இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு... தமிழகத்திற்கும் என்ன பலன்?

இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஹூண்டாய் மோட்டார் குழுமம் (Hyundai Motor Group) சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. 2026 முதல் 2032-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த முதலீடு, இந்திய ஆட்டோமொபைல் துறையில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தித் தளமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் புதிய கார் உற்பத்தி, மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உதிரிபாக உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஹூண்டாய் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த உள்ளது. இருப்பினும், அறிவிக்கப்பட்டுள்ள மொத்த முதலீட்டுத் தொகையும் தமிழகத்தில் மட்டுமே செலவிடப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Hyundai Plant

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலை, இந்தியாவில் அந்நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக மிக நீண்டகாலமாக செயல்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு சுமார் 8.24 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இங்கு உள்நாட்டு தேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

புதிய முதலீட்டுத் திட்டத்தால் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், நவீன இயந்திரங்களை நிறுவுதல், தானியங்கி உற்பத்தித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், இந்தியாவில் 26 புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதில், பல கார் மாடல்கள் இந்த ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படும். இதன்காரணமாக எதிர்காலத்தில் சென்னை ஆலையின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.

Hyundai plant

ஆனால், அண்மையில் அறிவிக்கப்பட்ட ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் சென்னை ஆலைக்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தனிப்பட்ட விவரங்கள் இதுவரை தெளிவாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் ரூ.45,000 கோடி அளவிலான முதலீட்டு திட்டத்தை அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதில் 2023 முதல் 2032 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரூ.26,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தவிரவும், தமிழகத்தை இந்தியாவில் தனது முக்கிய மின்சார கார் உற்பத்தி மையமாக உருவாக்கும் நோக்கத்திலும் ஹூண்டாய் செயல்பட்டு வருகிறது. மின்சார கார்களுக்கான பேட்டரி தொகுப்பு இணைப்பு, உதிரிபாகங்களின் உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Also Read

ஹூண்டாய் நிறுவனத்தின் வளர்ச்சி, அதன் சொந்த தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களுக்கும் முக்கியமானதாக இருக்கும். தமிழகத்தில் உள்ள உதிரிபாக நிறுவனங்களிடமிருந்து கொள்முதலை அதிகரித்து, உள்ளூர் உற்பத்தியை வலுப்படுத்தும் திட்டத்தையும் ஹூண்டாய் முன்னெடுத்துள்ளது.

உதிரிபாகங்கள், மின்னணு சாதனங்கள், வாகன மென்பொருள், பேட்டரி தொடர்பான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு இதன் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்களும் அதிக பயனடையும்.

Hyundai plant

மேலும், கார் உற்பத்தி அதிகரித்தால் சரக்கு போக்குவரத்து, கிடங்கு வசதிகள், வாகன ஏற்றுமதி மற்றும் துறைமுகம் சார்ந்த சேவைகளுக்கான தேவையும் உயரக்கூடும். புதிய முதலீடுகள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்கான தேவையை அதிகரிக்கும் என்பதால், தொழிற்சாலைப் பணியாளர்கள், தரக் கட்டுப்பாட்டுப் பொறியாளர்கள், இயந்திரப் பராமரிப்பு நிபுணர்கள், மின்சார வாகனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அதேநேரத்தில், எத்தனை புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது குறித்த உறுதியான எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொழிற்சாலை விரிவாக்கம், உற்பத்தி அளவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தே வேலைவாய்ப்புகளின் அளவு அமையும். ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டுத் திட்டம் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு முக்கியமானதாக இருந்தாலும், அதன் பலன்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

Also Read

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே ஆலையின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்தவும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனியாக முதலீடு மேற்கொண்டு வருகிறது. அடுத்து மூன்றாவதாகவும் ஒரு புதிய கார் ஆலையையும் இந்தியாவில் அமைக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிரா அல்லது குஜராத் மாநிலத்தில் இந்த புதிய ஆலை அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், புதிய முதலீட்டுத் தொகை முழுவதும் சென்னை அல்லது தமிழகத்திற்கானது என்று கூற முடியாது. இருப்பினும், தமிழகத்தில் ஏற்கெனவே வஹூண்டாய் தொழிற்சாலை மூலமாக வலுவான வர்த்தகமும், வேலைவாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. நிச்சயமாக இந்த புதிய முதலீட்டு திட்டங்கள் இந்த எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தும் என்று கூறலாம்.

Article Published On: Sunday, October 18, 2026, 12:24 [IST]
English summary
Hyundai 1 5 lakh crore investment tamil nadu chennai plant benefits
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X