புதிய ஹூண்டாய் பேயான்: வேரியண்ட் வாரியாக வசதிகள் மற்றும் விலை விபரம்!

இந்தியாவில் எஸ்யூவி வாங்க திட்டமிடுபவர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. குறைவான விலையில் நல்ல வசதிகள் கொண்ட கார் வேண்டும் என்பதுடன், பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஓட்டுவதற்கான எளிமை ஆகியவற்றுக்கும் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளுடன் ஹூண்டாய் பேயான் கார் வந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன.

புதிய பேயான் கார் HX2, HX3, HX3+, HX5, HX6, HX8 மற்றும் HX10 என மொத்தம் 7 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்தக் காரில் அடிப்படை வசதிகள் முதல் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் தொழில்நுட்பங்கள் வரை பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் இடையிலான விலை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு, நமக்குத் தேவையான வசதிகளுக்கு ஏற்ப தேர்வு செய்வது கூடுதல் செலவைத் தவிர்க்க உதவும். எந்த வேரியண்ட்டில் என்னென்ன வசதிகள் கிடைக்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

Hyundai Bayon

ஹூண்டாய் பேயான் HX2

விலை குறைவான ஹூண்டாய் பேயான் காரின் HX2 வேரியண்ட்டிற்கு ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 115 எச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இடம்பெறுகிறது. எல்இடி விளக்குகள், 16 அங்குல வீல்கள், மேனுவல் ஏசி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் கண்காணிப்பு மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் இதில் கிடைக்கின்றன. அடிப்படை வசதிகளுடன் பட்ஜெட்டுக்குள் எஸ்யூவி வாங்க விரும்புபவர்களுக்கு இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.

Also Read

ஹூண்டாய் பேயான் HX3

இந்த HX3 வேரியண்ட்டிற்கு ரூ.10.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் HX2 வேரியண்ட்டின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தொடர்கின்றன. கூடுதலாக, 10.25 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஆறு ஸ்பீக்கர்கள், பின்புற கேமரா, ஸ்மார்ட் கீ மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகள் இடம்பெறுகின்றன. கைப்பேசியை இணைத்து வழிகாட்டி வரைபடம் பயன்படுத்துவது, இசையைக் கேட்பது போன்ற வசதிகளை விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Hyundai Bayon

ஹூண்டாய் பேயான் HX3+

ஹூண்டாய் பேயான் HX3+ வேரியண்ட்டிற்கு ரூ.11.80 லட்சமாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. HX3 வேரியண்ட்டில் உள்ள வசதிகளுடன் எலெக்ட்ரிக் கன்ட்ரோல் வசதியுடன் சன்ரூஃப், ரூஃப் ரெயில்கள் மற்றும் 17 அங்குல ஸ்டைல்டு ஸ்டீல் வீல்கள் கிடைக்கின்றன. காரின் தோற்றத்திலும் பயண அனுபவத்திலும் கூடுதல் கவர்ச்சியை விரும்புபவர்கள் இந்த வேரியண்ட்டை பரிசீலிக்கலாம். இருப்பினும், சன்ரூஃப் தவிர கூடுதல் வசதிகள் அவசியமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஹூண்டாய் பேயான் HX5

இந்த HX5 வேரியண்ட்டில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளும் கிடைக்கின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுக்கு ரூ.12.45 லட்சமாகவும், சிவிடி ஆட்டோமேட்டிக் தேர்வுக்கு ரூ.13.85 லட்சமாகவும் எக்ஸ்ஷோரூம் விலை உள்ளது. இரண்டிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறுகிறது. ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி ஹெட்லைட்டுகள் மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் கிடைக்கின்றன. சிவிடி தேர்வில் டிரைவிங் மோடுகள் மற்றும் பேடில் ஷிஃப்டர்களும் இடம்பெறுகின்றன. நகரப் போக்குவரத்தில் அடிக்கடி கிளட்ச் இயக்குவதைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு ஆட்டோமேட்டிக் தேர்வு பயனுள்ளதாக இருக்கும்.

Hyundai Bayon

ஹூண்டாய் பேயான் HX6

ஹூண்டாய் பேயான் HX6 வேரியண்ட்டின் மேனுவல் தேர்வுக்கு ரூ.13.57 லட்சமாகவும், சிவிடி ஆட்டோமேட்டிக் தேர்வுக்கு ரூ.14.97 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. பனோரமிக் சன்ரூஃப், 17 அங்குல அலாய் வீல்கள், டூயல் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், லெதர் கவருடன் ஸ்டீயரிங் வீல், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் ஸ்லைடிங் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை முக்கிய வசதிகளாகும். பிரீமியம் தோற்றத்தையும் கூடுதல் கேபின் வசதிகளையும் விரும்புபவர்களுக்கு இது ஏற்ற தேர்வாக இருக்கும்.

Also Read

ஹூண்டாய் பேயான் HX8

பேயான் காரின் HX8 வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுக்கு ரூ.15.10 லட்சமாகவும், சிவிடி ஆட்டோமேட்டிக் தேர்வுக்கு ரூ.16.54 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறுகிறது. வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், எட்டு விதமாக மின்சாரத்தில் மாற்றியமைக்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை, லெதரெட் இருக்கைகள், டேஷ்கேம், 360 டிகிரி கேமரா மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கின்றன. நீண்ட தூரப் பயணங்களில் இருக்கை வசதி, வாகனத்தை நிறுத்துவதற்கான கூடுதல் உதவி மற்றும் பிரீமியம் அம்சங்களை விரும்பும் குடும்பங்களுக்கு இந்த வேரியன்ட் கவனிக்க வேண்டிய தேர்வாகும்.

ஹூண்டாய் பேயான் HX10 - டாப் வேரியன்ட்

ஹூண்டாய் பேயான் HX10 வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுக்கு ரூ.16.65 லட்சமாகவும், சிவிடி ஆட்டோமேட்டிக் தேர்வுக்கு ரூ.18 லட்சமாகவும் உள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை, எட்டு ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம், லெவல் 2 அடாஸ், பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை முக்கிய வசதிகளாகும். மேம்பட்ட ஓட்டுனர் உதவி தொழில்நுட்பங்கள், பிரீமியம் ஆடியோ மற்றும் டிஜிட்டல் வசதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.

எந்த வேரியண்ட்டை வாங்கலாம்?

குறைந்த பட்ஜெட்டில் அத்தியாவசிய வசதிகள் தேவைப்படுபவர்கள் HX2 வேரியண்ட்டை பரிசீலிக்கலாம். தொடுதிரை மற்றும் கைப்பேசி இணைப்பு வசதிகளுக்கு HX3, சன்ரூஃபுக்கு HX3+ ஏற்ற தேர்வுகளாக இருக்கும். நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்டுவதற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விரும்புபவர்கள் HX5 வேரியண்ட்டை தேர்வு செய்யலாம்.

பிரீமியம் தோற்றம் மற்றும் கேபின் வசதிகளுக்கு HX6 வேரியண்ட்டும், நீண்ட தூர பயணங்களுக்கும், சிறப்பான பயண அனுபவங்களுக்கும் HX8, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு HX10 ஆகியவற்றைப் பரிசீலிக்கலாம். வாங்குவதற்கு முன்பு காரை டெஸ்ட் டிரைவ் செய்து, உங்களுக்கு தோதான பட்ஜெட், தேவைப்படும் வசதிகளுக்கு ஏற்ப வேரியண்ட்டை தேர்வு செய்வது நல்லது.

Article Published On: Wednesday, October 28, 2026, 11:35 [IST]
English summary
Hyundai bayon variant wise price features engine gearbox
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X