ஒரே மாதத்தில் கஸ்டமர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் குறைஞ்சிடுச்சு! ஹூண்டாய்க்கு பொங்கல் பண்டிகை கைக்கொடுக்குமா?
ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம் கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் 42,416 கார்களை விற்பனை செய்துள்ளது. இத்தனை ஆயிரம் கார்களை விற்பனை செய்து இருந்தாலும், இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஹூண்டாய் தனது வழக்கமான 2வது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. ஏனெனில், மஹிந்திரா (Mahindra) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்கள் அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளன.
ஹூண்டாய், இந்திய நாட்டின் நான்காவது பெரிய கார் தயாரிப்பாளராக கடந்த டிசம்பர் மாதத்தில் 10.5% சந்தைப் பங்கை உறுதி செய்துள்ளது. இருப்பினும், 2024 டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட 42,208 ஹூண்டாய் கார்கள் உடன் ஒப்பிடுகையில் விற்பனையில் பெரியதாக வளர்ச்சி இல்லை. கடந்த 2025ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த 50,340 கார்கள் உடன் ஒப்பிடுகையில் 7,924 ஹூண்டாய் கார்கள் கடந்த டிசம்பரில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாத ஹூண்டாய் கார்கள் விற்பனைப் பட்டியலில் கிரெட்டா (Creta) மற்றும் கிரெட்டா இவி 13,154 யூனிட்கள் விற்பனை உடன் முதலிடம் பிடித்துள்ளன. இது 12,608 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2024 டிசம்பரை காட்டிலும் 4% அதிகம் என்றாலும், 17,344 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2025 நவம்பர் மாதத்தை காட்டிலும் 24% சரிவாகும்.
ஹூண்டாய் வென்யூ 10,322 யூனிட்கள் விற்பனை உடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதன் விற்பனை 2024 டிசம்பரை விட 1% உயர்ந்தாலும், 2025 நவம்பரை விட 11% குறைந்துள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வென்யூ காம்பாக்ட் எஸ்யூவி 55,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. புதிய அம்சங்கள் வென்யூ வாடிக்கையாளர் ஆர்வத்தை தக்கவைத்துள்ளன.

இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள எக்ஸ்டர் (Exter) விற்பனை கடந்த மாதத்தில் 5,612 யூனிட்களுடன் 2024 டிசம்பரை விட 6% அதிகரித்தாலும், 2025 நவம்பரை விட 2% சரிந்துள்ளது. ஹூண்டாய் அவ்ரா (Aura) 4,925 யூனிட்கள் விற்பனை உடன் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக 4வது இடத்தில் உள்ளது.
3,852 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட 2024 டிசம்பர் மாதத்தை விட இது சுமார் 28% குறைவு என்பது மட்டுமின்றி, 5,731 அவ்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2025 நவம்பர் மாதத்தை விடவும் 14% குறைவாகும். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS) மற்றும் ஐ20 (i20) ஆகிய ஹாட்ச்பேக் கார்கள் இந்த வரிசையில் இதற்கடுத்த நிலையில் உள்ளன.

இதில், கிராண்ட் ஐ10 நியோஸ் கடந்த மாதத்தில் 4,010 யூனிட்களும், ஐ20 3,339 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் அல்கசார் (Alcazar) 579 யூனிட்கள் விற்பனை உடன் 7வது இடத்திலும், வெர்னா (Verna) 406 யூனிட்கள் விற்பனை உடன் 8வது இடத்திலும் உள்ளன. இவை இரண்டும், மேலே கண்ட அவ்ரா, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 கார்களை போன்று விற்பனையில் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
| No | Hyundai | Dec-25 | Dec-24 | Diff | Growth % YoY | % Share Dec 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Creta / EV | 13,154 | 12,608 | 546 | 4.33 | 31.01 |
| 2 | Venue | 10,322 | 10,265 | 57 | 0.56 | 24.34 |
| 3 | Exter | 5,612 | 5,270 | 342 | 6.49 | 13.23 |
| 4 | Aura | 4,925 | 3,852 | 1,073 | 27.86 | 11.61 |
| 5 | Grand i10 | 4,010 | 4,489 | -479 | -10.67 | 9.45 |
| 6 | i20 | 3,339 | 3,453 | -114 | -3.30 | 7.87 |
| 7 | Alcazar | 579 | 1,342 | -763 | -56.86 | 1.37 |
| 8 | Verna | 406 | 872 | -466 | -53.44 | 0.96 |
| 9 | IONIQ 5 | 69 | 24 | 45 | 187.50 | 0.16 |
| 10 | Tucson | 0 | 33 | -33 | -100.00 | 0.00 |
| Total | 42,416 | 42,208 | 208 | 0.49 | 100.00 | |
அதேசமயம், அயோனிக் 5 (IONIQ 5) என்கிற ஹூண்டாயின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கடந்த மாதத்தில் 69 யூனிட்கள் விற்பனை உடன் சுமார் 188% பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதுவே, 2024 டிசம்பர் மற்றும் 2025 நவம்பர் மாதங்களில் தலா 24 அயோனிக் 5 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. 2025 டிசம்பர் மாதத்தில் பூஜ்ஜிய விற்பனையை பதிவு செய்துள்ள டக்ஸன் (Tucson) 2024 டிசம்பரில் 33 யூனிட்களும், 2025 நவம்பரில் 6 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
| No | Hyundai | Dec-25 | Nov-25 | Diff | Growth % MoM | % Share Nov 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Creta / EV | 13,154 | 17,344 | -4,190 | -24.16 | 34.45 |
| 2 | Venue | 10,322 | 11,645 | -1,323 | -11.36 | 23.13 |
| 3 | Exter | 5,612 | 5,705 | -93 | -1.63 | 11.33 |
| 4 | Aura | 4,925 | 5,731 | -806 | -14.06 | 11.38 |
| 5 | Grand i10 | 4,010 | 4,559 | -549 | -12.04 | 9.06 |
| 6 | i20 | 3,339 | 3,777 | -438 | -11.60 | 7.50 |
| 7 | Alcazar | 579 | 840 | -261 | -31.07 | 1.67 |
| 8 | Verna | 406 | 709 | -303 | -42.74 | 1.41 |
| 9 | IONIQ 5 | 69 | 24 | 45 | 187.50 | 0.05 |
| 10 | Tucson | 0 | 6 | -6 | -100.00 | 0.01 |
| Total | 42,416 | 50,340 | -7,924 | -15.74 | 100.00 | |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாயின் விற்பனை தற்போதைக்கு கிரெட்டா மற்றும் வென்யூ கார்களையே பெரிதும் நம்பியுள்ளது. இவற்றை விடவும் அளவில் சிறியதான எக்ஸ்டர் காரின் விற்பனை பெரியதாக ஏற்றம் இறக்கமின்றி சமநிலையில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த 2026ஆம் ஆண்டில் பல புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட், பேயோன் (Bayon) கிராஸ்ஓவர், ஐ20 ஃபேஸ்லிஃப்ட், எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட், புதிய டக்ஸன் மற்றும் ஒரு புதிய காம்பாக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications









