டிசம்பர் 2ல் அறிமுகமாகிறது ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி! இந்தியாவிலேயே உற்பத்தி!

இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் அறிமுக தேதி உறுதியாகி இருக்கிறது. ஹோண்டா 0 ஆல்ஃபா (Honda 0 Alpha) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வரும் டிசம்பர் 2ந் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் அனுப்பி இருக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மூலமாக இது உறுதியாகி இருக்கிறது.

ராஜஸ்தானில் உள்ள ஹோண்டா ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துவதுடன், வளர்ந்து வரும் மின்சார வாகனச் சந்தையிலும் வலுவான இடத்தைப் பிடிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

Honda EV Car

ஹோண்டா ஜீரோ ஆல்ஃபா

ஹோண்டா 0 ஆல்ஃபா காரின் முன்மாதிரி வடிவம் (Prototype) கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. ஹோண்டாவின் புதிய 0 சீரிஸ் எலெக்ட்ரிக் கார்களின் வரிசையில் இடம்பெற உள்ள இந்த மாடல், நகர்ப்புறப் பயன்பாட்டுக்கு ஏற்ற எஸ்யூவியாக உருவாக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காரில், முன்புறம் மற்றும் பின்புறத்தில் தனித்துவமான விளக்குகள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் வடிவமைப்பு, வழக்கமான எஸ்யூவி கார்களில் இருந்து மாறுபட்ட தோற்றத்தை வழங்குகிறது. ஆனால், அதிக இடவசதியை அளிக்கும் என்பதை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் காரின் படங்களை வைத்து யூகிக்க முடிகிறது.

Also Read

தீவிர சோதனை ஓட்டம்

கடந்த சில மாதங்களாக இந்த புதிய ஹோண்டா 0 ஆல்ஃபா எலெக்ட்ரிக் எஸ்யூவி நாட்டின் பல்வேறு இடங்களில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வெவ்வேறு சாலை நிலைகள் மற்றும் காலநிலைகளில் காரின் செயல்திறனை மதிப்பீடு செய்வது இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

நகர்ப்புறச் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் குண்டும் குழியுமான பாதைகளில் காரின் செயல்திறன் சோதிக்கப்பட்டு வருவதுடன், ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், இந்த சாலை சோதனை ஓட்டங்கள் சிறப்பான முடிவுகள் கிடைத்திருப்பதன் காரணமாகவே இந்த ஆண்டு இறுதியில் இந்த காரை இந்தியாவில் வெளியிட ஹோண்டா முடிவு செய்திருக்கிறது. அறிமுகத்தை தொடர்ந்து டிசம்பர் மத்தியில் மீடியா டிரைவ் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த காரின் ஓட்டுதர் அனுபவம் உள்ளிட்ட பல விஷயங்களை நாம் பகிர்ந்து கொள்ள முடியும்.

Also Read

எப்படி இருக்கும்?

ஹோண்டா 0 ஆல்ஃபா கார் உயரமான கூரை அமைப்பு, அகலமான உடல் வடிவமைப்பு மற்றும் சதுர வடிவ சக்கர வளைவுகள் இடம்பெற்றுள்ளன. தனித்துவமான விளக்குகள் மற்றும் பின்புறத்தில் பெரிய கண்ணாடியுடன் கூடிய டெயில்கேட் ஆகியவை இதன் முக்கிய வடிவமைப்பு அம்சங்களாக உள்ளன.

காரின் உட்புறத்தில் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், இறுதி தயாரிப்பு மாடலில் இடம்பெற உள்ள வசதிகள் குறித்த முழுமையான விவரங்களை ஹோண்டா இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ராஜஸ்தானில் உற்பத்தி

ஹோண்டா 0 ஆல்ஃபா எலெக்ட்ரிக் காரை ராஜஸ்தானின் தபுகெரா ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1,200 கோடி முதலீடு செய்யும் திட்டம்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்தக் காரை உள்நாட்டில் விற்பனை செய்வதுடன், வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்வதன் மூலம் உள்ளூர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப காரை உருவாக்குவதிலும், சரியான விலையை நிர்ணயிப்பதிலும் ஹோண்டா கவனம் செலுத்த முடியும். இதனால், இந்தக் கார் நிறுவனத்தின் இந்தியச் சந்தை வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உலகளாவிய எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் திட்டத்திற்கும் முக்கியமானதாக இருக்கும்.

புதிய தேர்வாக மாறும்

ஹோண்டா 0 ஆல்ஃபா காரின் பேட்டரி திறன், எலெக்ட்ரிக் மோட்டாரின் செயல்திறன், முழுமையான சார்ஜில் பயணிக்கக்கூடிய தொலைவு மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. டிசம்பர் 2ந் தேதி நடைபெற உள்ள அறிமுக நிகழ்வில் காரின் தயாரிப்பு வடிவம் மற்றும் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, ஹோண்டா 0 ஆல்ஃபா எலெக்ட்ரிக் எஸ்யூவி மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், எம்ஜி இசட்எஸ் இவி உள்ளிட்ட மின்சார எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.

Article Published On: Wednesday, October 14, 2026, 10:03 [IST]
English summary
Honda 0 alpha electric suv india debut december 2
மேலும்... #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out