5 ஸ்டார் பாதுகாப்பை இலக்காக கொண்ட ஹூண்டாய் பேயான்! 23 ADAS வசதிகள் உள்பட எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்கள்!

இந்தியாவில் புதிய எஸ்யூவி காரை வாங்க நினைப்பவர்கள், அதன் தோற்றம் மற்றும் வசதிகளுக்கு இணையாக பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, தனது புதிய பேயான் (BAYON) எஸ்யூவியில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம். இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவரங்களை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 26ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹூண்டாய் பேயான், கிரெட்டா மற்றும் வென்யூ கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புதிய எஸ்யூவி இந்தியாவின் பாதுகாப்பு தரநிலைகளில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

Hyundai Bayon

வலுவான கட்டமைப்பு

ஹூண்டாய் பேயான் கார் நிறுவனத்தின் குளோபல் கே என்ற மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புத் தளத்தில் (Global K Enhanced Platform) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உடற்கட்டமைப்பில் 69 சதவீதம் மேம்பட்ட பல்வேறு தர உயர் வலிமை கொண்ட எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. விபத்தின்போது ஏற்படும் தாக்கத்தைச் சமாளித்து, பயணிகள் அமரும் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இதன் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தில் வடிவமைக்கப்பட்ட எஃகு உள்ளிட்ட வலுவான உலோகக் கூறுகள் காரின் முக்கிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்பகுதி, டேஷ்போர்டு பகுதி, பின்புற தரைப்பகுதி மற்றும் பக்கவாட்டு கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வலுப்படுத்தும் நடவடிக்கைகள், மோதலின்போது ஏற்படும் தாக்கத்தைப் பகிர்ந்து குறைக்க உதவும் என நிறுவனம் தெரிவிக்கிறது.

Hyundai Bayon

6 ஏர்பேக்குகள்

ஹூண்டாய் பேயானில் 80க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 35க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HAC), டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS), அவசர நிறுத்த எச்சரிக்கை (ESS), ரோல்ஓவர் சென்சார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, மூன்று புள்ளி பாதுகாப்பு சீட் பெல்ட்டுகள், சீட் பெல்ட் நினைவூட்டல் வசதி, குழந்தைகளுக்கான ஐசோபிக்ஸ் (ISOFIX) இருக்கை இணைப்புகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் திருட்டு எச்சரிக்கை வசதி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அடிப்படை வேரியண்ட்டை தேர்வு செய்பவர்களுக்கும் பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் கிடைக்கும்.

Also Read

23 ADAS வசதிகள்

ஹூண்டாய் பேயான் காரில் ஸ்மார்ட்சென்ஸ் லெவல் 2 ப்ரோ ஏடிஏஎஸ் (SmartSense Level 2 Pro ADAS) தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதில் மொத்தம் 23 ஓட்டுனர் உதவி வசதிகள் இடம்பெற்றுள்ளன. மூன்று ரேடார்கள் மற்றும் 12 பார்க்கிங் சென்சார்கள் இணைந்து செயல்படும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முன்புற மோதல் எச்சரிக்கை, கார் மற்றும் பாதசாரிகளுடன் மோதுவதைத் தவிர்க்க உதவும் தொழில்நுட்பம், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் எச்சரிக்கை, சாலை சந்திப்புகளில் போக்குவரத்து எச்சரிக்கை ஆகியவை அடங்கும். மேலும், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் ஃபாலோயிங் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட், ஓட்டுநரின் கவனத்தை கண்காணிக்கும் வசதி, பாதுகாப்பான வெளியேற்ற எச்சரிக்கை மற்றும் ஹைவே டிரைவிங் அசிஸ்ட் போன்ற தொழில்நுட்பங்களும் வழங்கப்படுகின்றன.

Also Read

எஞ்சின் விபரம்

ஹூண்டாய் பேயான் காரில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும் 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் பேயான் காரின் விலை விவரங்கள் அக்டோபர் 26ம் தேதி அறிமுகத்தின்போது வெளியிடப்பட உள்ளது. தற்போது ரூ.11,000 தொகையில் புக்கிங் ஏற்கப்படுகிறது.

Article Published On: Thursday, October 22, 2026, 10:35 [IST]
English summary
Hyundai bayon safety features 23 adas six airbags india launch
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out