ஹோண்டா அப்படி என்னதாங்க தப்பு பண்ணுச்சு... ஒரு வருடமான போதிலும் 5 ஆயிரத்தை தாண்டாத கார்கள் விற்பனை!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) 2025 டிசம்பர் மாதத்தின் தனது மாதாந்திர விற்பனை விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிகள் உட்பட மொத்தமாக 8,159 கார்களை விற்றுள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 9,460 ஹோண்டா கார்களுடன் ஒப்பிடுகையில் 13.75% சரிவாகும், அதாவது 1,301 யூனிட்கள் குறைவாகும்.

எனினும், இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் ஏழு எஸ்யூவி ரக கார்கள் உட்பட 10 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த ஹோண்டா பெரிய திட்டங்களை வைத்துள்ளது. 2025 டிசம்பர் மாதத்தில், ஹோண்டா உள்நாட்டுச் சந்தையில் 5,807 கார்களை விற்பனை செய்துள்ளது. அதேவேளையில், ஜப்பான் உட்பட உலகளாவிய சந்தைகளுக்கு 2,352 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

2025 december honda cars sales report

குறிப்பாக, இந்தியாவில் எலிவேட் என அறியப்படும் டபிள்யூ.ஆர்-வி (WR-V) எஸ்யூவி கார் ஆனது ஜப்பானுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் ஒரு முக்கிய மாடல் ஆகும். உள்நாட்டு விற்பனையைப் பொறுத்தவரை, 2025 டிசம்பரில் பதிவாகியுள்ள 5,807 ஹோண்டா கார்கள் விற்பனை ஆனது, 2024 டிசம்பரின் 5,603 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 3.64% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி ஆகும்.

அதாவது, 204 யூனிட்கள் அதிகமாகும். மேலும், 2025 நவம்பரில் விற்கப்பட்ட 5,204 ஹோண்டா கார்களுடன் ஒப்பிடுகையில், இது 11.59% வளர்ச்சி (603 யூனிட்கள் அதிகம்) ஆகும். ஆனால், ஹோண்டா கார்கள் ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2025 டிசம்பரில் 2,352 ஹோண்டா கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2025 december honda cars sales report

இது 2024 டிசம்பரில் ஏற்றுமதி செய்யப்பட்ட 3,857 ஹோண்டா கார்களுடன் ஒப்பிடுகையில் 39.02% சரிவாகும். இதனால் ஏற்றுமதியில் 1,505 யூனிட்கள் குறைவு ஏற்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்), ஹோண்டா மொத்தமாக 25,865 கார்களை இந்தியாவில் விற்றுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் விற்கப்பட்ட 20,266 ஹோண்டா கார்களுடன் ஒப்பிடுகையில் 14.54% சரிவைக் குறிக்கிறது.

கடந்த 3 மாதங்களில், 17,405 ஹோண்டா கார்கள் உள்நாட்டுச் சந்தையிலும், 8,460 கார்கள் உலகளாவிய சந்தைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவில், ஹோண்டா தற்போது சிட்டி (City), சிட்டி ஹைப்ரிட் (City Hybrid), அமேஸ் (Amaze), எலிவேட் (Elevate) என நான்கு கார் மாடல்களை விற்பனை செய்கிறது. இதில், அமேஸ் சமீபத்தில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது.

2025 december honda cars sales report

சிட்டி செடான் கார், புதிய ஃபேஸ்லிஃப்டை அப்கிரேடைப் பெற ஆயத்தமாகி வருகிறது. அத்துடன் எலிவேட் எஸ்யூவி கார் சமீபத்தில் ஒரு சிறப்பு 'அட்வென்ச்சர் எடிஷன்' (Adventure Edition) மாடலைப் பெற்றது. 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஹோண்டா தனது இந்தியாவிற்கான எதிர்கால திட்டங்களை அறிவித்தது. இதன்படி, 2030ஆம் நிதியாண்டிற்குள் ஏழு எஸ்யூவி கார்கள் உட்பட 10 புதிய ஹோண்டா மாடல்கள் இந்தியச் சந்தையில் அறிமுகமாக உள்ளன.

சிட்டி செடானுக்கு இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பதிப்பு அடுத்ததாக வரவுள்ளது. மேலும், ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் காரான 'ஹோண்டா 0 ஆல்ஃபா' (Honda 0 Alpha) 2027ஆம் நிதியாண்டில் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவின் 'ஹாலோ தயாரிப்புகளில்' ஒன்றாக 'ப்ரீலூட்' என்கிற இரு கதவு கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை முற்றிலுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்வது குறித்தும் ஹோண்டா பரிசீலித்து வருகிறது.

Honda Cars Sales Dec 2025 Sales Vs Diff % Growth
Dec-25 5,807 Dec 2024 (YoY) 204 3.64
Dec-24 5,603 Nov 2025 (MoM) 603 11.59
Nov-25 5,204 - - -
Honda Cars Dec-25 Dec-24 Diff %
Domestic 5,807 5,603 204 3.64
Exports 2,352 3,857 -1,505 -39.02
Total 8,159 9,460 -1,301 -13.75
Honda Cars Q4 CY 25 Q4 CY 24 Diff %
Domestic 17,405 16,154 1,251 7.74
Exports 8,460 14,112 -5,652 -40.05
Total 25,865 30,266 -4,401 -14.54

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) அமலாக்கத்திற்குப் பிறகு கிடைத்த நேர்மறையான உத்வேகத்துடன் டிசம்பர் மாதத்தை நல்ல வளர்ச்சிப் புள்ளி விவரங்களுடன் ஹோண்டா நிறைவு செய்துள்ளது. ஹோண்டா அமேஸ், சிட்டி, எலிவேட் உள்ளிட்ட அனைத்து மாடல்களுக்கும் வலுவான தேவை தொடர்ந்து நிலவியது. 2026ஆம் ஆண்டு இந்தியாவில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கும் இந்த ஜப்பானிய கார் நிறுவனம் இந்த ஆண்டு பல தயாரிப்பு அறிமுகங்களுக்கு திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 3, 2026, 16:12 [IST]
English summary
Honda cars india sold totally 5807 cars in india in december 2025 check all details here
மேலும்... #honda cars #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X