ஹோண்டா சிட்டி காரை 12 லட்ச ரூபாயில் வாங்குவதற்கு பதில் இது பெஸ்ட்டு... ஹூண்டாயில் இப்படியொரு காரா?

ஹோண்டா நிறுவனத்தில் இருந்து புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் எப்போதுமே சிறப்பாக விற்பனையாகும் ஹோண்டா சிட்டி காருக்கு புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது. விற்பனையில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் வழக்கம்போல் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது.

இந்த இரு கார்களும் விரைவில் இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறவுள்ளன. இதேபோல், ஹூண்டாய் வெர்னா காரையும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காருக்கு மாற்றாக வாங்கலாம். வெர்னாவும் சமீபத்தில்தான் 2026ஆம் ஆண்டிற்கான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றது. இந்த நான்கு செடான் ரக கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

honda city facelift rivals

மற்ற மூன்று செடான் கார்களுடன் ஒப்பிடுகையில் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை சற்று அதிகமாக உள்ளது. அதேநேரம் அவற்றில் பவர்ஃபுல்லான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ஹூண்டாய் வெர்னாவில் கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் கிடைக்கிறது. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், ஹோண்டா சிட்டி நீளத்தில் வளர்ந்துள்ளது.

Dimensions City FL Verna FL Virtus Slavia
Length (mm) 4594 4565 4561 4541
Width (mm) 1748 1765 1752 1752
Height (mm) 1489 1475 1507 1507
Wheelbase (mm) 2600 2670 2651 2651
Boot Space (Liters) 506L 528L 521L 521L
Fuel Tank 40L 45L 45 45
Wheel Size (Inches) 16" 16" 16" 16"
Tyre Size 185/55-R16 205/55-R16 205/55-R16 205/55-R16
Ground Clearance (mm) Not Disclosed Not Disclosed 179 179
Price Ex-sh in Lakh Rupees 12 - 21 10.98 - 18.25 10.5 - 19 10 - 1799

இதன் மூலமாக, மற்ற மூன்று செடான் கார் மாடல்களை காட்டிலும் நீளத்தில் அதிகமானதாக சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் உள்ளது. காரின் நீளம் அதிகமாகி இருப்பினும், முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தில் ஹோண்டா சிட்டி பின்தங்கி உள்ளது. மற்ற மூன்று செடான் மாடல்களிலும் கூடுதல் இடைவெளி உடன் முன் மற்றும் பின் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.

honda city facelift rivals

இதன் விளைவாக காருக்குள் கேபின் அளவு அதிகமாக கிடைக்கும். பெட்ரோல் டேங்க் ஆனது மற்ற மூன்று கார்களில் 45 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படும் நிலையில், சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் வெறும் 40 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படுகிறது. அதேபோல், பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான பூட் ஸ்பேஸ் அளவிலும் மற்ற மூன்று கார்களை விட ஹோண்டா சிட்டி ஆனது அளவில் சிறியதாக உள்ளது.

இதுமட்டுமின்றி, டயர்களின் அளவுகளிலும் மற்ற 3 கார்களும் 205-பிரிவுக்கு மாறிவிட்ட நிலையில், ஹோண்டா சிட்டி இன்னமும் 185-பிரிவை தொடர்கிறது. மற்ற மூன்று கார்களும் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஐந்து நட்சத்திரங்களை பெற்றுள்ளன. ஆனால், சிட்டி கார் இன்னும் அவ்வாறான ரேட்டிங்கை பெறவில்லை. ADAS, ஓட்டுனரால் பார்க்க முடியாத கண்காணிக்கும் வசதி, 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை சிட்டி மற்றும் வெர்னா கார்களில் மட்டுமே கிடைக்கின்றன.

Safety City FL Verna FL Virtus Slavia
Crash Rating - 5 Star (GNCAP) 5 Star (GNCAP) 5 Star (GNCAP)
Airbags 6 6 6 6
TPMS Optional Yes Yes Yes
ESP Yes Yes Yes Yes
TCS Yes Not Disclosed Yes Yes
360 Camera Yes Yes - -
Blind-View Monitor Yes Yes - -
ADAS Level-2 Level-2 - -
honda city facelift rivals

என்ஜின் சிஸ்டத்தை பொறுத்தவரையிலும், மற்ற மூன்று கார் மாடல்களிலும் டர்போ என்ஜின் வழங்கப்படும் நிலையில், சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் டர்போ என்ஜின் ஆப்ஷன் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. இதனால் கிடைக்கும் இயக்க ஆற்றல் அளவும் சிட்டி காரில் சற்று குறைவாகவே உள்ளது. அதுமட்டுமின்றி, மைலேஜும் குறைவாக கிடைப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

