27 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஹோண்ட கார்.. ஆனா வாங்கத் தான் ஆளில்லை!

சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்டது ஹோண்டா. ஃப்ரஷ்ஷான டிசைன், கூடுதல் வசதிகள் மற்றும் முந்தைய மாடலில் இருந்த அதே பவர்ட்ரெயினுடன் புதிய சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த மேம்படுத்தப்பட்ட காரின் மைலேஜ் குறித்த தகவல்களை ஹோண்டா பகிர்ந்து கொண்டுள்ளது. புதிய சிட்டி செடான் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

மைலேஜ் குறித்த அளவுகளைப் பார்ப்பதற்கு முன்னாள், புதிய செடானில் கொடுக்கப்பட்டிருக்கும் பவர்ட்ரெயின் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இந்த மிட்-சைஸ் செடான் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் + எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரண்டு பவர்ட்ரெயின் தேர்வுகளை ஹோண்டா கொடுத்திருக்கிறது.

Honda City

சிட்டி செடானில் கொடுக்கப்பட்டு வரும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினானது 121 hp பவர் மற்றும் 145 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்டெப் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிட்டி செடான் ஹைபிரிட் மாடலில் மேலே பார்த்த 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயின் e-CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை உள்ளடக்கியிருக்கிறது. இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் செட்டப்பானது ஒட்டுமொத்தமாக 126 hp பவர் மற்றும் 253 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Honda City

ஹோண்டா பகிர்ந்து கொண்ட தகவல்களின் படி பெட்ரோல் மேனுவல் பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 17.77 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் CVT ஆட்டோமேட்டிக் பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 17.97 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இறுதியாக அதிக மைலேஜைக் கொடுப்பது சிட்டி ஹைபிரிட் மாடல் தான். இது லிட்டருக்கு 27.26 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

அதிக மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்கள் கண்ணை மூடிக் கொண்டு சிட்டி ஹைபிரிட் மாடலை வாங்கலாம். ஆனால் பெட்ரோல் இன்ஜின் மாடலுடன் ஒப்பிடும் போது சிட்டி ஹைபிரிட் மாடலின் விலை சற்று அதிகம் தான். மேம்படுத்தப்பட்ட சிட்டி செடானை, SV, V, ZX மற்றும் ZX+ என நான்கு வேரியன்ட்களாக வெளியிட்டுள்ளது ஹோண்டா.

இதில் ஹைபிரிட் பவர்ட்ரெயினானது டாப் எண்டான ZX+ வேரியன்டில் மட்டுமே கிடைக்கிறது. ஹைபிரிட் பவர்ட்ரெயின் மற்றும் சிட்டியில் கொடுக்கப்படும் அனைத்து மேம்பட்ட வசதிகளையும் கொண்ட ZX+ வேரியன்டை 21 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இதுவே பெட்ரோல் இன்ஜின் கொண்ட ZX+ வேரியன்டானது மேனுவல் கியர்பாக்ஸுடன் 16.15 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் 17.15 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த சிட்டி செடானை குறைவான விலையில் வாங்க வேண்டம் என்றால் அடிப்படையான SV வேரியன்டைத் தான் வாங்க வேண்டும். இந்த வேரியன்டானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட அடிப்படையான SV வேரியன்டை 12 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

இடைநிலையாக இருக்கும் V மற்றும் ZX ஆகிய இரண்டு வேரியன்ட்களும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர்பாக்ஸ் தேர்வுகளுடனும் கிடைக்கின்றன. இவற்றை 13.30 லட்சம் ரூபாய் முதல் 16.26 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைபிரிட் இந்தியாவில் தொடக்கநிலையில் இருந்த காலத்தில் இருந்த சிட்டியில் ஹைபிரிட் பவர்ட்ரெயினையும் ஹோண்டா வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களில் ஒன்றாக இந்த சிட்டி செடான் இருந்து வருகிறது. ஒரு மிட்-சைஸ் காருக்கு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் என்பது மிகச் சிறப்பான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Monday, May 25, 2026, 22:31 [IST]
English summary
Honda city facelift mileage revealed for both petrol and hybrid
மேலும்... #honda #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out