மாருதி, டொயோட்டாவிற்கு 'செக்' வைக்க வரும் ஹோண்டா கார்! ஒரு முடிவோடதான் இருக்காங்க!

இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டா (Honda) நிறுவனத்தின் கார் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே ஹோண்டா நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறி விடும் என யூகங்கள் கிளம்பின. ஆனால் அதை எல்லாம் மறுத்த ஹோண்டா நிறுவனம், இந்திய சந்தையில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக தற்போது இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் கார் விற்பனை உயர தொடங்கியுள்ளது. ஹோண்டா நிறுவனம் வெகு சமீபத்தில் சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Honda City Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் காரணமாக கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்தில், ஹோண்டா சிட்டி காரின் விற்பனை 150 சதவீதம் உயர்ந்துள்ளது.

Honda Elevate

இந்த வரிசையில் அடுத்ததாக எலவேட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹோண்டா (Honda Elevate Facelift) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் ஒரு பகுதியாக எலவேட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டத்தை ஹோண்டா நிறுவனம் இந்திய சாலைகளில் தற்போது தொடங்கியுள்ளது. இது குறித்து மோட்டார்பீம் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா எலவேட் காரில், 1.5 லிட்டர் i-Vtec பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த இன்ஜின் ஆப்ஷன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அப்படியே வழங்கப்படும்.

Honda City Facelift

இதனுடன் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜினை, எலவேட் காரிலும் ஹோண்டா நிறுவனம் வழங்கினால் நன்றாக இருக்கும்.

ஹோண்டா எலவேட் காரின் நேரடி போட்டி மாடல்களான மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற கார்களில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. எனவே ஹோண்டா நிறுவனம் எலவேட் காரில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்கினால், அது மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு எல்லாம் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

ஆனால் எலவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஹோண்டா நிறுவனம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் டிசைனில் நாம் ஏராளமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதாவது முன் பகுதியில் புதிய க்ரில் அமைப்பு, புதிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள், புதிய அலாய் வீல்கள் போன்றவற்றை ஹோண்டா எலவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நம்மால் எதிர்பார்க்க முடியும்.

அதே நேரத்தில் தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அடாஸ் பாதுகாப்பு தொகுப்பில் கூடுதல் வசதிகள் போன்ற பல்வேறு புதிய வசதிகளும் ஹோண்டா எலவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற காரணங்களால் விலை சற்று உயர்த்தப்படலாம். அனேகமாக ஹோண்டா எலவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா எலவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்தில் ஹோண்டா எலவேட் காரின் விற்பனை 16 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், ஹோண்டா எலவேட் காரின் விற்பனை உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Tuesday, June 16, 2026, 12:43 [IST]
English summary
Honda elevate facelift testing commenced in india expected price engine features
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out