மாருதிய தண்ணி குடிக்க வைக்க ஹூண்டாய் வெளியிடும் புதிய எஸ்யூவி இது தான்.. என்ன கார்னு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து அடுத்தாக ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் ஒரு கார் பேயான் (Bayon) சப்-காம்பேக்ட் எஸ்யூவி. Bc4i என்ற குறியீட்டுப் பெயரில் இந்தப் புதிய எஸ்யூவி காரை உருவாக்கி வருகிறது ஹூண்டாய். ஏற்கனவே சர்வதேச அளவில் பேயான் கார் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் ஹூண்டாய் மறுவடிவமைப்பு செய்து வருவதாகத் தெரிகிறது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அடுத்த சில மாதங்களில் இந்தப் புதிய எஸ்யூவியை ஹூண்டாய் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டபோது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது பேயான். இந்தப் புதிய ஸ்பைஷாட் புகைப்படங்களின் மூலம் பேயான் கார் குறித்து இன்னும் சில தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Hyundai Bayon

ஸ்பைஷாட்களில் சிக்கிய பேயான் காரில் மிகவும் ஸ்லீக்கான முகப்பு விளக்குள் மற்றும் பின்பக்க விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. தற்போதைய வென்யூ காரில் இருக்கும் விளக்குகளின் டிசைனை ஒற்றிருப்பது போலவும் பேயானில் தெரியும் விளக்குகள் இருக்கின்றன. இதனால் வென்யூ மற்றும் பேயான் இடையே சில டிசைன் ஒற்றுமைகளை நாம் பார்க்க முடியும் என்று தெரிகிறது.

ஒட்டுமொத்த வடிவமைப்பானது சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பேயான் காரில் இருந்து பெரிதாக மாறாததைப் போலவே இருக்கிறது. எனவே அடிப்படையில் இருந்து புதிய காரை ஹூண்டாய் உருவாக்கவில்லை. சர்வதேச அளவில் விற்பனை செய்யும் காரை சில புதிய மாற்றங்களுடன் மட்டும் நாம் எதிர்பார்க்கலாம்.

Hyundai Bayon

முன்பக்க பம்பர் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ரேடார் சென்சார்கள் இருப்பது தெரிகிறது. அதேபோலவே பின்பக்கமும் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், பார்க்கிங் கேமராவும் இடம்பெற்றிருக்கிறது. இதனால் ADAS வசதியை வெளியீட்டில் இருந்தே பேயான் காரில் ஹூண்டாய் கொடுக்கலாம் எனத் தெரிகிறது. 360 டிகிரி கேமரா இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அதனை ஹூண்டாய் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியா மட்டுமின்றி தென்கொரியாவிலும் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை ஹூண்டாய் சோதனை செய்து வருகிறது. அந்நாட்டிலும் அப்படி சோதனை செய்யப்பட்டபோது படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் காரின் பின்பக்க சீட்கள் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் பார்க்கும் போது, உட்புறம் ப்ரீமியமானதாகவும் ஸ்போர்ட்டியான ஒன்றாகவும் இருக்கிறது. இதனால் பேயான் N லைன் மாடலையும் ஹூண்டாய் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியில் கொடுப்பதற்காகவே புதிதாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றை உருவாக்கி வருகிறது ஹூண்டாய். வென்யூவுடன், வென்யூவிற்குப் போட்டியாகவே பேயான் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வென்யூவில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்து வெளியாகவிருக்கும் பேயான் எஸ்யூவியில் புதிதாக உருவாக்கப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் சேர்த்து, மற்ற இன்ஜின் தேர்வுகளும் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. கீழ்நிலை வேரியன்ட்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும், மேல் நிலை வேரியன்ட்களில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் ஹூண்டாய் கொடுக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், புதிய பேயான் எஸ்யூவியை, இந்தியாவில் ஹூண்டாய் ஏற்கனவே விற்பனை செய்து வரும் எக்ஸ்டர் மற்றும் வென்யூ ஆகியவற்றுக்கு இடைப்பட்டு 8 லட்சம் ரூபாயை ஒட்டிய தொடக்க விலையில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினையும் அடிப்படை வேரியன்ட்களில் ஹூண்டாய் கொடுக்க வேண்டிய தேவை இருக்கும்.

இந்த நிலையில் நான்கு இன்ஜின் தேர்வுகளையும் பேயானில் ஹூண்டாய் கொடுக்குமா அல்லது ஏதாவது ஒரு இன்ஜின் தேர்வு கொடுக்கப்படாதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாவதைத் தொடர்ந்து பேயான் எஸ்யூவியில் டீசல் இன்ஜினை ஹூண்டாய் நிறுத்துமா? அல்லது அதனையும் சேர்த்து நான்கு எரிபொருள் இன்ஜின் தேர்வுகளுடன் பேயான் வெளியாகுமா? சில மாதங்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேயான் கிராஸ்ஓவர் எஸ்யூவி என்ற கோட்டாவிலேயே இந்தியாவில் வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது கிராஸ்ஓவர் எஸ்யூவியாக மாருதி ஃபிராங்க்ஸ் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. அதன் ரீபேட்ஜ் வெர்ஷனாக டொயோட்டா டெய்ஸரும் விற்பனையில் இருக்கிறது. இந்த ஃபிராங்க்ஸுக்குப் போட்டியாகவே புதிய பேயானை ஹூண்டாய் களமிறக்குகிறது.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், கூடுதல் அம்சங்கள் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயின் என பேயானில் நாம் எதிர்பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எஸ்யூவி என்று வரும் போது ஹூண்டாய் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை இதுவரை பூர்த்தி செய்தே இறுக்கிறது. கிரெட்டா மற்றும் வென்யூவிற்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. பேயான் வாடிக்கையாளர்களைக் கவருமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Article Published On: Tuesday, June 9, 2026, 9:06 [IST]
English summary
Hyundai bayon spied testing in india whats new in this suv to be known
மேலும்... #hyundai #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out