சுதந்திர தின ஆஃபர்: ஹோண்டா கார்களுக்கு ரூ.2.45 லட்சம் வரை சலுகை... எந்த காருக்கு அதிக டிஸ்கவுண்ட்?

சுதந்திர தினத்தையொட்டி, இந்த மாதம் ஹோண்டா கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் கார்களுக்கான சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டுள்ளோரை கவரும் வகையில் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் வேரியண்ட்டுகள் மற்றும் நகரங்களை பொறுத்து மாறுபடும். எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சலுகை என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

Honda Elevate New

ஹோண்டா எலிவேட்

ஹோண்டா எலிவேட் எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.2.45 லட்சம் வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக எலிவேட் எஸ்யூவியின் ZX MT மற்றும் CVT வேரியண்ட்களில் இந்த அதிகபட்ச சேமிப்பு பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இதில் கேஷ் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி மற்றும் கார்ப்பரேட் சேமிப்புச் சலுகைகள் உள்ளன. மேலும், நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை மற்றும் சில கூடுதல் ஆக்சஸெரீகளை பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

எலிவேட் V வேரியண்ட்டுகளில் பேக்கேஜைப் பொறுத்து ரூ.1.79 லட்சம் முதல் ரூ.2.01 லட்சம் வரையிலும், VX வேரியண்டில் ரூ.1.49 லட்சம் முதல் ரூ.1.57 லட்சம் வரையிலும் அதிகபட்ச பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த தொகை முழுவதும் நேரடி கேஷ் டிஸ்கவுண்ட் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி காரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.95,000 வரை அதிகபட்சமான சேமிப்பு பெறலாம். இதில் ரூ.30,000 கேஷ் டிஸ்கவுண்ட், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.4,000 லாயல்டி மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் பலன் ஆகியவை அடங்குகின்றன. இந்த சலுகை குறிப்பிட்ட சிட்டி வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கும் சுதந்திர தினச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மூன்றாம் தலைமுறை அமேஸ் ZX MT வேரியண்ட்டில் அதிகபட்சமாக ரூ.67,000 வரை பலன் கிடைக்கிறது. இதில் கேஷ் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி, கார்ப்பரேட் மற்றும் வாரண்டி தொடர்பான பலன்கள் இடம்பெறுகின்றன. மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமேஸ் வேரியண்ட்டுகளிலும் ரூ.28,000 முதல் ரூ.58,000 வரை பலன்கள் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

மொத்தத்தில், இந்த மாதம் ஹோண்டா கார்களில் அதிகபட்ச சேமிப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு எலிவேட் காருக்கு அதிகபட்ச சேமிப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையில் எக்ஸ்சேஞ்ச், லாயல்டி, கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் ஆக்சஸெரீகள் உள்ளிட்டவை இடம்பெறுவதால், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கிடைக்கும் உண்மையான தள்ளுபடி மாறுபடலாம். எனவே, முன்பணம் செலுத்துவதற்கு முன்பு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலரிடம் சலுகையின் முழுமையான பிரேக்அப்பை கேட்டுப் பெறுவது நல்லது.

Article Published On: Saturday, August 8, 2026, 12:20 [IST]
English summary
Honda cars august 2026 offers discounts amaze city elevate
மேலும்... #honda #honda cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X