அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வருகிறது எலெக்ட்ரிக் டெம்போ டிராவலர்!

இந்தியாவின் வணிக பயணிகள் வாகனச் சந்தையில் முக்கிய இடம் பிடித்துள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், மின்சார வாகனத் தயாரிப்பிலும் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இதற்காக ரூ.3,000 கோடி முதலீட்டு திட்டத்தை கையில் எடுத்துள்ளது.மேலும், வரும் ஜனவரி-மார்ச் இடையிலான காலக்கட்டதில் பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் டெம்போ டிராவலர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா, மருத்துவச் சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஃபோர்ஸ் டிராவலர் வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இந்தப் பிரிவில் புதிய வாய்ப்புகளை உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Force Urbania Deluxe

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் பிரசன் ஃபிரோடியா அளித்த பேட்டியில் எலெக்ட்ரிக் டெம்போ டிராவலர் வேன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். வரும் 2027ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் டெம்போ டிராவலரின் மின்சாரப் பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டுவரவும் நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார். இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

புதிய எலெக்ட்ரிக் டெம்போ டிராவலர் வாகனங்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுவிட்டதாகவும் ஃபிரோடியா தெரிவித்துள்ளார். தற்போது ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) அமைப்பின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளும் இறுதிக்கட்டச் சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் விற்பனை தொடங்கும் என்று அவர் கூறி இருக்கிறார்.

Also Read

பல்வேறு வகைகளில் டிராவலர் EV

மின்சார டிராவலர் தளத்தில் பல்வேறு வாகன வகைகளை அறிமுகப்படுத்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதில் மின்சார ஆம்புலன்ஸ் முக்கியமான மாடல்களில் ஒன்றாக இருக்கும். மருத்துவமனைகள், அவசர மருத்துவச் சேவை நிறுவனங்கள் மற்றும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் சேவைகளுக்கு இந்த வாகனம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் மின்சார டிராவலர் வாகனத்தின் மாதிரியை காட்சிப்படுத்தியிருந்தது. இருப்பினும், அப்போது விற்பனைக்கான தகுதி மற்றும் அனுமதிகள் பெறப்படவில்லை. தற்போது சோதனைகள் மற்றும் ஒப்புதல் நடைமுறைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

Also Read

அர்பானியா மின்சார வாகனம்

டிராவலர் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்திய பிறகு, அர்பானியா (Urbania) வாகனத்தின் மின்சாரப் பதிப்பையும் கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒப்புதல் பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் தேவைப்படும் என நிர்வாக இயக்குநர் ஃபிரோடியா தெரிவித்துள்ளார்.

ரூ.3,000 கோடி முதலீடு

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது எதிர்கால வளர்ச்சிக்காக மொத்தம் ரூ.3,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இந்த முதலீடு மூலமாக மின்சார வாகனத் தொழில்நுட்பம் மட்டுமின்றி, உற்பத்தித் திறன் விரிவாக்கம், பொறியியல் மேம்பாடு, ஹைபிரிட் தொழில்நுட்ப மேம்பாட்டு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படும்.

மின்சார வாகனங்களுக்கான முதலீட்டுடன் தனது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் அதிகரிக்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு 85,000 வாகனங்களைத் தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தித் திறனை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எதிர்கால தேவைகளைச் சமாளிக்க நிறுவனம் தயாராகி வருகிறது.

மின்சார வாகனங்களுக்கு சவால்கள்

வணிகப் பயன்பாட்டு வாகனங்களில் மின்சாரத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது எளிதான காரியமல்ல என நிறுவனம் கருதுகிறது. குறிப்பாக, வாகனத்தின் விலை, ஒருமுறை சார்ஜ் செய்தால் கிடைக்கும் பயணத் தொலைவு மற்றும் சார்ஜிங் கட்டமைப்பு ஆகியவை முக்கியமான சவால்களாக உள்ளன. இதனால் இந்த மாற்றம் படிப்படியாகவே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிப் பேருந்துகளுக்கு அதிக வாய்ப்பு

பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் மின்சாரத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏனெனில், பள்ளிப் பேருந்துகளின் தினசரி பயணத் தொலைவும் வழித்தடங்களும் பெரும்பாலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கும். சுற்றுலா வாகனங்களுடன் ஒப்பிடும்போது சார்ஜிங் திட்டமிடுவதும் எளிதாக இருக்கும்.

இந்தியாவின் வணிக வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களுக்கான மாற்றம் தற்போது தொடக்க நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் மேற்கொள்ளும் ரூ.3,000 கோடி முதலீடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார டிராவலர் மற்றும் ஆம்புலன்ஸ் அறிமுகம் மருத்துவம், சுற்றுலா, பயணிகள் போக்குவரத்துத் துறைகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source: PTI

Article Published On: Sunday, November 8, 2026, 11:05 [IST]
English summary
Force motors electric tempo traveller launch 2027 investment rs 3000 crore
மேலும்... #force motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out