ஜனவரி 13ஆம் தேதி குறிச்சு வெச்சிக்கோங்க... ஜனநாயகன் படத்த விட புது டாடா காருக்கு புக்கிங் குவிய போகுது!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், அதன் ஐகானிக் மைக்ரோ எஸ்யூவி (Micro-SUV) ரக காரான பன்ச் (Punch)-இன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேட் மாடலை மிக சமீபத்தில் வெளியிட்டது. அதாவது, காரின் விலைகளை தவிர்த்து, மற்ற விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டிற்கான புதிய பன்ச் ஜனவரி 13ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வரவிருக்கும் பொங்கல் (Pongal) உள்ளிட்ட பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, புதிய என்ஜின் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வரும் புதிய டாடா பன்ச், அதன் முந்தைய மாடலில் இருந்து என்னென்ன மாற்றங்களைப் பெற்றுள்ளது என்பதை இங்கு விரிவாகக் காணலாம்.

new tata punch facelift vs existing old model

புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற தோற்றம் ஆனது அதன் எலெக்ட்ரிக் வெர்சனான பன்ச் இவி (Punch EV)-இல் இருந்து சில டிசைன் அம்சங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இதன் முன்பகுதி முற்றிலும் புதிய தோற்றத்தை பெற்றுள்ளது. பகல்நேரத்திலும் ஒளிரும் விளக்குகள் (DRLs) சுற்றிலும் கருப்பு நிற சரவுண்டுகளைக் கொண்டுள்ளன. மேலும், இரட்டை வண்ண பூச்சுடன் கூடிய முகப்பு பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, இரண்டாக பிரிக்கப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்புடன் வருகிறது.

பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல், அதன் 'மைக்ரோ எஸ்யூவி' அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டு, வலிமையான தோற்றத்துடன் விளங்குகிறது. புதிய வடிவமைப்புடன் கூடிய அலாய் சக்கரங்கள், பக்கவாட்டில் தடிமனான கருப்பு நிற கிளாடிங் ஆகியவை காருக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன. பின்புறத்தில், டெயில்கேட்டில் ஒரு கருப்பு நிற பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவை உள்ளன.

new tata punch facelift vs existing old model

உட்புறத்தைப் பொறுத்தவரை, புதிய பன்ச் காரின் கேபின் அமைப்பு முந்தைய மாடலைப் போலவே இருந்தாலும், குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற்றுள்ளது. டாடாவின் விலையுயர்ந்த கார் மாடல்களில் இருந்து பெறப்பட்ட புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் டச் அடிப்படையிலான HVAC கண்ட்ரோல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், இருக்கைகள் கருப்பு மற்றும் நீல நிற கலவையில் (டூயல்-டோன்) வருகின்றன. காரினுள் கேபினில் புதிய அப்ஹோல்ஸ்டரி பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வசதிகளைப் பொறுத்தவரை, புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் 360-டிகிரி கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டீசர்களின் மூலம் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை இந்த காரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது புதிய கிராபிக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்டர்ஃபேஸுடன் வரலாம். ஜனவரி 13 அன்று அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது காரின் முழுமையான அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பட்டியல் தெரியவரும்.

new tata punch facelift vs existing old model

என்ஜின் ஆப்ஷன்களில் மிக முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில், நெக்ஸான் காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் புதியதாக வழங்கப்பட உள்ளது. இதன் துல்லியமான பவர் & டார்க் திறன் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நெக்ஸான் காரில் இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் 120 எச்பி இயக்க ஆற்றலையும், 170 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

அதேநேரம், தற்போதுள்ள 88 எச்பி மற்றும் 115 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் தொடர்ந்து வழங்கப்படும். இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கிறது. மேலும், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கூடிய சிஎன்ஜி (CNG) பவர்டிரெய்ன் ஆப்ஷனும் தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் பன்ச் முக்கியமானதாக உள்ளது. இதனாலேயே, பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பன்ச் காரில் இதுவரையில் ஒரேயொரு நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் புதியதாக வழங்கப்படுவது கவனத்தை ஈர்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 7, 2026, 23:59 [IST]
English summary
How is the new tata punch facelift different from the existing old model check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X