அக்.6ந் தேதி அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி கார்: புக்கிங் தொடங்கியது!

இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனையிலும், வர்த்தகத்திலும் எலிவேட் மிட்சைஸ் எஸ்யூவி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மிக கடுமையாக உள்ள இந்த சூழலில், சந்தைப் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் எலிவேட் எஸ்யூவிக்கு புதிய அப்டேட்டுகளை கொடுத்து களமிறக்க உள்ளது ஹோண்டா நிறுவனம்.

வரும் 6ந் தேதி இந்தியாவில் புதுப்பொலிவுடன் கூடிய எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வருவதை இன்று ஹோண்டா உறுதி செய்துள்ளது. அத்துடன், இந்த புதிய மாடலுக்கான முன்பதிவும் இன்று துவங்கியது. ரூ.21,000 செலுத்தி இந்த புதிய மாடலை வாங்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Honda Elevate Facelift

ஹோண்டா வெளியிட்ட அதிகாரப்பூர்வ டீசரின் படி, புதிய எலிவேட் எஸ்யூவியின் முன்பகுதியில் கணிசமான டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய முகப்பு கிரில், புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய டிசைனிலான பம்பர் ஆகியவை காரின் தோற்றத்திற்கு கூடுதல் பொலிவை சேர்க்கின்றன. பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தில் லேசான மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உட்புறத்தைப் பொறுத்தவரை, கேபினில் பிரீமியம் அனுபவத்தை அதிகரிக்கும் வகையில் புதிய வண்ணக்கலவையிலான பாகங்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு அமைப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் பல புதிய வசதிகளை ஹோண்டா இதில் அறிமுகப்படுத்துகிறது.

Also Read

தற்போதைய மாடலை விட அளவில் பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இதில் வழங்கப்படவுள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியுடன் இது செயல்படும். கோடைக் காலத்தில் கேபினில் சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் காற்று வசதியுடன் கூடிய முன்பக்க வென்டிலேட்டட் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறுகிய நகரச் சாலைகளிலும், நெரிசல்மிக்க இடங்களில் காரை சுலபமாக பார்க் செய்ய ஏதுவாக 360-டிகிரி கேமரா வசதி வழங்கப்பட உள்ளது. ஓட்டுனரின் பாதுகாப்பை உறுதி செய்யும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பம் மேலும் துல்லியமாக இயங்கும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவை இதில் அடங்கும்.

Also Read

வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மாற்றங்கள் இருந்தாலும், எஞ்சின் தேர்வில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. தற்போதைய மாடலில் உள்ள அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5-லிட்டர் ஐ-விடெக் (i-VTEC) பெட்ரோல் எஞ்சின் தொடர வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டிரான்ஸ்மிஷனைப் பொறுத்தவரை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி (CVT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

இந்திய சாலைகளுக்கு ஏற்ற கரடுமுரடான மேடு பள்ளங்களை எளிதாகக் கடக்க உதவும் 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் குடும்பப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் உடமைகளை வைத்து செல்வதற்கான தாராளமான 458 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவை இந்த மாடலிலும் தொடரும்.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் டாடா கர்வ் ஆகிய விற்பனையில் முன்னணியில் உள்ள எஸ்யூவிக்களுக்கு புதிய ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் நேரடி போட்டியாக இருக்கும்.

தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா எலிவேட் மாடல் ரூ.11.91 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. புதிய வசதிகள் மற்றும் அப்டேட்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலையில் சற்று உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 6ந் தேதி விலை மற்றும் டெலிவிரிப் பணிகள் குறித்த விபரங்களை ஹோண்டா வெளியிட உள்ளது.

Article Published On: Thursday, October 1, 2026, 13:27 [IST]
English summary
Honda elevate facelift 2026 launch date confirmed india bookings open
மேலும்... #honda #honda cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out