புதிய ஹைபிரிட் எஸ்யூவியை வெளியிட்ட ஹோண்டா.. இதோட மைலேஜ் தான் ஹைலைட்டே.. எவ்வளவு கொடுக்குதுன்னு தெரியுமா?

மேம்படுத்தப்பட்ட சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்ட கையோடு, இந்தியாவில் முதல் முறையாக ப்ரீமியமான எஸ்யூவியான ZR-V ஹைபிரிட்டையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. விரைவில் இந்தக் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டு, முன்பதிவும் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. ஜூலை மாதம் இரண்டாம் பாதியில் இருந்து இந்த ஹைபிரிட் எஸ்யூவியின் டெலிவரியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது ஹோண்டா.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கும் ZR-V ஹைபிரிட் எஸ்யூவி காரில், 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் அடங்கிய ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த செட்டப்பானது ஒட்டுமொத்தமாக 184 hp பவர் மற்றும் 315 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த செட்டப்பில் பவரானது e-CVT கியர்பாக்ஸ் மூலம் முன்பக்க வீலுக்கு அனுப்பப்படுகிறது.

Honda ZR-V Hybrid Backside

இந்த பவர்ட்ரெயின் செட்டப் மூலமாக மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 8 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டுள்ளது ஹோண்டா ZR-V ஹைபிரிட். அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது. இந்த வேகம் எலெக்ட்ரானிக்கலாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லிட்டருக்கு 22.8 கிமீ மைலேஜையும் இந்த ZR-V ஹைபிரிட் கொடுக்கும் எனவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் அதே டிசைனுடனேயே இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது ZR-V ஹைபிரிட். எந்த விதமான மாற்றங்களும் இல்லை. காரின் முகப்புப் பக்கத்தில் L வடிவ DRL-களுடன் ஸ்லிம்மான முகப்பு விளக்குகள் செட்டப்பைப் பெற்றிருக்கிறது ZR-V எஸ்யூவி. அதற்கு கீழே ஏர் வென்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நான்கின்கும் நெடுவில் காரின் அகலத்தை விட சிறிய கிரில் கொடுக்கப்பட்டுள்ளது.

Honda ZR-V Hybrid Inside

பக்கவாட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்திலும் டிஸ்க் பிரேக்குகள் தான். இதன் ஸ்டாப்பிங் பவர் மிகச்சிறப்பாக இருக்கும். காரின் பின்பக்கம் ஒரு வகையில் U வடிவில் இருக்கும் LED எலமென்ட்களுடன் கூடிய ராப்அரவுண்டு பின்பக்க விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்க பம்பரின் இரண்டு பக்கமும் எக்சாஸ்ட் அவுட்லெட்கள் கொடுக்கப்பட்டிருப்பது பார்ப்பதற்க ஸ்டைலாக இருக்கிறது. இத்துடன் வைப்பர் வாஷர் மற்றும் ரூஃப் மவுண்டட் ஸ்பாய்லர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

4,567 மிமீ நீளம், 1,840 மிமீ அகலம், 1,621 மிமீ உயரம் மற்றும் 2,655 மிமீ நீள வீல்பேஸுடன் ஐந்து நபர்கள் அமர்ந்து பயணிப்பதற்கு நல்ல இடவசதியுடன் கூடிய காராகவே இந்த ZR-V ஹைபிரிட் இருக்கும். இரண்டாவது வரிசை இருக்கையைப் பயன்படுத்தும் போது 390 மிமீ வரையிலான பூட் ஸ்பேஸையும், மடித்துக் கொள்ளும் போது 1,313 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸையும் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரில் நாம் பெற முடியும்.

காரின் உட்புறம் டிரைவர் பக்கம் ஃபிசிக்கல் கண்ட்ரோல்களுடன் ஒரு மெக்கானிக்கல் காருக்கு உரிய காக்பிட்டைக் கொண்டிருக்கும் ZR-Vயில் பயணிகள் பக்கம் க்ளீனான டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளே, டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ஆடிய சிஸ்டம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், லெதர் போன்ற ராப்பிங் கொண்ட சீட்கள், இரண்டு வரிசைகளிலும் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், 8 வே பவர்டு டிரைவர் சீட், 4 வே பவர்டு கோ-டிரைவர் சீட், பவர்டு டெயில்கேட், ஆம்பியன்ட் லைட்டிங் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 8 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS அம்சங்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே CBU முறையில் முழுவதுமாக இறக்குமதி செய்தே இந்தக காரை இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது ஹோண்டா. ஹோமோலோகேஷன் நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக ஆண்டு 2,500 கார்கள் வரை இந்த ZR-V எஸ்யூவியை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது. இந்தியா இதற்கு வாய்ப்பளிக்கிறது. 40 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில், ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வாகன் டேரான் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவுள்ளது இந்த ஹோண்டா ZR-V ஹைபிரிட்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோமோலோகேஷன் நடைமுறைகளைத் தவிர்த்ததன் மூலமாக இந்த ZR-V ஹைபிரிட் எஸ்யூவி அதிகளவில் வெளியாகும் என ஹோண்டாவே நினைக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. பிராண்டு பில்டிங்கிற்காகவே இதனை இந்தியாவிற்குக் கொண்டு வருகிறது ஹோண்டா. அது நடக்கிறதா என்பதைப் பார்க்கலாம். விலையில் தான் எல்லாம் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் ஓகே என நினைக்கக்கூடிய விலையில் வெளியிட்டால் 2,500 யூனிட்டுகளையும் கூட ஹோண்டா விற்றுத் தீர்க்கலாம். பார்க்கலாம், அந்நிறுவனம் என்ன செய்கிறது என்று.

Article Published On: Friday, May 22, 2026, 17:56 [IST]
English summary
Honda revealed new zr v hybrid suv in india along with city facelift launch
மேலும்... #honda #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+