இந்தியாவில் எலெக்ட்ரிக் டாக்ஸி சேவையைத் தொடங்கியது வின்ஃபாஸ்டின் கிரீன் SM

வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக கார்களை விற்பனை செய்து வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் டாக்ஸி சேவையிலும் தற்போது கால்பதித்திருக்கிறது வின்ஃபாஸ்ட். ஆனால் நேரடியாக இல்லை, தங்களுடைய துணை நிறுவனமான கிரீன் ஸ்மார்ட் மொபிலிட்டி (Green SM) மூலமாக. இன்று (June 5) இந்தியாவில் அதிகராப்பூர்வமாக தங்களுடைய டாக்ஸி சேவையைத் தொடங்கியிருக்கிறது கிரீன் SM.

முதற்கட்டமாக டெல்லி மற்றும் குர்கயானில் இந்த வின்ஃபாஸ்ட் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்த மக்கள் கிரீன் SM என்ற செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது சாலையில் செல்லும் கிரீன் SM-ன் வாகனங்களை நேரடியாகவும் அனுகலாம். பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே கிரீன் SM செயலி பயன்பாட்டிற்காக இருக்கிறது.

Green SM

ஓலா உபர் போன்ற சேவை கிடையாது இந்த கிரீன் SM உடையது. ஓலா மற்றும் உபர் போன்றை இடைத்தரகர்கள் மட்டுமே. வாடிக்கையாளர்களையும், டாக்ஸி ஓட்டுநர்கள் அல்லது உரிமையாளர்களை இணைக்கும் பாலமாக மட்டுமே ஓலா மற்றும் உபர் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை நேரடியாக களத்தில் வாகனங்களை இயக்குவதில்லை.

ஆனால் கிரீன் SM நிறுவனமானது முழுக்க முழுக்க தங்களது சொந்த வாகனங்களைக் கொண்டு மட்டுமே செயல்படவிருக்கிறது. இதற்காக கார் ஓட்டத் தெரிந்தவர்களை டிரைவர்களாக தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இதனால் முழுமையான ஒரு டாக்ஸி நிறுவனமாக இதனை நாம் பார்க்கலாம். மேலும் டிரைவர்கள் கிரீன் SM நிறுவனத்திற்காகவே முழுமையாக வேலை பார்ப்பவர்கள் என்பதால், கட்டணம் தொடர்பான அனைத்து அம்சங்களும் நிறுவனத்தையே சேரும்.

Limo Green

ஒவ்வொரு முறையும் டிரைவருக்கு ஏற்ப வேறு வேறு கட்டணத்தை பேரம் பேச வேண்டியதில்லை. கிரீன் SM நிறுவனமுமே அதனையே கூறுகின்றன. அனைத்து நேரமும், அனைத்து இடங்களிலும் ஒரே கட்டணம் மற்றும் ஒரே தரத்திலான சேவை சீராக. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பான விஷயம் தான். டெல்லி மற்றும் குர்கயானைக் கடந்து ஒவ்வொரு கட்டமாக இந்தியாவில் மற்ற முக்கிய நகரங்களிலும் இந்த டாக்ஸி சேவையை விரிவுபடுத்தவும் கிரீன் SM திட்டமிட்டுள்ளது.

தங்களின் டாக்ஸி சேவைக்காக வின்ஃபாஸ்டின் லிமோ கிரீன் என்ற எலெக்ட்ரிக் காரை மட்டுமே கிரீன் SM நிறுவனம் பயன்படுத்தவிருக்கிறது. லிமோ கிரீன் என்பது வேறெதுவும் இல்லை, வின்ஃபாஸ்ட் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியிட்ட MPV 7 காரின் வணிகப் பயன்பாட்டு வெர்ஷன் தான். மேலும் தங்களுடைய எலெக்ட்ரிக் டாக்ஸியை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் விதமாக டர்க்கைஸ் ப்ளூ நிறத்திலேயே அனைத்து வாகனங்களையும் இயக்கவும் கிரீன் SM முடிவு செய்திருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி வியட்நாம், லாவோஸ், இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த கிரீன் SM நிறுவனம் டாக்ஸி சேவையை வழங்கி வருகிறது. அந்த நாடுகளிலும் டர்க்கைஸ் ப்ளூ நிறத்திலேயே டாக்ஸி கார்களை இயக்கி வருகிறது கிரீன் SM. அங்கேயும் லிமோ கிரீன் (MPV 7) கார் மாடலையே தங்களுடைய டாக்ஸி சேவைக்கு பிரதானமாக கிரீன் SM நிறுவனம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்கள் கால் செய்தும் இந்த கிரீன் SM டாக்ஸியை புக் செய்யலாம். 92 2885 3333 என்ற எண்ணிற்கு அழைத்து எலெக்ட்ரிக் டாக்ஸியை புக் செய்யலாம். ஆனால் தற்போது டெல்லி மற்றும் குர்கயானில் இருப்பவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். அறிமுக சலுகையாக ஜூன் 11ம் தேதிவரை டாக்ஸி கட்டணத்தில் 50 சதவீதம் அல்லது 250 ரூபாய் வரை தள்ளுபடியும் கிரீன் SM அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா உபர் அல்லது இதர டாக்ஸி சேவைகளில் பெரும் பிரச்சினையாக இருப்பது ஒவ்வொரு முறையும் டிரைவர்கள் ஒவ்வொரு கட்டணம் கேட்பது தான். இதற்கு அனைவருமே தனிப்பட்ட வகையில் இருந்தது, ஒரே குடையில் அல்லது அமைப்பின் கீழ் இல்லாததும் முக்கியக் காரணம். அந்தப் பிரச்சினையை கிரீன் SM தீர்க்கும் என நம்புகிறோம். நம்பகமான ஒரு டாக்ஸி சேவை இந்தியாவிற்குத் தேவையாகவே இருந்து வருகிறது. அதனை கிரீன் SM தீர்க்குமா எனப் பார்க்கலாம்.

Article Published On: Friday, June 5, 2026, 14:08 [IST]
English summary
Green sm electric taxi service launched in india first in delhi and gurgaon
மேலும்... #VinFast #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out