ஹோண்டா எலிவேட் காருக்கு ரூ.2.34 லட்சம் வரை ஆஃபர்... ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே!!
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது கார் மாடல்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. விரைவில் புதிய எலிவேட் வர இருக்கும் நிலையில், தற்போதைய மாடலுக்கு அதிகபட்சமான சேமிப்பை பெறும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், இரண்டாம் தலைமுறை அமேஸ், புதிய தலைமுறை அமேஸ், புதிய சிட்டி மற்றும் எலிவேட் எஸ்யூவி ஆகிய நான்கு மாடல்களுக்கும் அதிகபட்சமாக ரூ.2.34 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த சலுகைகள் அக்டோபர் 31, 2026 வரை செல்லுபடியாகும். சலுகைகள் மாடல், வேரியண்ட், மற்றும் விற்பனை செய்யப்படும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

ஹோண்டா அமேஸ் (இரண்டாம் தலைமுறை)
அக்டோபர் மாதத்தில் ஹோண்டா அமேஸ் இரண்டாம் தலைமுறை காருக்கு அதிகபட்சமாக ரூ.57,600 மதிப்பிலான பலன்கள் கிடைக்கின்றன. குறைந்த விலையில் செடான் கார் வாங்க விரும்புவோருக்கு இந்த சலுகை கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.6.97 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது. விசாலமான உட்புறம், 420 லிட்டர் பூட் இடவசதி, சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த ஆரம்ப விலை ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ்
மூன்றாம் தலைமுறை புதிய ஹோண்டா அமேஸ் காருக்கு அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.66,800 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.7.65 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படும் இந்த புதிய தலைமுறை கார், நவீன வடிவமைப்பு மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 90 எச்பி ஆற்றலை வழங்குகிறது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. உயர்நிலை மாடலில் ஓட்டுனர் உதவி தொழில்நுட்பம், நெடுஞ்சாலைகளில் தடத்தை கண்காணிப்பு வசதி, 8 அங்குல தொடுதிரை மற்றும் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி
ஹோண்டா சிட்டி வாங்குபவர்களுக்கு இந்த மாதம் அதிகபட்சமாக ரூ.1,70,900 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த காரின் ஆரம்ப விலை ரூ.11.99 லட்சமாக உள்ளது. வேரியண்ட் மற்றும் வாடிக்கையாளர் தகுதியைப் பொறுத்து சலுகைகளின் தொகுப்பு மாறக்கூடும். எனவே, முன்பதிவு செய்வதற்கு முன்பு அருகிலுள்ள விற்பனையாளரிடம் முழுமையான விவரங்களை உறுதி செய்வது அவசியம்.
சிட்டி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 121 எச்பி சக்தியை வழங்க வல்லது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. விசாலமான உட்புறம், சிறப்பான ஓட்டுதல் அனுபவம், ஓட்டுனர் உதவி தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் தோற்றம் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

ஹோண்டா எலிவேட்
இந்த அக்டோபர் மாதத்தில் ஹோண்டா கார்களில் மிகப்பெரிய சலுகை எலிவேட் எஸ்யூவிக்கே வழங்கப்படுகிறது. நாளை மறுதினம் புதிய எலிவேட் கார் வர இருக்கும் நிலையில், இருப்பில் உள்ள எலிவேட் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.2,34,600 வரை சேமிப்புப் பெறும் வாய்ப்பு உள்ளது. எலிவேட்டின் ஆரம்ப விலை ரூ.11.80 லட்சமாக நிர்ணயிக்ப்பட்டு இருக்கிறது.
எலிவேட் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 458 லிட்டர் பொருள் வைக்கும் இடம், ஓட்டுனர் உதவி தொழில்நுட்பம் மற்றும் உயரமான எஸ்யூவி வடிவமைப்பு ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.
குறிப்பு: மேற்கண்ட தொகைகள் அனைத்தும் அதிகபட்ச சேமிப்புச் சலுகைகள் மற்றும் பலன்களைக் குறிக்கின்றன. இந்த சலுகைகள் ஒவ்வொரு மாடல், வேரியண்ட் மற்றும் நகரத்தை பொறுத்து மாறுபடும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களும் கிடைக்கலாம். இந்த சலுகைகள் வரும் அக்டோபர் 31, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications



