டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் புத்தம் புதிய ஹோண்டா 7 சீட்டர் எஸ்யூவி!

பெரிய ரக எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க ஹோண்டா நிறுவனம் புதிய ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ஹோண்டா அவான்சியர் (Honda Avancier) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவி வரும் டிசம்பர் 1ந் தேதி உலகளவில் அறிமுகமாக உள்ளது. மேலும், இதே நாளில்தான் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் இடையே போட்டா போட்டி உருவாகும் என தெரிகிறது.

Honda Avanciar

ஹோண்டா நிறுவனத்தின் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே சிஆர்-வி எஸ்யூவி விற்பனையில் உள்ளது. இருப்பினும், புதிய அவான்சியர் அதைவிட மேலான ரகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், சிஆர்-வி காரின் அடிப்படையிலான மாடலாக இல்லாமல், முற்றிலும் புதிய பெரிய ரக எஸ்யூவியாக உருவாக்கப்படுகிறது.

இந்த கார் 4,960 மிமீ நீளமும், 1,950 மிமீ அகலமும், 1,690 மிமீ உயரமும் உடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளத்தை நெருங்கும் இந்த எஸ்யூவியில் மூன்று வரிசை இருக்கைகள் இடம்பெறும். மொத்தம் ஏழு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

Also Read

ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர் புகைப்படங்களில் காரின் முன்பக்கத்தில் மெல்லிய எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. முக்கிய ஹெட்லைட்டுகள் பம்பரின் கீழ்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் காருக்கு நவீன இரட்டை அடுக்கு ஹெட்லைட் வடிவமைப்பு கிடைத்துள்ளது.

பக்கவாட்டு பகுதியில் நீளமான தோற்றத்துடன், பின்புறம் சற்றே சரிவான கண்ணாடி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் இரண்டு விளக்குகளையும் இணைக்கும் முழு அகல எல்இடி லைட் பார் இடம்பெறுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வழக்கமான பெட்டி வடிவ எஸ்யூவியை விட வித்தியாசமான தோற்றத்தை இந்த கார் பெற்றுள்ளது.

Also Read

இந்த காரில் புதிய தலைமுறை ஹைபிரிட் தொழில்நுட்பம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மின்சார மோட்டார்கள் இணைக்கப்பட்டு இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலம் சிறப்பான செயல்திறனும் எரிபொருள் சிக்கனமும் கிடைக்கும்.மமேலும், மின்சார மோட்டார்கள் மூலம் இயங்கும் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரின் உட்புற புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சிஆர்-வி காரைவிட உயர்ந்த பிரிவில் நிலைநிறுத்தப்படுவதால் பிரீமியம் கேபின் வசதிகள் இடம்பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை பயணிகளுக்கு போதுமான இடவசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு இருக்கைகள் கொண்ட மாடலாக மட்டுமல்லாமல், இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் கொண்ட ஆறு இருக்கை தேர்வும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட வசதிகளுடம் இருக்கும்.

புதிய அவான்சியர் மற்றும் அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் ஆகிய இரண்டு கார்களும் ஒரே நாளில் அறிமுகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த புதிய எஸ்யூவி தாய்லாந்தில் தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட வலதுபுறம் ஸ்டீயரிங் அமைப்பு கொண்ட சந்தைகளையும் இலக்காக கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜப்பான் சந்தையிலும் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கான திட்டம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு அவான்சியர் வந்தால், ஹோண்டா நிறுவனத்தின் முதன்மையான எஸ்யூவியாக உருவெடுக்கலாம். குறிப்பாக டீசல் இன்ஜினுக்கு மாற்றாக ஹைபிரிட் தொழில்நுட்பத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையலாம்.

Article Published On: Wednesday, November 11, 2026, 13:11 [IST]
English summary
Honda avancier 7 seater suv global debut fortuner rival
மேலும்... #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out