நாளை மறுதினம் அறிமுகமாகிறது ஹூண்டாய் பேயான் எஸ்யூவி... புதிய தகவல்கள் கசிந்தன!

புதிய எஸ்யூவி வாங்க இருப்போர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பேயான் எஸ்யூவி வரும் அக்டோபர் 26ந் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அவற்றில் இடம்பெறவுள்ள வசதிகள் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

புதிய ஹூண்டாய் பேயான் காரில் HX2, HX3, HX3+, HX5, HX6, HX8, HX10 என மொத்தம் 7 வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிப்படை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை வசதிகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கும். குறிப்பாக, சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட், பெரிய டிஜிட்டல் திரைகள், ஏஐ தொழில்நுட்பம் என பல அம்சங்கள் கவனத்தை பெறுகின்றன.

Hyundai Bayon

வேரியண்ட்டுகளும், வசதிகளும்

புதிய பேயான் காரின் அடிப்படை HX2 வேரியண்ட்டில் 16 அங்குல ஸ்டீல் வீல்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 4.2 அங்குல டிஜிட்டல் திரை, மேனுவல் ஏசி மற்றும் பின்புற ஏசி வென்ட்டுகள் இடம்பெறலாம். நான்கு கதவுகளிலும் பவர் விண்டோஸ், டைப்-சி சார்ஜிங் வசதிகளும் வழங்கப்படலாம். ஆனால், இந்த வேரியண்ட்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்காது எனத் தெரிகிறது.

Also Read

அடுத்ததாக HX3 வேரியண்ட்டில் 10.25 அங்குல தொடுதிரை, ஆறு ஸ்பீக்கர்கள், ரியர் வியூ கேமரா, ஸ்மார்ட் கீ மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகள் கிடைக்கலாம். HX3+ வேரியண்ட்டில் இவற்றுடன் சன்ரூஃப், ரூஃப் ரெயில்கள் மற்றும் 17 அங்குல வீல்கள் கூடுதலாக இடம்பெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆரம்ப வேரியண்ட்டுகளிலேயே பல அத்தியாவசிய வசதிகளை வழங்க ஹூண்டாய் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

Hyundai Bayon

பனோரமிக் சன்ரூஃப்

HX5 வேரியண்ட்டில் முதன்முறையாக ஐவிடி (iVT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்கலாம். மேலும், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், தானியங்கி ஹெட்லைட்டுகள் மற்றும் டிரைவ் மோடுகள் போன்ற வசதிகளும் இடம்பெறலாம். நகரப் போக்குவரத்தில் அடிக்கடி கியர் மாற்றுவதைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு இந்த வேரியண்ட் முக்கியமான தேர்வாக இருக்கும்.

HX6 வேரியண்ட்டில் பனோரமிக் சன்ரூஃப், இரட்டை எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம், முன்புற ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின்புற வைப்பர், வாஷர் வசதிகள் கிடைக்கும் என தெரிகிறது. இதனால், சன்ரூஃப் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை விரும்புபவர்கள் இந்த வேரியண்ட்டைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

Also Read

முக்கிய அம்சங்கள்

HX8 வேரியண்ட்டில் முன்புறத்தில் வென்டிலேட்டட் சீட்டுகள், ஓட்டுநருக்கான 8 வழிகளில் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இருக்கை அமைப்பு, முன்புற மற்றும் பக்கவாட்டுப் பார்க்கிங் சென்சார்கள், பின்புற டிஸ்க் பிரேக்குகள், டேஷ்கேம் ஆகிய வசதிகள் இடம்பெறலாம். பின்புற இருக்கைகளை 60:40 விகிதத்தில் மடிக்கும் வசதியும் கிடைக்கலாம். நீண்ட தூரப் பயணங்களில் வசதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு இந்த வேரியண்ட் ஏற்றதாக இருக்கும்.

விலை உயர்ந்த HX10 என்ற வேரியண்ட்டில் இரண்டு 12.3 அங்குல திரைகள், போஸ் ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர் மற்றும் ஏஐ அடிப்படையிலான குரல் உதவியாளர் வசதிகள் இடம்பெறும் என தெரிகிறது. பெர்ப்ளெக்ஸிட்டி மற்றும் சவுண்ட்ஹவுண்ட் ஏஐ தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், லெவல் 2 அடாஸ் (ADAS) ஓட்டுநர் உதவி வசதிகளும் டாப் வேரியண்ட்டில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Hyundai Bayon

எஞ்சின் விபரம்

ஹூண்டாய் பேயான் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட உள்ளது. இது 115 பிஎஸ் பவரையும் மற்றும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. HX2, HX3, HX3+ ஆகிய வேரியண்ட்டுகள் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர்களில் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட வசதிகள் இடம்பெறலாம். அனைத்து வேரியண்ட்டுகளிலும் 35-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என ஹூண்டாய் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த காருக்கு ஏற்கனவே புக்கிங் துவங்கப்பட்டுவிட்ட நிலையில், ரூ.9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Car Duniya

Article Published On: Saturday, October 24, 2026, 15:00 [IST]
English summary
Hyundai bayon suv variants features details leaked ahead india launch
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X