Powertrains City FL Verna FL Virtus Slavia
Petrol 1.5L 4-Cyl NA 1.5L NA 4-cyl /
1.5L Turbo 4-cyl
1.0L Turbo 3-cyl /
1.5L Turbo 4-cyl
1.0L Turbo 3-cyl /
1.5L Turbo 4-cyl
Power in bhp 89 113 / 158 113 / 148 113 / 148
Torque in Nm 145 143.8 / 253 178 / 250 178 / 250
Gearbox Options 6MT, CVT 6MT / IVT / DCT 6MT / 6TC / 7DSG 6MT / 6TC / 7DSG
Fuel Efficiency in km/l 17.77 MT
17.97 CVT
- 1.0 MT 20.08
1.0 TC 18.45
1.5 MT 18.88
1.5 DSG 19.62
1.0 MT 20.32
1.0 TC 18.73
1.5 DSG 19.36
Hybrid 1.5L 4-Cyl +
E Drive
- - -
Engine Power in bhp 98 - - -
Engine Torque in Nm 131 - - -
Motor Power in bhp 108 - - -
Motor Torque in Nm 253 - - -
Gearbox eCVT - - -
Fuel Efficiency in km/l 27.26 - - -

இந்த குறைப்பாடுகள் எல்லாத்தையும் சரிசெய்யும் விதமாக சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் தொழிற்நுட்ப அம்சங்களை ஹோண்டா நிரப்பி உள்ளது. இருப்பினும், வெர்னா மட்டுமே பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் இரண்டையும் இணைத்ததாக பெறுகிறது. இந்த நான்கு செடான் கார் மாடல்களும் ஆட்டோ ஹெட்லைட்கள் மற்றும் மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் உடன் வருகின்றன.

Attributes City FL Verna FL Virtus Slavia
Headlights LED Projector LED Projector LED Projector LED Projector
Tail Lights LED LED, Connected LED LED
Fog Lights - - Yes Yes
Cornering Lights - - Yes -
DRLs LED, Connected LED, Connected LED LED
Auto Headlights Yes Yes Yes Yes
Auto Wipers Yes Yes Yes Yes
Front Parking Sensors Yes Yes - -
Rear Parking Sensors Yes Yes Yes Yes
360-degree Camera Yes Yes - -
Dashcam - Yes - -
Auto Folding ORVMs Yes Yes Yes Yes
Brakes Front Disc
Rear Drum (ICE), Rear Disc e:HEV
Front Disc
Rear Disc
Front Disc
Rear Drum
Front Disc
Rear Drum
Infotainment Screen 10.1 10.25" 10.1" 10"
Wireless Android Auto Yes With Adapter Yes Yes
Wireless Apple CarPlay Yes With Adapter Yes Yes
Speakers 8 8 ~8 ~8
Subwoofer - - Yes Yes
Instrument Screen Semi Digital, 7" MID 10.25" TFT 8" TFT 8" TFT
Auto Climate Control Single-Zone Single-Zone Single-Zone Single-Zone
Wireless Charger Yes Yes Yes Yes
Ventilated Seats Yes, Front Yes, Front Yes, Front Yes, Front
Seat Adjust Manual Electric Front, Driver's Memory, Welcome Function Electric Front Electric Front
Boss Mode - Powered - -
Rear AC Vents Yes Yes Yes Yes
Rear Sun Blinds Yes, Windshield Yes, Windows - -
Paddle Shifters Yes Yes Yes Yes
Handbrake Manual ICE
Electronic e:HEV
Electronic Manual Manual
IRVM Auto Dimming Auto Dimming Auto Dimming Auto Dimming
Upholstery Leatherette Leatherette Leatherette Leatherette
Sunroof Single-Pane Single-Pane Single-Pane Single-Pane
Armrest Front & Rear Front & Rear Front & Rear Front & Rear
Keyless Entry Yes Yes Yes Yes
Push-Button Start Yes Yes Yes Yes
Telematics Suite Yes Yes Yes Yes
honda city facelift rivals

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் இந்த நான்கு செடான் கார் மாடல்களை பற்றியும் விரிவாக பார்க்கவில்லை. இருப்பினும் பார்த்தவரையில், மற்ற மூன்று கார்களை காட்டிலும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் பின்தங்கி உள்ளதை கூறியே ஆக வேண்டும். இத்தனைக்கும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்ற பின்பும் இதே நிலைமை தான் நீடிக்கிறது. ஆனால், மற்ற மூன்று மாடல்களை காட்டிலும் அதிகமாக ரூ.12 லட்சத்தில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு செடான்களுள் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் கார் ஆகும்.

Article Published On: Sunday, May 24, 2026, 11:36 [IST]
English summary
Honda city facelift vs hyundai verna facelift vs skoda slavia vs volkswagen virtus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X