ஹீரோவின் புதிய மைக்ரோ எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் காப்புரிமை பதிவு!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், மின்சார வாகன சந்தையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹீரோவின் விடா பிராண்டின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சிறிய ரக மின்சார காரான NEX 3 தற்போது கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக, இந்த காரில் இடம்பெற்றுள்ள மேல்நோக்கி திறக்கும் இறக்கை வடிவ கதவு (Gullwing Door) அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புதிய மின்சார காருக்கான வடிவமைப்பு காப்புரிமையை (Design Patent) ஹீரோ நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்துள்ளது. இதனால், இதன் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Hero NEX3

புதிய பிராண்டு

ஹீரோ நிறுவனம் தனது எதிர்கால நகர்ப்புற போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியாக விடா நோவஸ் (Vida Novus) என்ற பிராண்டில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருகிறது. இதில் NEX 1, NEX 2, NEX 3 என மூன்று வகையான வாகனங்கள் இடம்பெறுகின்றன. ஏற்கெனவே NEX 2 மூன்று சக்கர வாகனத்திற்கான காப்புரிமையை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது NEX 3 மைக்ரோ மின்சார காருக்கான காப்புரிமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA சர்வதேச வாகன கண்காட்சியில் இந்த கான்செப்ட் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. தற்போது காப்புரிமை படங்கள் வெளியாகியுள்ளதால் இதன் வடிவமைப்பு விபரங்கள் தெரியவந்துள்ளன.

Also Read

கல்விங் வகை கதவுகள்

இந்த காரில் இறக்கை வடிவ கதவுதான் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. வழக்கமான கார்களைப் போல பக்கவாட்டில் திறக்காமல், மேல்நோக்கி உயர்ந்து திறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறுகிய இடங்களில் காரை நிறுத்தும்போதுகூட கதவைத் திறந்து உள்ளே செல்லவும் வெளியே வரவும் எளிதாக இருக்கும்.

மேலும், காரின் அளவுடன் ஒப்பிடும்போது இந்த கதவு மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இதனால் பயணிகள் காருக்குள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் போதுமான இடவசதி கிடைக்கும். கதவு மேல்நோக்கி திறப்பதால் சுற்றுப்புறத்தை தெளிவாகப் பார்க்கவும் முடியும். சிறிய கார்களில் ஏற்படும் நெருக்கமான உணர்வையும் இது குறைக்கலாம்.

Hero NEX3

மைக்ரோ எஸ்யூவி

விடா NEX 3 காரை ஹீரோ நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) என குறிப்பிடுகிறது. இதன் முன்பகுதியில் V வடிவ கிரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதனுடன் செங்குத்தான அமைப்புடன் விளக்குகள், காருக்கு வித்தியாசமான தோற்றத்தை வழங்குகின்றன. பானெட்டில் முழு அகலத்திற்கான எல்இடி விளக்குப் பட்டையும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பக்கவாட்டில் பெரிய அளவிலான அலாய் வீல்கள், குறைந்த உயரமுள்ள டயர்கள் மற்றும் தடிமனான வீல் ஆர்ச்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்க பயணிக்காக பெரிய ஜன்னல் அமைப்பும், மெதுவாகச் சரியும் கூரை வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் அறுகோண வடிவ டிக்கி கதவு தனித்துவமாகக் காட்சியளிக்கிறது.

Also Read

இருக்கை வசதி

இந்த மின்சார கார் இரண்டு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உட்புற அமைப்பு மிகவும் எளிமையாகவும், நவீனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறுகோண வடிவ ஸ்டீயரிங் வீல், இரண்டு வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் மற்றும் எளிமையான டேஷ்போர்டு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காரின் உட்புற வண்ணங்களையும் அமைப்புகளையும் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. சிறிய அளவிலான காராக இருந்தாலும் இரண்டு பேர் வசதியாக அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறப் பயணங்களை மனதில் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்

இந்த காரின் பேட்டரி திறன், மின்சார மோட்டார் செயல்திறன், அதிகபட்ச வேகம் மற்றும் முழுமையான ரேஞ்ச் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்களை ஹீரோ நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் வழிகாட்டும் நேவிகேஷன் வசதி போன்றவை இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்கள் மற்றும் பார்க்கிங் இடப்பற்றாக்குறை போன்ற பிரச்னைகளுக்கு இதுபோன்ற சிறிய மின்சார கார்கள் தீர்வாக அமையும். இயக்குவதற்கு மிகக் குறைந்த செலவு மற்றும் எளிதான பயன்பாடு காரணமாக தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி வணிகப் பயன்பாட்டிற்கும் இவை உதவக்கூடும்.

எப்போது அறிமுகம்

தற்போதைக்கு ஹீரோ விடா NEX 3 காருக்கான வடிவமைப்பு காப்புரிமை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி, விற்பனை அல்லது இந்திய அறிமுகத்திற்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ஹீரோ நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சந்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஹீரோ ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

Article Published On: Thursday, November 12, 2026, 10:22 [IST]
English summary
Hero vida nex 3 electric car patent gullwing door india
மேலும்... #hero motocorp
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out