அட்ராசக்கை... ஹோண்டா கார்களுக்கு ரூ.2.44 லட்சம் வரை சலுகை... முழு விபரம்

புதிய ஹோண்டா கார்களை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு செப்டம்பர் மாதம் கூடுதல் சேமிப்பை வழங்கும் வகையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹோண்டா அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய மூன்று மாடல்களுக்கும் கணிசமான ஆஃபர்களை பெறும் வாய்ப்பு உள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள சலுகைகளின்படி அதிகபட்சமாக ரூ.2.45 லட்சம் வரை சேமிப்பு பலன்களை பெறும் வாய்ப்புள்ளது.

ஹோண்டா அமேஸ், அமேஸ் காரின் இரண்டாம் தலைமுறை, சிட்டி மற்றும் எலிவேட் கார்களை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சேமிப்புச் சலுகைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு புக்கிங் செய்வது அவசியம்.

Honda Amaze

ஹோண்டா அமேஸ் ஆஃபர் விபரம்

ஹோண்டாவின் பிரபலமான காம்பேக்ட் செடான் மாடலான அமேஸ் காருக்கு தற்போது ரூ.66,800 வரை ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூ.7,65,400 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற இடவசதி, கச்சிதமான வடிவமைப்பு மற்றும் நவீன வசதிகள் ஆகியவை அமேஸின் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

Honda City

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு 70,000 வரை சிறப்பு சலுகைகள்

ஹோண்டா சிட்டி ஆஃபர் விபரம்

மிட்சைஸ் பிரீமியம் செடான் பிரிவில் பிரபலமான ஹோண்டா சிட்டி காருக்கு அதிகபட்சமாக ரூ.1,51,900 வரை சேமிப்பு பலன்களை பெற முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.11,99,900 என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலுடன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட e:HEV மாடலும் கிடைக்கிறது. ஹைப்ரிட் பதிப்பு 27.26 கிமீ/லிட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

Honda Elevate

ஹோண்டா எலிவேட் ஆஃபர் விபரம்

இந்த மூன்று மாடல்களிலும் அதிகபட்ச சலுகையை ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காருக்கு பெற முடியும். இந்த காருக்கு ரூ.2,44,600 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த கார் ரூ.11,80,700 எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மேலும், தனித்துவமான சிறந்த எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கும், ஹோண்டாவின் சிறந்த எஞ்சின் மீதான நம்பிக்கை கொண்டுள்ளோருக்கும் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

Also Read

மேற்கண்ட சலுகைகளில் இடம்பெறும் ஆஃபர்கள், டிஸ்கவுண்ட் உள்ளிட்டவை தேசிய அளவில் பொருந்துவதாக வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் காரின் வேரியண்ட்டையும், உங்களது நகரத்தை பொறுத்து சலுகைகள் மாறுபடக்கூடும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளும் இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

எனவே, முன்பதிவு செய்வதற்கு முன் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலரிடம் நேரடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், கார்ப்பரேட் சலுகை மற்றும் இதர சேமிப்பு குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக் கொள்வது நல்லது. இந்த ஆஃபர்கள் வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை செல்லுபடியாகும். உங்களது பகுதியில் கிடைக்கும் உண்மையான ஆஃபர்களை தெரிந்துகொள்ள அருகிலுள்ள ஹோண்டா டீலரை அணுகுவது சிறந்தது.

Article Published On: Thursday, September 3, 2026, 13:03 [IST]
English summary
Honda cars september 2026 offers amaze city elevate up to rs 2 44 lakh benefits
மேலும்... #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X