நாளை அறிமுகமாகும் ஹோண்டா கார்களின் விலை இவ்வளவு தானா? புக்கிங் போட எல்லாரும் ஆவலா இருக்காங்க!

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் அடுத்ததாக சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மற்றும் இசட்.ஆர்-வி ஹைப்ரீட் கார்களை நாளை மே 22ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன் மற்றும் முற்றிலும் புதிய இசட்.ஆர்-வி ஆகும். இந்த இரு கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மிக சில ஹோண்டா கார்கள் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றுள் ஒன்று, ஹோண்டா சிட்டி ஆகும். தாழ்வான செடான் வகையை சேர்ந்த காரான சிட்டிக்கு ஒரு சமயத்தில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்களின் அறிமுகத்தினால் ஹோண்டா சிட்டியை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

honda city facelift and zr-v launch

இந்த நிலையை மாற்றி மீண்டும் சிட்டி காரை மக்களின் ஃபேவரட் ஆக மாற்றும் முயற்சியாக சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை மே 22ஆம் தேதியில் ஹோண்டா அறிமுகம் செய்கிறது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் சிட்டி காரின் முன்பகுதியில் மாற்றங்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். முன்பக்கத்தில் க்ரில் இன்னும் அகலமானதாக வழங்கப்பட உள்ளது.

எல்இடி ஹெட்லைட்கள் மெல்லியதான தோற்றத்திலும், புதிய டிசைனிலான முன்பக்க பம்பரில் ஃபாக் விளக்குகள் இடம் மாற்றப்பட்டதாகவும் வழங்கப்பட உள்ளன. மேலும், பம்பரில் ஃபாக் விளக்குகளுக்கான குழிகள் முக்கோண வடிவில் வழங்கப்பட உள்ளன. ஹோண்டா நிறுவனத்தின் லோகோ க்ரில் பகுதியில் இருந்து பொனெட்டிற்கு மாற்றப்படுகிறது. இவற்றுடன், சிட்டி காரின் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்பட உள்ளது.

honda city facelift

சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. காருக்குள் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா மற்றும் அப்டேட்டான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை புதியதாக எதிர்பார்க்கப்படுகின்றன. மற்றப்படி, தற்போது வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் பவர்டிரெயின் தான் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் வழங்கப்படும்.

மே 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள மற்றொரு காரான ஹோண்டா இசட்.ஆர்-வி காரை பொறுத்தவரையில், இது சற்று விலையுயர்ந்த எஸ்யூவி வகை காராக களமிறக்கப்பட உள்ளது. சில வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த காரின் நீளம் 4,568மிமீ, அகலம் 1,840மிமீ மற்றும் உயரம் 1,620மிமீ ஆகும்.

முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,657மிமீ ஆகும். அதாவது, அந்த அளவிற்கு பிரம்மாண்டமானதாக புதிய ஹோண்டா இசட்.ஆர்-வி உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹோண்டா எலிவேட் காரை காட்டிலும் புதிய இசட்.ஆர்-வி ஆனது தாழ்வானது மற்றும் அகலமானது ஆகும். இந்த காரில் 2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 180 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. தொழிற்நுட்ப வசதிகளாக, கனெக்டிவிட்டி வசதிகள் உடன் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், பவர்டு டிரைவர் சீட், கண்ட்ரோல்கள் உடன் ஸ்டீயரிங் சக்கரம், மாடர்ன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் திரை, பவர்டு டெயில்கேட் மற்றும் ADAS உள்ளிட்டவை இசட்.ஆர்-வி காரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தோற்றத்தில் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.50 லட்சத்தில் இருந்து ரூ.20.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகையால், சிட்டி காரின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்பது உறுதி. ஆனால், புதிய ஹோண்டா இசட்.ஆர்-வி ஆனது சுமார் ரூ.40 லட்சம்- ரூ.50 லட்சம் அளவிலான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், அதன் விற்பனை கொஞ்சம் சுமாராகவே இருக்கும்.

Article Published On: Thursday, May 21, 2026, 15:43 [IST]
English summary
Honda city facelift and zr v cars will be launch on may 22 in india
மேலும்... #honda #honda city #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+