லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரக்கூடிய ஹோண்டா எஸ்யூவி விரைவில் அறிமுகம்

அடுத்த சில வாரங்களில் ஹோண்டாவின் ப்ரீமியம் எஸ்யூவியை இந்தியாவில் நீங்கள் வாங்க முடியும். நீண்ட காலமாக இந்தியாவில் செயல்பாட்டில் இல்லாதது போலான ஒரு நிலையையே ஹோண்டா கொண்டிருக்கிறது. புதிய தயாரிப்புகள் எதுவும் வெளிாவதில்லை, அப்டேட்களும் கடமைக்கென்று செய்யப்படுவது போல ஒரு உணர்வு ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது. அவற்றையெல்லாம் களைந்து ஃப்ரஷ்ஷாக புதிய தொடக்கத்துடன் இந்தியாவில் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது ஹோண்டா.

மே 22ம் தேதியன்று ப்ரீமியமான ZR-V எஸ்யூவி மற்றும் ஏற்கனவே இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் சிட்டி செடான் மாடலின் ஃபேஸ்லிப்ட் ஆகிய கார்களை ஹோண்டா வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இங்கே நாம் பார்க்கப் போவது அதன் ப்ரீமியமான ZR-V எஸ்யூவியைப் பற்றித் தான்.

Honda ZR-V Hybrid

இந்தக் காரை அதிகளவு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஹோண்டா இந்தியாவிற்குக் கொண்டு வரவில்லை. மாறாக இது போன்ற ப்ரீமியம் கார்களும் எங்களிடம் இருக்கின்றன எனக் காட்டி, தங்களுடைய விலை குறைவான மாஸ் மார்க்கெட் கார்களை விற்பனை செய்வதற்காகவே கொண்டு வருகிறது. எனவே இந்த ZR-V எஸ்யூவியை குறைவான, அனைவரும் வாங்கக்கூடிய விலையில் நாம் எதிர்பார்க்க முடியாது.

மேலும், இந்தக் காரை CBU (Completely Built Unit) முழுவதுமாக இறக்குமதி செய்தே ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. இதனால் இந்தியாவிலேயே இந்தக் காரைத் தயாரிப்பது அல்லது அசெம்பிள் செய்வதை விட வாடிக்கையாளர்கள் இருமடங்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் 40 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாக்கு உள்ளான விலையிலேயே ZR-V எஸ்யூவியின் இந்திய வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

Honda ZR-V

இவ்வளவு ப்ரீமியமான விலையில், 7 சீட்கள், டீசல் இன்ஜின் மற்றும் AWD (ஆல் வீல் டிரைவ்) வசதி ஆகிய அம்சங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இவை எதுவும் புதிய ZR-V எஸ்யூவியில் கொடுக்கப்படப் போவதில்லை. பிற தொழில்நுட்ப அம்சங்கள் காரில் இருக்கும் என்றாலும், இதன் முதன்மையான விற்பனைப் புள்ளியாக இருக்கப் போவது இதில் கொடுக்கப்படும் ஹைபிரிட் பவர்ட்ரெயின் மற்றும் அதன் எரிபொருள் பயன்பாடு தான்.

சர்வதேச அளவில் இந்த ZR-V எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் e:HEV ஹைபிரிட் பவர்ட்ரெயினை ஹோண்டா பயன்படுத்தி வருகிறது. e-CVT கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயினானது 180 hp பவர் மற்றும் 315 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இது வழக்கமாக பெட்ரோல் இன்ஜினை சப்போர்ட் செய்யும் வகையிலான ஹைபிரிட் பவர்ட்ரெயின் கிடையாது. மாறாக, இதில் பெட்ரோல் இன்ஜின் தான் எலெக்ட்ரிக் மோட்டார்களை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தக் காரினை முதன்மையாக இயக்குவது இதில் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் தான்.

இந்தக் காரில் கொடுக்கப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினானது ஒரு ஜெனரேட்டர் போல செயல்பட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அந்த மின்சாரம் எலெக்ட்ரிக் மோட்டார்களுக்குக் கடத்தப்பட்டு அதன் மூலமே கார் இயங்கும். அந்த வகையில் இயக்கத்தின் அடிப்படையில் இதுவொரு எலெக்ட்ரிக் கார் போலவே இருக்கும். குறிப்பாக நகரங்களில் இந்தக் காரில் செயல்பாடு முழுவதுமாக எலெக்ட்ரிக் மோட்டாரை மையப்படுத்தியே இருக்கும்.

நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் கூடுதல் பெர்ஃபாமன்ஸ் தேவைப்படும் போது மட்டும் பெட்ரோல் இன்ஜினும் காரின் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும். இதனால் ப்ரீமியம் கார்கள் அதிக பெட்ரோலைக் குடிப்பது போல இந்த ZR-V இருக்காது. சிறப்பான பெர்ஃபான்ஸை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் லிட்டருக்கு 25 கிமீ வரையிலான மைலஜையும் இந்தக் கார் சர்வதேச அளவில் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய ஒரு எஸ்யூவி மாடலை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ZR-Vயின் வெளியீடு வரை காத்திருக்கலாம். இந்தக் கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யுமா எனத் தெரியாது. ஆனால் இந்திய சந்தையில் சுவாரஸ்யமான ஒரு ஹைபிரிட் எஸ்யூவியாக இது இருக்கும்.

Article Published On: Wednesday, May 13, 2026, 15:52 [IST]
English summary
Honda zr v hybrid suv things to know about this new car that is going to be launched in india soon
மேலும்... #honda cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+