மாருதி டிசையரை விட மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் கார்! பைக் கம்பெனிகளே மிரண்டு போற அளவுக்கு மைலேஜ் தருது!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் (US President Donald Trump) அதிரடி நடவடிக்கைகள் காரணமாக பங்கு சந்தைகள் (Stock Market) சமீப காலமாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதேபோல் எஸ்யூவி ரக கார்களின் எழுச்சியால் (SUV Cars), செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை சமீப காலமாக கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது, உலகின் அனைத்து கார் சந்தைகளிலும் இதுதான் தற்போதைய நிலைமை. ஆனால் விதிவிலக்காக இந்திய சந்தையில் ஒரு செடான் கார் மட்டும் விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகிறது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும்.

சொல்லப்போனால் மாருதி சுஸுகி டிசையர் கார், விற்பனையில் எஸ்யூவி ரக கார்களுக்கே கடுமையான சவாலை ஏற்படுத்தி வருகிறது. உண்மையில் மாருதி சுஸுகி டிசையர் காருக்கு இந்திய சந்தையில் சரி நிகரான போட்டி மாடல் எதுவும் இல்லை. ஹூண்டாய் அவ்ராவை (Hyundai Aura) தவிர!
மாருதி சுஸுகி டிசையர் அளவிற்கு இல்லை என்றாலும் கூட, ஹூண்டாய் அவ்ரா காரும் ஒவ்வொரு மாதமும் நல்ல விற்பனை எண்ணிக்கையைதான் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் அவ்ரா காரின் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது.

ஹூண்டாய் அவ்ரா காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் 7,978 அவ்ரா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 5,388 ஹூண்டாய் அவ்ரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2,590 ஹூண்டாய் அவ்ரா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹூண்டாய் அவ்ரா கார் விற்பனையில் 48 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு செடான் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் அவ்ரா மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் அவ்ரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாய் அவ்ரா காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.54 லட்ச ரூபாயாக இருக்கிறது.
மறுபக்கம் ஹூண்டாய் அவ்ரா காரின் நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.26 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் மாருதி சுஸுகி டிசையர் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.31 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ஹூண்டாய் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் அவ்ரா காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ரியர் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) ஹூண்டாய் அவ்ரா கார் கொண்டுள்ளது.
அத்துடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் ஸ்மார்ட் கீ போன்ற வசதிகளும், ஹூண்டாய் அவ்ரா காரில் வழங்கப்படுகின்றன. எனவே இந்திய சந்தையில் மாருதி சுஸுகி டிசையர் காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹூண்டாய் அவ்ரா திகழ்கிறது.
ஹூண்டாய் அவ்ரா காரானது, அதிநவீன வசதிகள் நிரம்பியது என்பதுடன் மட்டுமல்லாது, அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் இருக்கிறது. ஹூண்டாய் அவ்ரா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 25-28 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் கார் மற்றும் சாலையின் கண்டிஷன், ஓட்டும் விதம் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து, மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








