ஒரு காலத்துல சிங்கம் மாதிரி இருந்த கம்பெனி! இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஹோண்டா?

இந்தியாவில் ஹோண்டா (Honda) நிறுவன கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. இதன் காரணமாக இந்திய சந்தையை விட்டு ஹோண்டா நிறுவனம் வெளியேறி விடுமோ? என்ற சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ஹோண்டா நிறுவனம் இதை மறுத்தது. அத்துடன் இந்திய சந்தையில் கார்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க தொடங்கியது.

இதற்கு தற்போது பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. ஹோண்டா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 5,111 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 3,950 கார்களை மட்டுமே ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

Honda City Facelift

அதாவது இம்முறை 1,161 கார்களை ஹோண்டா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 29 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சிக்கு ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் ஹோண்டா சிட்டி (Honda City) ஆகிய 2 கார்கள்தான் மிக முக்கியமான காரணமாக உள்ளன.

ஹோண்டா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,998 அமேஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 2,660 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இம்முறை 662 ஹோண்டா அமேஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 33 சதவீத வளர்ச்சி ஆகும்.

Honda Elevate

அதேபோல் ஹோண்டா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 491 சிட்டி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 1,227 ஹோண்டா சிட்டி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இம்முறை 736 ஹோண்டா சிட்டி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 150 சதவீத வளர்ச்சி ஆகும்.

ஹோண்டா சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் வரும் மாதங்களிலும் ஹோண்டா சிட்டி காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், ஹோண்டா எலவேட் (Honda Elevate) விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதாவது கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 1,461 ஹோண்டா எலவேட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,224 ஆக குறைந்துள்ளது. அதாவது இம்முறை 237 ஹோண்டா எலவேட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 16 சதவீத வீழ்ச்சி ஆகும்.

ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்த 3 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதில், ஹோண்டா அமேஸ் காரின் ஆரம்ப விலை 6.98 லட்ச ரூபாயாக உள்ளது. இது 2வது தலைமுறை மாடலின் விலை ஆகும். புதிய தலைமுறை மாடலின் ஆரம்ப விலை 7.51 லட்ச ரூபாயாக இருக்கிறது.

ஹோண்டா நிறுவனம் அமேஸ் காருக்கு மட்டும், அதன் 2வது தலைமுறை மற்றும் புதிய தலைமுறை என்று 2 மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஹோண்டா சிட்டி காரின் ஆரம்ப விலை 12 லட்ச ரூபாய் ஆகவும், ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை 11.60 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஹோண்டா நிறுவனம் அடுத்ததாக ஹோண்டா இஸட்ஆர்-வி (Honda ZR-V) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாது. மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். எனவே வரி உள்ளிட்ட காரணங்களால் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும்.

அனேகமாக ஹோண்டா இஸட்ஆர்-வி காரின் ஆரம்ப விலை அனேகமாக 40 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் ஜீப் மெரிடியன் (Jeep Meridian), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டேரான் (Volkswagen Tayron) ஆகிய கார்களுக்கு எல்லாம் இது போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையை விட்டு வெளியேறி விடுமோ என கருதப்பட்ட ஹோண்டா நிறுவனம், வளர்ச்சி பாதையில் பயணித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 10 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், எலெக்ட்ரிக் காரும் அடங்கும். எனவே இந்திய சந்தையை விட்டு ஹோண்டா வெளியேறுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.

Article Published On: Monday, June 15, 2026, 13:15 [IST]
English summary
Honda india registers 29 per cent growth in may 2026 thanks to city facelift amaze
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out