மீண்டும் அம்பாசடர்? EV கார் உற்பத்திக்காக மேற்குவங்க அரசுடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை!

ஒரு காலத்தில் அம்பாசடர் கார் இந்திய சாலைகளில் கம்பீரமாக வலம் வந்ததுடன் அடையாளமாகவும் இருந்தது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி சாமானியர்களின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத காராக இருந்த அம்பாசடர், கால மாற்றத்தால் சந்தையில் இருந்து வெளியேறியது. இந்தநிலையில், அம்பாசடர் காரை தயாரித்த சிகே பிர்லா குழுமத்தின் அங்கமாக செயல்பட்ட ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் வாகன உற்பத்தியில் களமிறங்குவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளது.

இந்த முறை மின்சார கார்களை தயாரிக்கும் திட்டத்துடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் திட்டங்களை வகுத்துள்ளது. அம்பாசடர் கார் உற்பத்தி செய்யப்பட்ட மேற்குவங்க மாநிலம், உத்தர்பாரா பகுதியிலேயே புதிய ஆலைக்கான நிலம் ஒதுக்குவது தொடர்பாக அந்நிறுவனம் மேற்குவங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

Ambassador

உத்தர்பாராவில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைக்க நிலம் தேவை என அந்நிறுவனம் கோரியுள்ளது. இந்த திட்டம் கூட்டு முயற்சி அடிப்படையில் செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸிடம் தற்போது இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் ஒன்று ஐரோப்பிய நிறுவனத்திடமிருந்தும், மற்றொன்று அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசு நிலம் ஒதுக்கினால், இவற்றில் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் இணைந்து விரிவான திட்டத்தை சமர்ப்பிக்க ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read

மேற்குவங்க அரசும் இந்த முன்மொழிவை பரிசீலித்து வருவதாக மாநில தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த உத்தர்பாரா பகுதி மீண்டும் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் கார் உற்பத்தியில் ஈடுபட முயற்சித்து வருவதால், அனைவரின் மனதிலும் மீண்டும் அம்பாசடர் கார் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் EV உற்பத்திக்கு திரும்பும் முயற்சியை மேற்கொள்வது உண்மைதான். ஆனால், இந்த புதிய திட்டத்தில் அம்பாசடர் காரை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனவே, புதிய EV ஆலை அமைந்தால் அம்பாசடர் மின்சார காராக மீண்டும் வரும் என்று இப்போதே கூற முடியாத நிலை உள்ளது.

Also Read

அதுமட்டுமின்றி, அம்பாசடர் பெயருக்கான வர்த்தக முத்திரை உரிமையும் தற்போது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸிடம் இல்லை. கடந்த 2017ம் ஆண்டு அம்பாசடர் பிராண்டை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியூஜியோ நிறுவனத்திடம் விற்பனை செய்தது. பின்னர் பியூஜியோ ஸ்டெல்லாண்டிஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக மாறியது. எனவே, அம்பாசடர் பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்த வேண்டுமானால் அதற்கான உரிமம் அல்லது ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களும் தேவைப்படும்.

மேலும், அண்மையில் சென்னை அருகே திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையை ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. ஸ்டெல்லாண்டிஸ் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிட்ரோன் கார்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிட்ரோன் கார்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்திற்காக முழு உரிமையையும் ஸ்டெல்லாண்டிஸ் வாங்கி உள்ளது.

எனவே, ஸ்டெல்லாண்டிஸ் மற்றும் ஹிந்துஸ்தான் இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக நெருங்கமான தொடர்பு உள்ளது. இதனை பயன்படுத்தி, ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்துடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கூட்டணி அமைத்தால், அம்பாசடர் பிராண்டை பயன்படுத்துவதற்கும், அதில் புதிய மின்சார கார் மாடலை களமிறக்குவதற்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்த கூற்றுப்படியே அம்பாசடர் கார் மீண்டும் வந்தால் அது பழைய காரை அதே வடிவமைப்பு அம்சங்களுடன் வருமா என்றால், நிச்சயமாக இருக்காது. பழைய டிசைன் அடிப்படையாக கொண்டு நவீன டிசைன் அம்சங்கள் பயன்படுத்தப்படும். அதுவும் மின்சார மாடலாக இருந்தால், பேட்டரி, உட்புற இடவசதி உள்ளிட்ட அம்சங்களில் பல்வேறு மாற்றங்களுடன் புதிய காராகவேதான் கொண்டு வர முடியும். எனவே, அம்பாசடர் மீண்டும் வருகிறது என்று கூற முடியாவிட்டாலும், அம்பாசடரை உருவாக்கிய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் கார் தயாரிப்பில் இறங்குவதற்கான முயற்சிகள் அதன் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

Source: Moneycontrol

Article Published On: Friday, September 25, 2026, 13:34 [IST]
English summary
Hindustan motors ambassador ev car uttarpara west bengal government talks
மேலும்... #hindustan motors #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out