இந்தியாவில் 26 புதிய கார்களை களமிறக்கும் ஹூண்டாய்... டாடா, மஹிந்திராவை பின்னக்குத் தள்ள பிரம்மாண்ட திட்டம்!!

இந்திய கார் மார்க்கெட்டில் நீண்ட காலமாக இரண்டாவது இடத்தில் இருந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கு தற்போது டாடா, மஹிந்திரா ஆகிய இரண்டு உள்நாட்டு நிறுவனங்களும் கடுமையான சந்தைப் போட்டியை கொடுத்து வருகின்றன. கடந்த மாத விற்பனையில் நான்காவது இடத்தில் ஹூண்டாய் பின்தங்கியது. இந்த நிலையல், இந்திய சந்தையில் மீண்டும் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை ஹூண்டாய் மேற்கொண்டுள்ளது. இதற்ககாக 26 புதிய கார்களை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது. இதில், 7 புதிய கார்கள் அடுத்த 8 மாதங்களில் வர இருக்கின்றன.

தென்கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் 2026 முதலீட்டாளர் மாநாட்டில் இந்தத் திட்டம் வெளியிடப்பட்டது. புதிய கார்கள் மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள மாடல்களை மேம்படுத்தி புதிய தலைமுறை மாற்றங்களுடன் அறிமுகம் செய்யவும், இடைக்கால மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களாவும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Hyundai New Cars

மேலும், எஞ்சின், கியர்பாக்ஸ், தொழில்நுட்ப அளவிலும் பல்வேறு மாற்றங்களுடன் ஹூண்டாய் கார்கள் வர இருக்கின்றன. உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்ட 100 புதிய கார்களில் இந்தியாவுக்காக 26 தயாரிப்புகள் இடம்பெறும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் ஹூண்டாய் கார் வரிசையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட உள்ளன.

Also Read

வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்த 26 புதிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அடுத் 8 மாதங்களில் மட்டும் 7 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், குறிப்பிடத்தக்க மாடலாக இந்தியாவுக்காக புத்தம் புதிய என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் இந்திய சந்தையை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவதுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தையும் பெறும். இந்த புதிய எலெக்ட்ரிக் கார் நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read

மேலும், புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டு உள்ளது. அதாவது எலெக்ட்ரிக் கார்களுடன் பெட்ரோல் எஞ்சின் கொண்ட எஸ்யூவிகளுக்கும் அந்நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. பெட்ரோல், ஹைப்ரிட், எலெக்ட்ரிக் மற்றும் எதிர்காலத்தில் EREV போன்ற தொழில்நுட்பங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய தயாரிப்பு திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் தனது மொத்த விற்பனையில் உலகளவில் 60 சதவீதம் அளவுக்கு எலெக்ட்ரிக் கார்கள் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஹூண்டாய் காய் நகர்த்தி வருகிறது.

புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதுடன் இந்தியாவை ஹூண்டாய் தனது முக்கியமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகவும் வலுப்படுத்துகிறது. 2030க்குள் இந்தியாவில் உற்பத்தி திறன் 3.2 லட்சம் கார்கள் என்ற அளவில் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

2030க்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் 90 சதவீத உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே பெறுவதற்கும் ஹூண்டாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் 1,400க்கும் மேற்பட்ட உள்ளூர் சப்ளையர்கள் மற்றும் 900க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கொண்ட அமைப்பை நிறுவனம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Via: ET Auto

Article Published On: Thursday, August 27, 2026, 10:52 [IST]
English summary
Hyundai 26 new cars india 2030 new model launch plan
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out