tuesday, October 27, 2026, 10:03 [IST]
English summary
Flex fuel cars e20 e85 e100 ethanol fuel india
மேலும்... #how to #tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out