ஹோண்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்கு வேறு நிறுவன எஞ்சின்? இந்தியாவுக்காக அதிரடி திட்டம்!

இந்தியாவின் சிறிய எஸ்யூவி சந்தைக்குள் களமிறங்க ஹோண்டா தயாராகி வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்கு 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை வேறு நிறுவனத்திடம் இருந்து பெற ஹோண்டா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எஞ்சின் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா நிறுவனத்தின் கார்களைப் பொறுத்தவரை எஞ்சின் தொழில்நுட்பம் எப்போதுமே மிக முக்கியமான பலமாக இருந்து வருகிறது. செயல்திறன், எரிபொருள் சிக்கனம் மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றிற்கு ஹோண்டா நிறுவனம் உலக அளவில் பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்காக புதிய எஸ்யூவிக்கான எஞ்சினை வேறு நிறுவனத்திடம் இருந்து பெறும் முயற்சியில் இறங்கி உள்ளது.

Honda Elevate

(Representational Purpose - Honda Elevate)

தற்போது இந்தியாவில் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களை ஹோண்டா பயன்படுத்தி வருகிறது. ஆனால், அதிகரித்து வரும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள், எரிபொருள் சிக்கனம் மற்றும் சிஎன்ஜி, ஹைபிரிட் போன்ற மாற்று தொழில்நுட்பங்களுக்கான தேவை ஆகியவை கார் நிறுவனங்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. இவற்றிற்கு ஏற்றாற்போல் புதிய எஞ்சினை உருவாக்குவதும், அதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நேரமும, இதற்கான செலவீனமும் அதிகமாக இருக்கும்.

Also Read

எனவே, நேரத்தையும், செலவையும் கட்டுப்படுத்தும் வகையில் புதிய பெட்ரோல் எஞ்சினை வேறு நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரெனோ மற்றும் கீலி நிறுவனங்களின் கூட்டணியில் உள்ள ஹார்ஸ் பவர்ட்ரெயின் நிறுவனத்துடன் ஹோண்டா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆட்டோகார்இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஹார்ஸ் பவர்ட்ரெயின் நிறுவனம் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் உள்ளிட்ட எஞ்சின் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அக்டோபர் 17ஆம் தேதி அறிமுகமாக உள்ள புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைபிரிட் மாடலில் ஹார்ஸ் நிறுவனத்தின் 1.8 லிட்டர் ஹைபிரிட் தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள மேலும் பல வாகன உற்பத்தியாளர்களுக்க எஞ்சின் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை செய்யவும் ஹார்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

Also Read

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலேயே எஞ்சின்களை தயாரிக்கும் உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்தும் ஹார்ஸ் பவர்ட்ரெயின் நிறுழனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படும் எஞ்சின்கள் மூலம் உற்பத்தி செலவை குறைக்க முடியும். இதன்மூலமாக இந்திய நிறுவனங்களுக்கு சரியான விலையில் எஞ்சின்களை சப்ளை செய்ய முடியும். அத்துடன் இந்திய காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் போட்டியிடும் ஹோண்டாவுக்கு முக்கியமானதாகவும் அமையும்.

ஹோண்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த வாகனம் ஹோண்டா ஏற்கனவே இந்தோனேசியாவில் பயன்படுத்தும் ஒரு தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையில் இருக்கும் என்றும், வரும் 2028 அக்டோபரில் தொடங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்த புதிய மாடலின் மூலம் நான்கு மீட்டருக்குள் உள்ள எஸ்யூவி சந்தையில் ஹோண்டா மீண்டும் நுழைய உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO போன்ற மாடல்கள் வலுவாக உள்ள நிலையில், இந்த பிரிவில் போட்டியிட ஹோண்டா தனது தயாரிப்பை இந்திய தேவைகளுக்கு ஏற்றவாறு உருவாக்க திட்டமிட்டுள்ளது. வரும் 2028ம் ஆண்டில் இந்த புதிய மாடல் அறிமுகமாகும் என்று ஹோண்டா ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இதற்காக காரை உருவாக்கும் முறையிலும் ஹோண்டா மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது. வாகன வடிவமைப்பு மற்றும் பொறியியல் பணிகளில் டாடா டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தகவல் மற்றும் பொழுதுபோக்கு அமைப்புக்கான பணிகளில் டிசிஎஸ் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வடிவமைப்பு, சோதனை மற்றும் உதிரிபாக சப்ளையர் நெட்வொர்க்கை மேம்படுத்துவது போன்ற பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டு புதிய கார்களை விரைவாக உருவாக்குவதே நோக்கமாக உள்ளது.

பொதுவாக ஒரு புதிய தலைமுறை காரை உருவாக்க ஹோண்டாவுக்கு குறைந்தது 49 மாதங்கள் வரை தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதை சுமார் 30 மாதங்களாக குறைக்கும் நோக்கத்துடன் புதிய செயல்முறையை உருவாக்க நிறுவனம் முயற்சி செய்கிறது. இருப்பினும், இது ஹோண்டாவின் எதிர்கால வாகன மேம்பாட்டு இலக்காக எடுத்துக்கொள்ள முடியும். புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக காலக்கெடுவாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக உலகளாவிய மாடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து மாற்றங்களை செய்வதற்கு பதிலாக, ஆரம்பத்திலேயே இந்திய சந்தையின் விலை மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை கருத்தில் கொண்டு காரை உருவாக்குவதாக இருக்கிறது. வாகனத்தின் செயல்திறன் மற்றும் தரத்துக்கான பொறுப்பை ஹோண்டா வைத்துக்கொள்ளும் நிலையில், வடிவமைப்பு, சோதனை மற்றும் சப்ளையர் தொடர்பான பணிகளில் கூட்டணி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

கார் உருவாக்கப் பணிகளில் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் காரின் விலையை மிக சரியாக வைத்திருக்க ஹோண்டா முயற்சி செய்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் இருந்து முதல் காருக்கு மாறும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது இந்த புதிய எஸ்யூவியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

Source: Autocarindia

Article Published On: Monday, September 28, 2026, 10:15 [IST]
English summary
Honda compact suv get horse 1 2 litre engine india
மேலும்... #honda cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out