காரின் விலையில் ரூ.1 லட்சத்தை குறைத்தால் ஒண்ணுமே இருக்காதே! ஹூண்டாய் எந்த தைரியத்தில் இப்படியெல்லா அறிவிக்குது

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் 30 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக குறிப்பிட்ட சில ஹூண்டாய் கார்களுக்கு சுமார் ரூ.1.05 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற மே 31ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ள ஹூண்டாயின் இந்த புதிய சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார்கள் விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஹூண்டாய் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்கிறது. இத்தகைய இடத்தை இந்தியாவில் ஹூண்டாய் நேற்றோ அல்லது இன்றோ பெற்றுவிடவில்லை; இதற்கு 30 வருடங்கள் ஆகியுள்ளது. 1996ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த ஹூண்டாய், கடந்த மே 6ஆம் தேதியில் 30 வருடங்களை கடந்தது.

hyundai announced anniversary special benefits

இதனை கொண்டாடும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் சலுகைகளை அறிவிக்கக்கூடும் என நாம் எதிர்பார்த்தப்படி, குறிப்பிட்ட சில ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.05 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட சில ஹூண்டாய் கார்களில் கிரெட்டா (Creta), கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS), ஐ20 (i20), வெர்னா (Verna) மற்றும் எக்ஸ்டர் (Exter) என்கிற ஐந்து கார்கள் அடங்குகின்றன.

பணம் தள்ளுபடி, கார்ப்பிரேட் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான சலுகைகள், காரை அப்கிரேட் (Upgrade) செய்வதன் மூலமாக கிடைக்கும் போனஸ்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச்/ ஸ்க்ராப்பேஜ் சலுகைகள் உள்ளிட்டவை மேற்கூறப்பட்ட ஹூண்டாய் கார்களுக்கான சலுகைகளில் அடங்குகின்றன. இவை மட்டுமின்றி, காருக்கான கடனுதவியை வழங்கும் ஹூண்டாயின் நிதி நிறுவனங்கள் மூலமாகவும் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

hyundai announced anniversary special benefits

இதன்படி, மேற்கூறப்பட்ட ஐந்து ஹூண்டாய் கார்களின் ஆன்-ரோடு விலையில் 100% கடனுதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் வழங்குவதற்கான கட்டண தொகையும் 50% குறைத்துக் கொள்ளப்படும் என்றும், காருக்கான கடனை எப்போது வேண்டுமானாலும் முழுவதுமாக அடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் மேற்கூறப்பட்ட ஹூண்டாய் கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

ரூ.1.05 லட்சம் வரையிலான அதிகப்பட்ச சலுகைகளை ஹூண்டாய் கிரெட்டா பெற்றுள்ளது. இது இல்லாமல், மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பின் மூலமாகவும் கணிசமான தொகையை கிரெட்டாவில் சேமிக்கலாம். இதற்கடுத்து அதிக சலுகையை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பெற்றுள்ளது. ஹூண்டாயின் விலை குறைவான ஹேட்ச்பேக் வகை காரான கிராண்ட் ஐ10 நியோஸை ரூ.80,000 வரையிலான சலுகைகள் உடன் இந்த மே மாதத்தில் பெறலாம்.

Model Max Total Benefit
Hyundai Creta Up to Rs 1,05,000 + GST reduction
Hyundai Grand i10 Nios Up to Rs 80,000
Hyundai i20 Up to Rs 65,000
Hyundai Verna Up to Rs 55,000
Hyundai Exter Up to Rs 40,000

அதேநேரம், ஹூண்டாய் ஐ20 காருக்கு ரூ.65 ஆயிரம் வரையிலான சலுகைகளும், ஹூண்டாய் வெர்னா காருக்கு ரூ.55 ஆயிரம் வரையிலான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அளவில் சிறியதான ஹூண்டாய் காரான எக்ஸ்டர் ஆனது ரூ.40 ஆயிரம் வரையிலான சலுகைகள் உடன் கிடைக்கும். இவ்வாறு சலுகைகளை அறிவிப்பதுடன், இந்தியாவில் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யவும் ஹூண்டாய் தயாராகி வருகிறது.

அதன்படி, அடுத்த ஒரு வருடத்திற்குள் இரு புதிய கார்களை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அவற்றில், மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) வகையை சேர்ந்த கார் ஒன்று உள்ளது. இது தற்போதைய கிரெட்டா காரை காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. மற்றொரு புதிய ஹூண்டாய் கார் ஆனது அளவில் சிறியதான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் சில வருடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியுள்ள நிலையில், ஹூண்டாய் 30 வருடங்களாக இந்திய சந்தையில் செயல்பட்டு வருவது உண்மையில் அசாத்தியமான காரியம் ஆகும். இதனை கொண்டாடும் விதமாக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் மாதங்களில் ஹூண்டாய் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். 30ஆம் ஆண்டுக்கால பயணத்தை நினைவுக்கூறும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.

Article Published On: Sunday, May 10, 2026, 20:33 [IST]
English summary
Hyundai announced 30th anniversary special benefits on creta grand 10 nios i20 verna exter
மேலும்... #hyundai #offers #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+