ரூ.48 லட்சத்தில் புதிய ஹோண்டா கார் இந்தியாவில் அறிமுகம்... ஜப்பானிலிருந்து இறக்குமதி!

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய ZR-V e:HEV என்ற பிரிமீயம் ரக எஸ்யூவியை இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அத்துடன் இன்றுமுதல் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரியையும் தொடங்கியுள்ளது. ஜப்பானிலிருந்து முழுமையாக இறக்குமதி (CBU) செய்யப்பட்டு வரும் இந்த பிரிமீயம் ஹைபிரிட் எஸ்யூவிக்கு ரூ.47.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, உலகளவில் வெற்றிகரமாக விற்பனையாகி வரும் ZR-V e:HEV-யை இந்திய வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் மேம்பட்ட ஹைபிரிட் தொழில்நுட்பத்தை கொண்ட பிரீமியம் எஸ்யூவி பிரிவில் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துவதே நிறுவனத்தின் நோக்கம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Honda ZRV India Launch

ஹைப்ரிட் கார்

இந்த புதிய பிரிமீயம் ரக ZR-V e:HEV- எஸ்யூவியின் முக்கிய சிறப்பம்சம் அதன் e:HEV Strong Hybrid தொழில்நுட்பமாகும். இதில் 2.0 லிட்டர் Atkinson Cycle பெட்ரோல் என்ஜின், இரண்டு மின்மோட்டார்கள் மற்றும் e-CVT அமைப்பு இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஹைபிரிட் சிஸ்டம் அதிகபட்சமாக 184 பிஎஸ் பவர் மற்றும் 315 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. நகரப் போக்குவரத்து மற்றும் நீண்ட தூர பயணங்களில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் மென்மையான ஓட்ட அனுபவத்தையும் வழங்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற வடிவமைப்பு

வெளிப்புற வடிவமைப்பில் அகலமான முன்புற கிரில், முழு LED ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள் மற்றும் கூப் பாணியை நினைவூட்டும் பின்புற வடிவமைப்பு ஆகியவை இந்த எஸ்யூவிக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கின்றன. உலகளாவிய சந்தையில் விற்பனையாகும் மாடலின் வடிவமைப்பே இந்தியாவிலும் மாற்றமின்றி வழங்கப்பட்டுள்ளது.

Honda ZRV Exterior

இன்டீரியர்

கேபினுக்குள் 9 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் Apple CarPlay மற்றும் Android Auto, 10.2 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12 ஸ்பீக்கர் Bose பிரீமியம் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 60:40 விகிதத்தில் மடக்கக்கூடிய பின்புற இருக்கைகள் மற்றும் அதிகபட்சமாக 1,313 லிட்டர் வரை லக்கேஜ் வைப்பதற்கான பூட்ரூம் இடவசதியும் உள்ளது.

Honda ZRV Interior

முக்கிய வசதிகள்

இந்த கார் பல பிரீமியம் வசதிகளையும் வழங்குகிறது. 8 நிலைகளில் மின்சார முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, மெமரி (Memory) வசதி, 4 நிலைகளில் மாற்றிக்கொள்ளக்கூடிய முன்பக்க பயணியர் இருக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், கைகளை பயன்படுத்தாமல் கால் அசைவு (Kick Sensor) மூலம் டிக்கியை திறக்க உதவும் Hands-free Power Tailgate, காரிலிருந்து விலகிச் சென்றவுடன் டிக்கியை தானாகவே மூடி லாக் செய்யும் Walk-away Close & Lock, ரிவர்ஸ் கியர் போடும்போது பார்க்கிங் செய்வதை எளிதாக்கும் வகையில் வெளிப்புற மிரர் தானாகவே கீழ்நோக்கி சாயும் Auto Reverse Tilt வசதி, பட்டனை அழுத்தி இயக்கக்கூடிய Electronic Parking Brake உள்ளிட்ட பல பிரீமியம் அம்சங்களும் இந்த எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை Honda SENSING ADAS (Advanced Driver Assistance Systems) தொகுப்பு இந்த காரின் முக்கிய பலமாகும். இதில் முன்புற மோதல் அபாயத்தை கண்டறிந்து தானாகவே பிரேக் பிடிக்க உதவும் Collision Mitigation Braking System, முன் செல்லும் வாகனத்தின் வேகத்துக்கு ஏற்ப தானாகவே வேகத்தை கட்டுப்படுத்தும் Adaptive Cruise Control, வாகனம் தனது லேனில் தொடர்ந்து செல்ல உதவும் Lane Keeping Assist, சாலையை விட்டு வாகனம் விலகும் சூழலை எச்சரித்து தேவையான உதவியை வழங்கும் Road Departure Mitigation போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதோடு, 8 ஏர்பேக்குகள், சுற்றுப்புறத்தை முழுமையாக காட்டும் 360 டிகிரி கேமரா, வளைவுகள் மற்றும் வழுக்கும் சாலைகளில் வாகனத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் Vehicle Stability Assist (VSA), சரிவான பாதைகளில் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் இறங்க உதவும் Hill Descent Control, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், விபத்து நேரத்தில் தாக்கத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட Honda-வின் Advanced Compatibility Engineering (ACE) உடல் அமைப்பு ஆகியவையும் இந்த எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ளன.

Honda ZRV Rear

வண்ணத் தேர்வுகள்

புதிய Honda ZR-V e:HEV, Twilight Mist Black Pearl, Meteoroid Gray Metallic, Platinum White Pearl மற்றும் Crystal Black Pearl என நான்கு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. விற்பனைக்குப் பிந்தைய சேவைகளிலும் ஹோண்டா சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்த எஸ்யூவிக்கு 3 ஆண்டுகள் வரம்பற்ற கிலோமீட்டர் ஸ்டான்டர்டு வாரண்டி, 3 ஆண்டுகள் இலவச Road Side Assistance (அவசரகால சாலை உதவி) மற்றும் ஹைபிரிட் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட கால பயன்பாட்டிலும் வாடிக்கையாளர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் இந்த எஸ்யூவியை பயன்படுத்த முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு வரிசையில் ZR-V e:HEV அதிக விலை கொண்ட புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யூவியாக நிலைநிறுத்தப்படுகிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் (CBU) ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இதன் விலை பிரீமியம் பிரிவில் இருந்தாலும், மேம்பட்ட ஹைபிரிட் தொழில்நுட்பம், உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உலகளாவிய தரத்தில் உருவாக்கப்பட்ட கேபின் ஆகியவை இந்த எஸ்யூவியை தனித்துவமாக்குகின்றன.

Article Published On: Saturday, July 25, 2026, 11:52 [IST]
English summary
Honda zrv ehev price revealed deliveries start india hybrid suv
மேலும்... #new launches #honda cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X