ஹூண்டாய் பேயான் காருக்கு புக்கிங் துவங்கியது... வெயிட்டிங் பீரியடை தவிர்க்க முன்பதிவுக்கு முந்துங்கள்!!

ஹூண்டாய் நிறுவனக்கின் புத்தம் புதிய பேயான் (Bayon) எஸ்யூவிக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஷிப்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாகவும் வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்யலாம். ரூ.11,000 முன்பதிவு தொகை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பேயான் எஸ்யூவி காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், பண்டிகைக் காலத்தை ஒட்டி அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்யூவி வரிசையில் வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடைப்பட்ட இடத்தை இந்த புதிய மாடல் நிரப்பும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

Hyundai Bayon Bookings Open

தற்போது வெளியாகியுள்ள புதிய படங்களைப் பார்க்கும்போது, பேயான் காரின் முன்பகுதி வழக்கமான எஸ்யூவி தோற்றத்திலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. மேல்பகுதியில் தலைகீழான L வடிவ LED பகல்நேர விளக்குகளும், கீழே தனியாக பொருத்தப்பட்டுள்ள முக்கிய ஹெட்லைட் அமைப்பும் கவனம் ஈர்க்கின்றன. முன்புறத்தில் பார்க்கிங் சென்சார்களும் இடம்பெற்றுள்ளன.

பக்கவாட்டில் காரின் கிராஸ்ஓவர் வடிவமைப்பில் வருவது தெரிகிறது. வீல் ஆர்ச்சுகளைச் சுற்றி கருப்பு நிற கிளாடிங், ரூஃப் ரெயில்கள் மற்றும் இரட்டை நிற 17 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படுவது புதிய படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. கூரையின் வடிவமைப்பும், பின்புறம் நோக்கி உயர்ந்து செல்லும் ஜன்னல் அமைப்பும் காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.

Also Read

பின்புறத்திலும் ஹூண்டாய் புதிய வடிவமைப்பு மொழியை பயன்படுத்தியுள்ளது. தலைகீழான L வடிவ LED டெயில் லைட்டுகள் கருப்பு நிற இணைப்பு பகுதியுடன் காணப்படுகின்றன. கூரையில் ஸ்பாய்லர், பின்புற வைப்பர் மற்றும் கருப்பு நிற C-பில்லர் போன்ற அம்சங்களும் படங்களில் தெரிகின்றன. இதனால் முழுமையான எஸ்யூவி தோற்றத்தைவிட கிராஸ்ஓவர் பாணியில் இருக்கும் என்று தெரிகிறது.

காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை, ஹூண்டாய் வெளியிட்ட வடிவமைப்பு குறிப்புகளும், முன்னதாக வெளியான சோதனை ஓட்டத்தின் படங்களும் சில முக்கிய தகவல்களை வழங்குகின்றன. இரட்டை திரை அமைப்பு, மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் அடுக்கு வடிவிலான டேஷ்போர்டு வடிவமைப்பு இடம்பெற வாய்ப்புள்ளது.

Also Read

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கிரெட்டா காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பேயான் காரிலும் இடம்பெறலாம். இதனுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் இந்த புதிய கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும், சிஎன்ஜி எரிபொருள் தேர்வுடன் 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட கார் மாடலாகவும் இது இருக்கும். மேலும், சற்று நீளம் அதிகமாக இருப்பதால் இடவசதியும் போதுமான அளவு இருக்கும் என்று நம்பலாம்.
தற்போதைய தகவல்களின் அடிப்படையில் பேயான் காரின் விலை ரூ.9 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் பேயான் எஸ்யூவி கார் மாருதி விட்டாரா, கியா செல்டோஸ், மாருதி விக்டோரிஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் உள்ளிட்டளுடன் போட்டியிடும். மேலும், ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெக்டான் உள்ளிட்ட மாடல்களுக்கும் போட்டியாக அமையும்.

Article Published On: Wednesday, September 23, 2026, 12:30 [IST]
English summary
Hyundai bayon booking open india amount launch timeline exterior features expected price
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out