ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் கார் இது தான்

ஹோண்டா நிறுவனமானது மிகவும் சிறிய ரக எலெக்ட்ரிக் காரான 'சூப்பர் என்'னை (Super N) வெளியிட்டுள்ளது. ஆனால் இது இந்தியாவில் வெளியாகவில்லை, UK-யில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பயன்பாடு, பிராக்டிகாலிட்டி ஆகியவற்றை மட்டுமே வைத்து எலெக்ட்ரிக் கார்களை அனைத்து நிறுவனங்களும் உருவாக்கி வரும் நிலையில். ஃபன் டூ டிரைவ் காராக புதிய சூப்பர் என்னை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது ஹோண்டா.

நீளத்தில் மாருதி ஆல்டோவின் அளவே இருக்கிறது இந்த சூப்பர் என், டாடா பன்ச் காரை விட சிறியது. ஆனால் அகலம் மற்றும் உயர்த்தில் ஆல்டோவை விட கொஞ்சம் பெரியது. ஜப்பானில் கெய் கார்கள் மிகவும் பிரபலம். முழுமையான காராக அவை விதிமுறைக்குள் வராது. ஆனால் காருக்கு உரிய பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும். ஜப்பானில் அப்படி N சீரிஸ் கெய் கார்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த சூப்பர் என் எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் உருவாக்கியிருககிறது.

Honda Super N

அனைவரும் வாங்கும் விலையிலான எலெக்ட்ரிக் கார் என்றே இதனை குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்திய மதிப்பிற்கு மாற்றும் போது அவ்வளவு வாங்க முடிகிற ஒரு காராக இது இல்லை. இந்திய மதிப்பிற்கு 23 லட்சம் ரூபாய் என்ற விலையில் UK-யில் வெளியாகியிருக்கிறது இந்த ஹோண்டா சூப்பர் என் எலெக்ட்ரிக் கார். இந்தியாவில் 7 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கியே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, சிறிய ரக கார் என்பதால் இதனை ஹோண்டா இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் இருக்குமா என்ற யோசனைக்கே இடமில்லாமல் செய்துவிட்டது. மேலும் இந்தியாவில் எரிபொருள் பிரிவிலேயே ஹோண்டாவின் நிலை கவலைக்கிடமாகவமே இருக்கிறது. எனினும் 2027-ல் ஸீரோ ஆல்ஃபா சீரிஸ் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடத் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Honda Super N

இந்த சூப்பர் என் எலெக்ட்ரிக் காரில் 29.6 kWh பேட்டரி பேக்கைக் கொடுத்துள்ளது அந்நிறுவனம். இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டாரானது ஸ்டாண்டர்டு மோடில் 47 kW (63 hp) பவரையும், பூஸ்ட் மோடில் 70 kW (105 hp) பவரையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. வெறும் 1,097 கிலோ மட்டுமே எடையைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் பூஸ்ட் மோடில் மணிக்கு 100 கிமீ வேகத்தை 10 நொடிகளில் எட்டும் திறனையும் கொண்டுள்ளது.

சாதாரணமாக 206 கிமீ WLTP ரேஞ்சையும், சிட்டி டிரைவிங்கில் 320 கிமீ வரையிலான ரேஞ்சையும் இந்த ஃபன்னான எலெக்ட்ரிக் கார் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளது ஹோண்டா. இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை வெறும் 30 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துவிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கூறியது போல குறைவான விலை மற்றும் செயல்திறனை மட்டும் முதன்மைப்படுத்தாமல், சிறப்பான டிரைவிங் அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் இந்த சூப்பர் என் எலெக்ட்ரிக் காரை வடிவமைத்துள்ளது ஹோண்டா. இதனாலேயே குறைவான எடையில், பூஸ்ட் மோடு, கியர்பாக்ஸ் போன்ற அனுபவம், சேஸிஸ் டியூனிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை உருவாக்கியிருக்கிறது. ஃபன் டூ டிரைவ் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவினை தொடங்கி வைத்துள்ளது இந்த ஹோண்டா சூப்பர் என்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்க்கும் போதே இந்தக் கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கும் என்ற ஆவலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது இந்த ஹோண்டா சூப்பர் என். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மாருதி 800 கொடுக்கும் உணர்வை, எலெக்ட்ரிக் வடிவில் இந்த ஹோண்டா சூப்பர் என்-னும் கொடுக்கிறது. வடிவமைப்பும் மிகவும் வித்தியாசமாக இல்லாமல், ஸ்டைலாக, அனைவரும் விரும்பும் வகையில் இருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்.

Article Published On: Monday, June 22, 2026, 14:20 [IST]
English summary
Honda super n affordable electric hatchback car launched
மேலும்... #honda #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out