தேர்தலுக்காக தான் வெளியிட்டிங்! புதிய அரசு அமைந்ததும் சென்னையில் மூடிய இந்த ஆலையை திறக்க போறாங்க!
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை தற்போது செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டுள்ள நிலையில் அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக திட்டமிட்டு வரும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் இந்த ஆலையில் தயாரிப்பது துவங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஃபோர்ட்டு நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக தங்கள் காரை விற்பனை செய்து வந்தது. இந்நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடும் நஷ்டம் காரணமாக இந்தியாவில் தனது வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை மொத்தமாக நிறுத்தியது. அப்போது நிறுவனத்திடம் எக்ஸ் ஸ்போர்ட், என்டேவர், ஃபிகோ ஆகிய கார்கள் விற்பனையில் இருந்தன அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தனது தயாரிப்பை நிறுத்தி சர்வதேச அளவில் தொடர்ந்து வளர்ச்சியை கொண்டு வரும் திட்டத்தில் இறங்க அந்நிறுவனம் திட்டமிட்டது.

இந்நிலையில் ஃபோர்டு சர்வதேச அளவில் மீண்டும் இந்தியாவில் உள்ள ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மறைமலைநகர் பகுதியில் உள்ள ஆலையை வரும் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது காடிவாடி தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் இங்கு தயாரிக்கப்படும் கார்கள் எல்லாம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதற்காக தயாரிக்கப்படவில்லை இங்கு தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டத்தை தான் நிறுவனம் வைத்துள்ளது. இதற்காக இந்த ஆலையில் அடுத்த தலைமுறையில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் புதிய இன்ஜினை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஃபோர்டு எவரெஸ்ட் என்ற காரையும் இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 2024ம் ஆண்டு தமிழக அரசுடன் ஃபோர்டு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்து செய்துள்ளது.

2021ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறிய போது இந்த ஆலை முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த ஆலையில் தான் இன்ஜின் தயாரிப்பு என்பது நடந்து வந்தது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 2.35 லட்சம் இன்ஜின்களை தயாரிக்க கூடிய அளவிற்கு வசதிகள் இருந்தன. எந்தெந்த இன்ஜின்கள் எவ்வளவு திறன் கொண்ட இன்ஜின்கள் எவ்வளவு எண்ணிக்கை தயாரிக்க முடியும் என்ற தகவல் இல்லை என்றாலும் தற்போது மீண்டும் அங்கு இங்குதான் தயாரிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக ரூபாய் 3250 கோடியை முதலீடாக கொண்டு வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது ஆலையை துவங்கி தயாரிப்பை துவங்க உள்ள நிலையில் சுமார் 3250 கோடியை முதலீடு செய்து அதன் மூலம் 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் சென்னை ஆலை போக குஜராத்திலும் ஒரு ஆலையை சொந்தமாக வைத்துள்ளது. அந்த ஆலையை தற்போது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு லீஸ் முறையில் வழங்கி உள்ளது. அந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தயாரிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









