ரூ.12 லட்சம் மட்டுமே விலைனு சொல்லி அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா கார்! வாங்கும்போது உஷாரா இருக்கனும்!

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிப்புற மற்றும் உட்புற அம்சங்கள் என பெரிய அளவில் சிட்டி அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ரூ.12 லட்சத்தில் இருந்து துவங்கும் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் எஸ்வி, வி, இசட்.எக்ஸ், இசட்.எக்ஸ்+ மற்றும் இசட்.எக்ஸ்+ ஹைப்ரீட் என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு வேரியண்ட்டிலும் என்னென்ன மாதிரியான அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எஸ்வி (SV): விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் டர்ன் சிக்னல்கள் உடன் இரு விதமாக செயல்படக்கூடிய எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பின்பக்கத்தில் Z-எட்ஜ் வ்ராப் அரவுண்ட் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்தில் க்ரில்லின் மேற்பகுதி ஆனது கருப்பு நிறத்திலும், மேற்கூரையில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா ஆனது காரின் உடல் நிறத்திலும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.

honda city facelift variant-wise features

பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளில் டர்ன் இண்டிகேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், அலாய் சக்கரங்கள் கிடைக்காது; அதற்கு பதிலாக 15-இன்ச் இரும்பு சக்கரங்களே கிடைக்கும். உட்புறத்தில் டபுள்-டோனில் கேபினை துணியால் ஆன அப்ஹோல்ஸ்டரி உடன் இந்த வேரியண்ட்டில் பெறலாம். கியர் லிவருக்கு லெதர் கிடைக்கும். அதேபோல், கேபினுக்குள் வண்ண விளக்குகள் கிடைக்கும்.

வி (V): மேற்கூறப்பட்ட எஸ்வி வேரியண்ட்டின் அம்சங்கள் உடன் கூடுதலாக கிரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட அலாய் சக்கரங்களை இந்த வேரியண்ட்டில் பெறலாம். பின்பக்கத்தில் டெயில்லைட்கள் இரண்டும் தெளிவான லென்ஸ் உடன் கிடைக்கும். உட்புறத்தில் டோர் ஹேண்டில்கள் பிரீமியம் தரத்திலான க்ரோம் ஃபினிஷ் உடன் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் ஹோண்டாவின் டெக் பேக்கை பெறலாம்.

honda city facelift variant-wise features

இந்த டெக் பேக் ஆனது டெலிமேட்டிக்ஸ் கண்ட்ரோல் யூனிட் உடன் ஹோண்டா கனெக்ட் வசதியை வழங்கக்கூடியது ஆகும். இது மட்டுமின்றி, ஸ்மார்ட்வாட்ச் கனெக்டிவிட்டி மற்றும் அலெக்ஸா உடன் இணைந்து செயல்படும் வசதிகளையும் இந்த டெக் பேக் வழங்குகிறது. சிட்டி வி வேரியண்ட்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி மற்றும் ADAS ஆகியவற்றை பெறலாம்.

இசட்.எக்ஸ் (ZX): இந்த வேரியண்ட்டில் அலாய் சக்கரங்கள் 16 இன்ச்சில் டைமண்ட் கட் டிசைனில் கிடைக்கும். மேலும், தொடுதல் மூலமாக செயல்படும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் மெஷ் இன்செர்ட்கள் உடன் கருப்பு நிறத்திலான முன்பக்க பம்பர் உள்ளிட்டவற்றையும், உட்புறத்தில் லெதர் அப்ஹோல்ஸ்டரி, ட்யூயல்-டோன் கேபின், லெதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம் உள்ளிட்டவற்றையும் இந்த வேரியண்ட்டில் பெறலாம்.

இசட்.எக்ஸ்+: இந்த வேரியண்ட்டில் அலாய் சக்கரங்கள் பெர்லினா கருப்பு & டார்க்-க்ளீயர் கட் ஃபினிஷிங்கில், காரின் உடல் நிறத்திலான ட்ரங்க் லிப் ஸ்பாய்லர் உடன் கிடைக்கும். மேற்கூறப்பட்ட வேரியண்ட்களை காட்டிலும் ஸ்போர்டியான கேபின் உடன் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர் விண்டோஸ், ரிமோட் சன்ரூஃப் மற்றும் தன்னிச்சையாக மடங்கக்கூடிய டோர் மிரர்கள் உள்ளிட்டவை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசட்.எக்ஸ்+ ஹைப்ரீட்: மேற்கூறப்பட்ட இசட்.எக்ஸ்+ வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்தும் அம்சங்களையும் இந்த வேரியண்ட்டிலும் பெறலாம். அதேநேரம், வேரியண்ட்டின் பெயருக்கேற்ப கூடுதலாக ஹைப்ரீட் பவர்டிரெயினை பெறலாம். அதாவது, பெட்ரோல் என்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார் கிடைக்கும். ஹைப்ரீட் ஆப்ஷனை 2026 சிட்டி காரில் இந்த ஒரு வேரியண்ட்டில் மட்டுமே பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா சிட்டி ஆனது இந்தியாவில் நீண்ட வருட வரலாறு கொண்ட செடான் வகையை சேர்ந்த கார் ஆகும். இத்தகைய கார் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனும்போது புதிய சிட்டி காரை வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படுவது இயல்பே. அவ்வாறு இந்த காரை வாங்க விரும்புபவர்கள் மேற்கூறப்பட்ட வேரியண்ட்களுள் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து வாங்கலாம்.

Article Published On: Saturday, May 23, 2026, 11:41 [IST]
English summary
Honda city facelift variant wise features list sv v zx plus check all details here
மேலும்... #honda city #honda cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+