ரூ.11.80 லட்சத்தில் புதிய ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!!

இந்தியாவில் நடுத்தர ரக எஸ்யூவி சந்தை தொடர்ந்து போட்டி நிறைந்ததாக மாறி வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் காரின் புதுப்பிக்கப்பட்ட மாடலை இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அறிமுகமான எலிவேட் எஸ்யூவி முதல்முறையாக புதிய மாற்றங்களுடன் கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ளது.

புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவிக்கு ஆரம்ப விலை ரூ.11.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்வி, வி, விஎக்ஸ், இசட்எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் பிளஸ் என ஐந்து வகைகளில் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இசட்எக்ஸ் பிளஸ் என்ற வேரியண்ட் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.

Honda Elevate Facelift

முன்புற வடிவமைப்பில்தான் புதிய எலிவேட் எஸ்யூவியில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய முன்பக்க கிரில், மாற்றியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எல்இடி பகல்நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. முகப்பு விளக்குகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டு தோற்றம் பெரிதாக மாறவில்லை என்றாலும், புதிய அலாய் சக்கரங்கள் காருக்கு கூடுதல் புதுமையான தோற்றத்தை வழங்குகின்றன.

Also Read

பின்புறத்திலும் சில மாற்றங்களை ஹோண்டா செய்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட எல்இடி பின்புற விளக்குகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பம்பர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, பழைய எலிவேட் எஸ்யூவியின் அடிப்படை வடிவத்தை தக்க வைத்துக்கொண்டே, புதிய தலைமுறை ஹோண்டா கார்களின் வடிவமைப்பு பாணிக்கு நெருக்கமாக இந்த மாடலின் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது.

Honda Elevate Facelift

உட்புறத்திலும் புதிய எலிவேட் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற்றுள்ளது. முன்பு இருந்த பழுப்பு நிறத்துக்கு பதிலாக புதிய நிறங்களுடன் கூடிய உட்புற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முழுவதும் கருப்பு நிற உட்புறத்தையும் தேர்வு செய்யலாம். மேலும், உட்புற பொருட்களின் தரம் மற்றும் வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

வசதிகளை பொறுத்தவரை, புதிய எலிவேட் எஸ்யூவியின் முன்புறம் மற்றும் பின்புறம் வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுனருக்கு எட்டு வழிகளிலும், முன்பக்க பயணிக்கு நான்கு வழிகளிலும் இருக்கையை எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் முறையில் மாற்றிக் கொள்ளலாம். ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், காற்று சுத்திகரிப்பு வசதி மற்றும் டைப் சி போர்ட் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Also Read

பாதுகாப்பு அம்சங்களில் முக்கிய மாற்றமாக 360 டிகிரி கேமரா சேர்க்கப்பட்டு உள்ளது. முன்புறம் மற்றும் பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இடம்பெற்றிருந்த ஹோண்டா சென்சிங் பாதுகாப்பு தொகுப்பில் வேகக்கட்டுப்பாடு, தடத்தை கண்காணிப்பு செய்யும் வசதி மற்றும் மோதல் தடுப்பு வசதிகள் தொடர்கின்றன.

புதிய எலிவேட்டி எஸ்யூவியில் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 119 எச்பி பவரையும், 145 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

புதிய எலிவேட் எஸ்யூவியில் ஹைபிரிட் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இல்லை என்பது தெரிய வந்துள்ளது. வழக்கமான பெட்ரோல் எஞ்சின் மட்டும் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. புதிய எலிவேட் எஸ்யூவிக்கு முன்பதிவு ஏற்கனவே ரூ.21,000 முன்பணத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

தற்போது கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வசதிகளுடன் வந்துள்ள இந்த மாடல் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் உள்ளிட்ட மாடல்களுக்கு இது தொடர்ந்து போட்டியாக இருக்கும்.

Article Published On: Tuesday, October 6, 2026, 20:07 [IST]
English summary
Honda elevate facelift 2026 launched india price features specs
மேலும்... #new launches #honda cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out