2 லட்சம் ரூபாய் கம்மியான விலையில் இந்தக் காரை வீட்டுக்கு ஓட்டி வரலாம்.. அரிய வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க
இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் மூன்றே கார்களில் எலிவேட் (Elevate) எஸ்யூவியும் ஒன்று. கடும் போட்டி மிகுந்த மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் பிரிவில் எலிவேட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மே மாதம் இந்த எலிவேட் எஸ்யூவிக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது ஹோண்டா. இந்த எஸ்யூவி எப்படி இருக்கும், சலுகைகளுடன் வாங்குவதற்கு ஏற்றதா என்பதையெல்லாம் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இந்த மே மாதம் எலிவேட் மிட்-சைஸ் எஸ்யூவிக்கு 2.12 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை அளித்துள்ளது ஹோண்டா. அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் மூன்று கார் மாடல்களில் எலிவேட் எஸ்யூவிக்கே அதிக சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. 40,000 ரூபாய் மதிப்புடைய தள்ளுபடி, 30,000 மதிப்புடைய எக்சேஞ்சு போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸ் ஆகியவை மே மாதத்திற்கான எலிவேட் எஸ்யூவியின் சலுகையில் அடங்கும்.

இது 2026ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல்களுக்கான சலுகைகளே. 2025ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எலிவேட் கார்களை இன்னும் கூடுதல் சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அருகில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப்களில் ஸ்டாக் இருப்பைப் பொறுத்து இதனை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த சலுகைகளுடன் 7 ஆண்டுகள் வரையிலான கூடுதல் வாரண்டியையும் சலுகை விலையில் இந்த மே மாதம் ஹோண்டா வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எலிவேட் எஸ்யூவி யாருக்கெல்லாம் ஏற்றதாக இருக்கும் என்பதைப் பார்ப்பதற்கு முன்னாள், இந்தக் கார் குறித்து அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை முதலில் பார்த்து விடலாம். இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடலை SV, V, VX, ZX, ZX பிளாக் மற்றும் அட்வென்சர் எடிஷன் என ஆறு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது ஹோண்டா.

இந்தக் காரில் ஒரேயொரு இன்ஜின் தேர்வு தான். அது 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தான். இந்த இன்ஜினானது 121 hp பவர் மற்றும் 145 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளை ஹோண்டா கொடுத்திருக்கிறது.
அடிப்படையான SV வேரியன்ட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. மற்ற அனைத்து வேரியன்ட்களையும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளுடனும் நாம் வாங்கலாம். 11.60 லட்சம் ரூபாய் முதல் 16.57 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹோண்டாவின் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சரி இப்போது இந்தக் கார் யாருக்கு சரியான தேர்வாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம். எலிவேட் எஸ்யூவியை முதன்மையாக நகரப் பயன்பாட்டிற்கு வாங்குகிறீர்கள் என்றால் ஓகே. உங்கள் தேர்வு சிறப்பானது தான். CVT கியர்பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால் ஸ்டாப் அண்டு கோ டிராஃபிக்கில் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். மேனுவல் கியர்பாக்ஸை நகரப் பயன்பட்டிற்கு பரிந்துரைக்க முடியாது.
அதிகளவில் நெடுஞ்சாலைப் பயணங்களை மேற்கொள்பவர் அல்லது நீண்ட தூரப் பயணங்கள் அதிகம் செய்பவர் என்றால் இந்தக் காரை வாங்கும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் போதுமான பன்ச்சை இந்தக் கார் கொடுக்குமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். மற்ற கார்கள் வேகமாக ஓவர்டேக் செய்து செல்லும் போது எலிவேட் கொஞ்சம் தடுமாறித்தான் போகும். அதுவும் முழுமையான லோடுடன் சற்று சிரமம் தான்.
இதுதவிர போட்டியாளர்கள் வழங்கும் ஃபிளாஷியான அம்சங்கள் சிலவற்றை இந்த எலிவேட் எஸ்யூவியை வாங்குவதன் மூலம் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் ஓகே என்றால் இந்த மிட்-சைஸ் எஸ்யூவியை தாராளமாக வீட்டிற்கு ஓட்டி வரலாம். இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்டு விட்டாரா, மாருதி விக்டோரில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்த ஹோண்டா எலிவேட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சலுகைகளுடன் சற்று குறைவான விலையில் கூட நம்முடைய தேவைக்கு ஏற்ற காரைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம். அந்த வகையில் மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டு ஹோண்டா எலிவேட் உங்களுக்கான காராக இருக்குமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். இந்த சில குறைகளைத தவிரத்து எலிவேட் தினசரிப் பயன்பாட்டிற்கான சிறப்பான எஸ்யூவி என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications